| புதுச்சேரி,ஜன-2 ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கம் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் 2லட்சம் பேரிடம் கையொழுத்து வாங்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் புதனன்று செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு, கட்சியின் பிரதேச செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நாட்டின் 18 மாநிலங்களில் 51 மாவட்டங்களில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தபட உள்ள உங்கள் கையில் உங்கள் பணம் திட்டம் புதுச்சேரியிலும் அமல்படுத்தபடஉள்ளது.இத்திட்டம் ஏழைமக்களை ஒட்ட ஒட்ட சுரண்டும் திட்டமாகும்.மலேரியா,எய்ட்ஸ் போன்ற கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை விட உணவு இன்மையால் இறந்தவர்களே அதிகம் என்று புள்ளி விவரம் கூறுகிறது.ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கும் திட்டம் பட்டினி சாவுகளை தான் அதிகரிக்கும்.எனவே புதுச்சேரி என்.ஆர்.காங்கிர° அரசு இத்திட்டத்தை கைவிட வேண்டும். இத்திட்டத்தை எதிர்த்து புதுச்சேரி பிரதேசத்தில் 2லட்சம் மக்களிடம் கையெழுத்து வாங்கப்படும்.ஜனவரி 6 ஆம் தேதி சட்டமன்றம் அருகில் உள்ள வ.ஊ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து இந்த இயக்கம் துவங்க உள்ளது. இவ்வியக்கம் ஜனவரி 31 வரை நடைபெறுகிறது. விவசாயிகளுக்கு நிவாரணம் கடைமடை பகுதியான காரைக்காலில் காவேரிநீர் கிடைக்காததால் சம்பா குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.எனவே மத்திய நிபுனர் குழுவை வரவழைத்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10ஆயிரமும்,விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரமும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் ஆசிட் வீச்சால் பாதிக்கபட்டுள்ள காரைக்காலை சேர்ந்த வினோதினிக்கு உரிய மருத்துவ சிகிச்சகைக்கான நிவாரணத்தை வழங்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி மாநில முதல்வரை சி.பி.எம் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணனுடன் நானும் சென்று நேரில் வலியுறுத்தினோம்.அதன் ஒரு பகுதியாகவே முதல்வர் ரூ.1.5லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.இது வரவேற்க்கதக்கது.இருந்தாலும் அப்பெண்ணின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்.மேலும் இவ்வழக்கில் சம்பந்தபட்டுள்ள குற்றவாலியிடம் இருந்து வினோதினி குடும்பத்திற்கு மிரட்டல் வருகிறது.எனவே குற்றவாலிக்கு முன்ஜாமின் வழங்க கூடாது.எனவே இதனை வலியுறுத்தும் வகையில் மாநில பெண்கள் ஆணையம் முன்பு ஜனவரி 4ல் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதேப்போல் நீர்மேலன்மை சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றும் போது நான்கு பிராந்திய மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.இவ்வாறு பெருமாள் கூறினார்.உடன் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,முருகன் உள்ளிட்டோர் இருந்தனர். |
Friday, January 4, 2013
ரேஷன் பொருட்களுக்கு பதில் பணம் வழங்கம் திட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் 2லட்சம் பேரிடம் கையொழுத்து வாங்க மார்க்சிஸ்ட் கட்சி முடிவு .
Subscribe to:
Post Comments (Atom)
