
புதுச்சேரி =ஆக 21
சிஜடியு ஸ்தாபக தலைவர்களுள் ஒருவரும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான எம்.கே.பாந்தே மறைவையொட்டி புதுச்சேரியில் இரங்கள் கூட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிஜடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,ஏஜடியுசி மாநில பொதுச்செயலாளர் அபிஷேகம்,டியுசிசி தலைவர் முத்து,யுடியுசி தலைவர் சம்பத்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் சி.எச்.பாலமோகனன்,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தலைவர் கொளஞ்சியப்பன்,எல்ஜசி ஊழியர் சங்க தலைவர் ராம்ஜி,மற்றும் சிஜடியு நிர்வாகிகள் நிலவழகன்,ராஜாங்கம்,சிவக்குமார்,பாபு உள்ளிட்ட திரளானோர் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு மறைந்த தலைவர் எம்.கே.பாந்தே அவர்களின் உருவபடத்திற்கு மலர்துhவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.