
புதுச்சேரி ஆக 18
புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால்சிங் உரையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு கண்டன போராட்டம் நடைபெற்றது.
கருப்புபண பதுக்கள் பேர்வழி ஹசன்ஹலிக்கு போலி பாஸ்போர்ட் எடுக்க உதவிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளநர் இக்பால்சிங் சட்டசபையில் பட்ஜெட் உரையை வாசிப்பதை கண்டித்தும், இக்பால்சிங்கை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் சுனாமி குடியிருப்பு களை கட்டியதில் எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டில் சிபிஜ யால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் ராகேஷ்சந்திராவை உடனடியாக பதவி நீக்கம் செய்யக்கோரி மார்க்சி°ட் கட்சி சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
அண்ணாசிலை எதிரில் இருந்து துவங்கி சட்டமன்றத்தின் எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் தலைமை தாங்கினார்.சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன்,தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,முருகன்,கலிவரதன்,நிலவழகன்,உலகநாதன் இடைகமிட்டி செயலாளர்கள்,பிரதேசக்குழு உறுப்பினர்கள்,உள்ளிட்ட திரளான கட்சி உறுப்பினர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கம் மிட்டனர்.
முன்னதாக குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஆளுநர் இக்பால்சிங்,மாவட்ட ஆட்சியர் ஆகியோரது உருவபடங்களுடன் வாயில் கருப்பு துணிகட்டிகொண்டு சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாக வந்த போது சிபிஎம் தொன்டர்களிடம் இருந்து காவல் துறையினர் ஆளுநர்,ஆட்சியரின் உருவபடங்களை வலுகட்டாயமாக பிடுங்கினார்கள்.பிடுங்கிய படங்களை பத்திரமாக காவல்துறை வாகனத்தில் எடுத்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.