Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, January 3, 2013

புதுச்சேரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக தண்டனை வழங்க வேண்டும்

0 comments
புதுச்சேரி ,ஜன-3

புதுச்சேரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு  சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக  தண்டனை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி திருபுவனை  அடுத்துள்ள கொத்தபுரிநத்தம் பகுதியை சேர்ந்த மாணவியை  மயக்கமருந்து கொடுத்து கடத்திசென்று, ஒன்றுக்கும் மேற்பட்டோர்கள் சேர்ந்து பாலியல் துண்புருத்தலில் ஈடுப்பட்டள்ளனர்.இதில் சம்பந்தப்பட்டுள்ள தனியார் பேருந்து நடத்துனர் முத்துகுமரன்,அவனது  கூட்டாலியான வெங்கடஜலபதி உள்ளிட்டவர்கள் மீது  வழக்கு பதிவு செய்து உடணடியாக கைது செய்ய வேண்டும்.மாணவி  காணாமல் பொனது குறித்து கவால்நிலையத்தில்  புகார் அளித்தும் ,அப்புகார் மீது எந்த நடவடிக்கையும்  எடுக்காத திருபுவனை காவல்நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் தெற்கு பிரிவு கன்கானிப்பாளர் ஆகியோரை  பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். பாலியல் துண்புறுத்தலில்  ஈடுபட்டவர்களுக்கு உடணடியாக தண்டனை கிடைக்கும் வகையில் புதுச்சேரி அரசு சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அண்ணாசலை ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பில் நடந்த இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர்  எல்.கலிவரதன் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் வி.சுமதி,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,மற்றும் முருகையன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளான பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com