Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, August 18, 2011

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையோடு கூடுதல் சுயாட்சி அதிகாரம் கோரி

0 comments


புதுச்சேரி ஆக 10

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையோடு கூடுதல் சுயாட்சி அதிகாரம் கோரி மார்க்சி°ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் நான்கு மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சே மீது ஜ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.வீடுகளை இழந்த 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களுக்கு அனுப்பிவைத்து புனர்வாழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போரட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி

புதுச்சேரி அண்ணாசாலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரகமிட்டி செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.உழவர் கரை நகர செயலாளர் லெனின்துரை முன்னிலை வகித்தார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள்.மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினகள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானேர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

பாகூர்

பாகூர் மேற்கு வீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பிரதேசக்குழு உறுப்பினர் த.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.வில்லியனூர் கமிட்டி செயலாளர் முருகையன் முன்னிலைவகித்தார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் பத்மநாபன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

மதகடிப்பட்டு

மதகடிப்பட்டு கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேசக்குழு உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன்,ராமசாமி,கொம்யூன் செயலாளர் உலகநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இதில் பிரதேசக்குழு,கொம்யூன்குழு உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.இதேப்போல் காரைக்காலில் நடந்த போராட்டத்திற்கு வட்டச்செயலாளர் வின்சென்ட் தலைமை தாங்கினார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com