Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, August 23, 2011

பாகூரில் கட்டுமான தொழிலாளர்கள் பேரணி - மாநாடு

0 comments








புதுச்சேரி ஆக 22

முறைச்சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி BONUS ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு அரசை வலியுறுத்தியுள்ளது.

சிஜடியு புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 2வது பிரதேச மாநாடு பாகூரில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். மாநாட்டு பிரதிநிதிகளை நிர்வாகி சேகர் வரவேற்றார்.முன்னதாக சங்கத்தின் கொடியை இனைசெயலாளர் ஜெசதீசன் ஏற்றிவைத்தார்.இம்மாநாட்டை சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள் துவக்கிவைத்து பேசினார்.சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி மாநாட்டை வாழ்த்தி பேசினார்.சங்கத்தின் வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் கலியன் சமர்பித்தார்.இருதியாக சிஜடியு தமிழ்மாநில தலைவர் ஆர்.சிங்காரவேல் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.மாநாட்டில் சிஜடியு நிர்வாகி சிவக்குமார்,சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,உள்ளிட்ட திரளான கட்டுமான தொழிலாளர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.முன்னதாக அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5ஆயிரம் சிங்காரவேல் அவர்களிடம் வழங்கப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய தலைவராக நிலவழகன்,பொதுச்செயலாளராக கலியன்,பொருளாளராக செல்வராசு உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மாணங்கள்

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,முறைச்சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பன்டிகையோட்டி ரூ.2ஆயிரம் போன° வழங்க வேண்டும்.கட்டுமான பொருட்களின் விலை உயர்வை மாநில அரசு கட்டுபடுத்த வேண்டும்.அத்திய வாசிய பண்டங்களின் விலைஉயர்வை மத்திய,மாநில அரசுகள் கட்டுபடுத்த வேண்டும்.தொழிலாளர் ஆலோசனை வாரியத்தில் சிஜடியு விற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்.விலைநிலங்களை பாதுகாக்க உரிய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 10ஆம் தேதி சட்டமன்றத்தை நோக்கி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com