
புதுச்சேரி ஆக 3
சிறப்புக்கூறு திட்ட நிதி முழுமையும் தலித்மக்களின் மேம்பாட்டிற்கே செலவு செய்திடக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலித் சிறப்புக்கூறு துணைத்திட்டநிதியை வேறுத்திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும்.2010-2011 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகையை தலித் மாணவர்களுக்கு உடணடியாக வழங்க வேண்டும்.வீடுகட்டும் மானியம் உள்ளிட்ட தலித் மக்கள் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.கடந்த 10ஆண்டுகளாக சிறப்புக்கூறு திட்ட நிதி அமலாக்கம் குறித்து புதுச்சேரி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை முன்பு நடந்த போராட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவைத்தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேசசெயலாளர் வி.பெருமாள்கண்டன உரையாற்றினார்.இப்போராட்டத்தில் முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் தலித்சுப்பையா, பொருளாளர் என்.கொளஞ்சியப்பன், கலிவரதன்- விதொச,முருகன்-சிஜடியு,நிலவழகன்,பத்மாநாபன்-விவசாயிகள் சங்கம்,சந்துரு-டிஒய்எப்ஜ,ஆனந்து,ரஞ்சித்-எ°எப்ஜ உட்பட வெகு ஜன இயக்கங்கிளின் தலைவர்கள் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இருதியாக துறையின் இயக்குநர் அன்பழகனை சந்தித்து தலைவர்கள் மனு அளித்தனர்.மனுவை பெற்று கொண்ட இயக்குநர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும். அதேப்போல் மற்றதிட்டங்களையும் விரைவில் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்.