Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, January 24, 2013

டீசல் விலை நிர்ணயத்தை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments
புதுச்சேரி,ஜன-24
டீசல் விலை நிர்ணயத்தை  தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும். ரயில் கட்டணத்தை உயர்த்துவதை கைவிட வேண்டும்.விலை நிர்ணய உரிமையை தொடர்ந்து மத்திய அரசின் கட்டுபாட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையாற்றினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,முருகையன்,சரவணன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் தட்டிகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com