Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, August 23, 2011

பிரதமரையும் உளளடக்கிய லோக்பால்

0 comments




புதுச்சேரி ஆக 19

பிரதமரையும் உளளடக்கிய லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு தாக்கல் செய்கின்ற லோக்பால் மசோதவில் பிரதமரையிம் விசாரணைக்கு உட்படுத்தும் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதபோராட்டம் நடத்திய அன்னாஹசாரேயை வலுகட்டாயமாக கைது செய்த மத்திய அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதியில் நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார்.சிஜடியு ஆட்டோ சங்ககவுரத்தலைவர் தா.முருகன்,மாவட்ட தலைவர் ராமசாமி,அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ஆனந்தராஜ்,பொதுச்செயலாளர் புகழேந்தி,அறிவியல் இயக்கத் தலைவர்கள் தட்சணாமூர்த்தி,ராமச்சந்திரன்,பிஎ°என்எல் ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் கொளஞ்சியப்பபன்,எல்ஜசி ஊழியர் சங்க தலைவர் ராம்ஜி,சிஜடியு நிர்வாகிகள் ராஜாங்கம், நிலவழகன்,சீனுவாசன்,குணசேகரன்,சிவக்குமார்,உள்ளிட்ட திரளான தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று ஊழலுக்கு எதிராகவும், மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.



புதுச்சேரி ஆக 19

முத்தியால்பேட்டையில் அடிப்படைபிரச்சனைகளை தீர்க்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

ஹிரங்கவிலாஸ் தோட்டத்தில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கவேண்டும்.உடனடியாக அப்பகுதியில் பொதுகழிவரை கட்டி கொடுக்கவேண்டும்.சின்னாத்தா அரசு பள்ளி மதில் சுவரை உயரபடுத்த வேண்டும்.மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள சாராயகடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெற்றது.

மணிகூண்டு எதிரில் நடந்த இக்கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் ரா.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் சீனுவாசன்,பிரதேசக்குழு உறுப்பினர் பிரபுராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சந்துரு,கமிட்டி உறுப்பினர் ரமேஷ்,உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

படம் உள்ளது



1. சிபிஎம் புதுச்சேரி உழவர்கரை நகரகமிட்டி சார்பில் சேகரிக்கப்பட்ட 36 தீக்கதிர் ஆண்டு சந்தாவும், 2 ஜந்தாண்டிற்கான சந்தா தொகையையும் சேர்த்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் இடம் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை வழங்கினார்.அருகில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கலிவரதன்,கமிட்டி உறுப்பினர்கள் நடராஜன்,சத்தியா,பா°கர் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.



Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com