புதுச்சேரி,ஜன-4
புதுச்சேரி பெண்கள் ஆணையத்தை செயல்படுத்த கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெண்கள் மீதான பாலியல் தொடர்பான குற்றங்களை விசாரித்திடும் வகையில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை பலபடுத்த வேண்டும்.பெண்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவது குறித்தான புகார்களை பதிவு செய்ய மருக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரியில் செயல்படாத மகளிர் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நடசேன்நகரில் உள்ள மகளிர் ஆணையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைi தாங்கினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் சுமதி,நிலவழகன்,கலிவரதன்,ராமசாமி,இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,முருகையன்,சரவணன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.