Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, January 24, 2013

டீசல் விலை நிர்ணயத்தை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments
புதுச்சேரி,ஜன-24
டீசல் விலை நிர்ணயத்தை  தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். ரயில் கட்டணத்தை உயர்த்துவதை கைவிட வேண்டும்.விலை நிர்ணய உரிமையை தொடர்ந்து மத்திய அரசின் கட்டுபாட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,முருகையன்,சரவணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் தட்டிகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.
Read more...
Wednesday, January 23, 2013

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலிடு அனுமதிப்பதை எதிர்த்து

0 comments
புதுச்சேரி,ஜன-23
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலிடு அனுமதிப்பதை எதிர்த்து 

புதுச்சேரியில் திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள 4 அரைகோடி  சிறுவனிகர்களை பாதிக்ககூடிய சில்லரை வனிகத்தில் அன்னிய முதலிடு அனுமதிப்பதை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி இக்கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் திருக்கனூரில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,அன்புமணி,ஆவணியப்பன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.கொம்யூன் குழு உறுப்பினர்கள் வடிவேல்,ராமமூர்த்தி,ஆனந்தன்,கருணாகரன்,மற்றும் சர்ககரை முகமது,அமர்நாத் உள்ளிட்ட திரளான வியாபாரிகள் கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.

இலாஸ்பேட்டை
இலாஸ்பேட்டை அய்யனார் கோவில்  முன்பு நடைபெற்ற தெருமுனை கருத்தரங்கத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகர செயலாளர் லெனின்துரை தலைi தாங்கினார்.கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு,பிரதேச செயற்குழு உறுப்பனர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட திரளான வியாபரிகள் இக்கருத்தரங்கத்தில் பங்கேற்றனர்.
படம் உள்ளது.   

Read more...
Monday, January 14, 2013

ரேஷன் கடைகளை மூடுவிழா நடத்தும் உங்கள் கையில் உங்கள் பணம் திட்டம்

0 comments
ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்குவோம் என்ற ரேஷன் கடைகளை மூடுவிழா நடத்தும் உங்கள் கையில்  உங்கள் பணம் என்ற மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிமுகம்படுத்தியுள்ள ஏழை மக்களை வஞ்சிக்கிர திட்டத்தை எதிர்த்தும்,இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் மக்களை சந்தித்து கையெழுத்து பெரும் இயக்கம் ஜனவரி 6 ல் துவங்கியது.புதுச்சேரி சட்டசபை எதிரே அமைந்துள்ள சுதேசி கொள்கையை தாம் வாழ்நாள் முழுவதும் சுவாசித்த செக்கிழுத்த செம்மல் வ.ஊ.சிதம்பரனார் பிள்ளையின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து இவ்வியக்கம் துங்கியது.
Read more...

புதுச்சேரி பெண்கள் ஆணையத்தை செயல்படுத்த கோரி

0 comments

 

புதுச்சேரி,ஜன-4
புதுச்சேரி பெண்கள் ஆணையத்தை செயல்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்கள் மீதான பாலியல் தொடர்பான குற்றங்களை விசாரித்திடும் வகையில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை பலபடுத்த வேண்டும்.பெண்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவது குறித்தான புகார்களை பதிவு செய்ய மருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் செயல்படாத மகளிர் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நடசேன்நகரில் உள்ள மகளிர் ஆணையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைi தாங்கினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் சுமதி,நிலவழகன்,கலிவரதன்,ராமசாமி,இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,முருகையன்,சரவணன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற கருத்தரங்கம்

0 comments


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சில்லரை வனிகத்தில் அன்னிய முதலீடு அனுமதித்தை எதிர்த்து பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பேசுகிறார்.அருகில் மாநிலக்குழு உறுப்பினர் மூசா,செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Read more...
Friday, January 11, 2013

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாலிக்கு கடுமையான தண்டனை வழங்ககோரி

0 comments
புதுச்சேரி,ஜன-10
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாலிக்கு கடுமையான தண்டனை வழங்ககோரி  திருபுவனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த பன்ரெண்டாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பேருந்து நடத்துனர் முத்து,மற்றும் அவனது கூட்டாலியான கல்லுhரி மாணவன் வெங்கடாச்சலபதி ஆகியோர் மீது கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்.காரைக்கால் ஆசிட் வீச்சால் பாதிக்கபட்ட வினோதினிக்கு மருத்துவ சிகிச்கைக்கான முழு செலவையும் அரசு வழங்க வேண்டும்.குற்றவாலிக்கு ஜாமினில் வராதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவி பாலியல் வன்கொடமைக்கு ஆளாக்கப்பட்டபோது  உரிய வழக்கு பதிவு செய்யாத திருபுவனை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
திருபுவனை கடை வீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் கருணாகரன்,வடிவேல்,தட்சணாமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
Read more...
Friday, January 4, 2013

ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கம் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் 2லட்சம் பேரிடம் கையொழுத்து வாங்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு .

