| துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி சிபிஎம் கண்டனம் |
சென்னை, செப். 10- கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் பலியாகியுள்ள சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் திங்களன்று மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ., பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இவர்களை கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர். இம்மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் மாண்டுபோன செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக் கிறது வேதனையளிக்கிறது. காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டு நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் தங்களு டைய போராட்டத்தை கைவிட்டு சுமுகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டுமெனவும், அரசும் அமை தியை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. |
Monday, September 10, 2012
துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி சிபிஎம் கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
