
புதுச்சேரி ஜூலை 30
ஜூலை 30 தியாகிகள் தினத்தை முன்னிட்டு இந்திய தொழிற் சங்க மையம் சிஜடியு சார்பில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது.
எட்டு மணிநேர வேலை உரிமையை அமல் படுத்தக்கோரி 1936 ஆம் ஆண்டு ஜூலை 30ல் போராட்டம் நடத்திய புதுச்சேரி சவானா ஆலை (சுதேசி பஞ்சாலை) தொழிலாளர்களில் 12 தொழிலாளர்களை பிரேஞ்சு ராணுவம் சுட்டு கொன்றது.மறைந்த அத்தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சங்கங்கள் சார்பில் ஜூலை 30 தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி கடலுhர் சாலையில் அமைந்துள்ள ஜூலை 30 தியாகிகள் உருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்சிக்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம்,நிலவழகன்,சிவக்குமார்,குணசேகரன்,சீனுவாசன்,ரவிச்சந்திரன்,கலியன்,சுமதி,நாராயணன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலையிலிருந்து ஊர்வலமாக வந்து தியாகிகள் சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.