0 comments
புதுச்சேரி,ஜன-2
ரேஷன் பொருட்களுக்கு  பதில் பணம் வழங்கம் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் 2லட்சம் பேரிடம் கையொழுத்து வாங்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் புதனன்று செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு,
கட்சியின் பிரதேச செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில்
நாட்டின் 18 மாநிலங்களில் 51 மாவட்டங்களில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தபட உள்ள உங்கள் கையில் உங்கள் பணம் திட்டம்  புதுச்சேரியிலும் அமல்படுத்தபடஉள்ளது.இத்திட்டம் ஏழைமக்களை  ஒட்ட ஒட்ட சுரண்டும் திட்டமாகும்.மலேரியா,எய்ட்ஸ் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை விட உணவு இன்மையால் இறந்தவர்களே அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது.ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் பட்டினி சாவுகளை தான் அதிகரிக்கும்.எனவே புதுச்சேரி என்.ஆர்.காங்கிர° அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும்.
இத்திட்டத்தை எதிர்த்து புதுச்சேரி பிரதேசத்தில் 2லட்சம் மக்களிடம் கையெழுத்து  வாங்கப்படும்.ஜனவரி 6 ஆம் தேதி சட்டமன்றம் அருகில் உள்ள வ.ஊ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து இந்த இயக்கம் துவங்க உள்ளது. இவ்வியக்கம் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது.
 
விவசாயிகளுக்கு நிவாரணம்

கடைமடை பகுதியான காரைக்காலில் காவேரிநீர் கிடைக்காததால் சம்பா குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மத்திய நிபுனர் குழுவை வரவழைத்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10ஆயிரமும்,விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரமும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

ஆர்ப்பாட்டம்

ஆசிட் வீச்சால் பாதிக்கபட்டுள்ள காரைக்காலை சேர்ந்த வினோதினிக்கு உரிய மருத்துவ சிகிச்சகைக்கான நிவாரணத்தை  வழங்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி மாநில முதல்வரை சி.பி.எம் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணனுடன் நானும் சென்று நேரில் வலியுறுத்தினோம்.அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் ரூ.1.5லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.இது வரவேற்க்கதக்கது.இருந்தாலும் அப்பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்.மேலும் இவ்வழக்கில் சம்பந்தபட்டுள்ள குற்றவாலியிடம் இருந்து வினோதினி குடும்பத்திற்கு மிரட்டல் வருகிறது.எனவே குற்றவாலிக்கு முன்ஜாமின் வழங்க கூடாது.எனவே இதனை வலியுறுத்தும் வகையில் மாநில பெண்கள் ஆணையம் முன்பு ஜனவரி 4ல் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதேப்போல் நீர்மேலன்மை சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றும் போது நான்கு பிராந்திய மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.இவ்வாறு பெருமாள் கூறினார்.உடன் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,முருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.
Read more...
Thursday, January 3, 2013

புதுச்சேரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக தண்டனை வழங்க வேண்டும்

0 comments
புதுச்சேரி ,ஜன-3

புதுச்சேரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு  சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக  தண்டனை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி திருபுவனை  அடுத்துள்ள கொத்தபுரிநத்தம் பகுதியை சேர்ந்த மாணவியை  மயக்கமருந்து கொடுத்து கடத்திசென்று, ஒன்றுக்கும் மேற்பட்டோர்கள் சேர்ந்து பாலியல் துண்புருத்தலில் ஈடுப்பட்டள்ளனர்.இதில் சம்பந்தப்பட்டுள்ள தனியார் பேருந்து நடத்துனர் முத்துகுமரன்,அவனது  கூட்டாலியான வெங்கடஜலபதி உள்ளிட்டவர்கள் மீது  வழக்கு பதிவு செய்து உடணடியாக கைது செய்ய வேண்டும்.மாணவி  காணாமல் பொனது குறித்து கவால்நிலையத்தில்  புகார் அளித்தும் ,அப்புகார் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்காத திருபுவனை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தெற்கு பிரிவு கன்கானிப்பாளர் ஆகியோரை  பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். பாலியல் துண்புறுத்தலில்  ஈடுபட்டவர்களுக்கு உடணடியாக தண்டனை கிடைக்கும் வகையில் புதுச்சேரி அரசு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணாசலை ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் நடந்த இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர்  எல்.கலிவரதன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் வி.சுமதி,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,மற்றும் முருகையன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளான பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com