Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, January 11, 2013

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாலிக்கு கடுமையான தண்டனை வழங்ககோரி

0 comments
புதுச்சேரி,ஜன-10
மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய குற்றவாலிக்கு கடுமையான தண்டனை வழங்ககோரி  திருபுவனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த பன்ரெண்டாம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பேருந்து நடத்துனர் முத்து,மற்றும் அவனது கூட்டாலியான கல்லுhரி மாணவன் வெங்கடாச்சலபதி ஆகியோர் மீது கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்.காரைக்கால் ஆசிட் வீச்சால் பாதிக்கபட்ட வினோதினிக்கு மருத்துவ சிகிச்கைக்கான முழு செலவையும் அரசு வழங்க வேண்டும்.குற்றவாலிக்கு ஜாமினில் வராதவாறு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவி பாலியல் வன்கொடமைக்கு ஆளாக்கப்பட்டபோது  உரிய வழக்கு பதிவு செய்யாத திருபுவனை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
திருபுவனை கடை வீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கொம்யூன் கமிட்டி உறுப்பினர்கள் கருணாகரன்,வடிவேல்,தட்சணாமூர்த்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com