Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, March 25, 2013

CPI(M) Puducherry - பத்திரிகை செய்தி

0 comments

பத்திரிகை செய்தி

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் சட்டப்பேரவை உரை மாநில அரசின் திசையில்லாத கொள்கையை கொண்டதாக, மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையை அம்பலப்படுத்தியதாக உள்ளது. 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த முறையாவது முழுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் துணைநிலை ஆளுநரின் உரையில் திட்டக்குழு துணைத்தலைவருடன் நடத்தும் கலந்தாய்வு கூட்டம் இதுவரை நடைபெறாத காரணத்தால் இடைக்கால வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடுகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். மேலும் புதுச்சேரி சட்டப்பேரவை துவங்கி பொன்விழா ஆண்டை நிறைவு செய்கிற சூழலில் இடைக்கால பட்ஜெட் என்பது சட்டப்பேரவை வரலாற்றில் தவறான முன்னுதாரணமாகும். இதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

துணைநிலை ஆளுநர் உரையில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மாநில சுயாட்சிக்கும், மாநில வளர்ச்சிக்கும் எதிராக செயல்படுகிறது என்ற உண்மை குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அனுமதிக்கப்பட்ட திட்ட ஒதுக்கீட்டில் மத்திய அரசு அளிக்க வேண்டிய கொடையில் ரூ.126 கோடி வழங்கப்படவில்லை; நகர மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.41 கோடி வெட்டு வந்துள்ளது; 800 கோடி ரூபாய்க்கு திட்ட கருத்துரை வழங்கியும் உலக வங்கியிடமிருந்து நிதியுதவி கிடைக்கவில்லை போன்ற காரணத்தால் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே கடந்த பட்ஜெட்டிற்கான திட்ட செலவு நடந்துள்ளதாக குறிப்பிடுகிறது. இதன் மூலம் மத்திய காங்கிரஸ் அரசு மாற்றுக்கட்சி ஆட்சி என்ற தன்மையில் மாநில சுயாட்சிக்கும், வளர்ச்சிக்கும் எதிரான நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பது மீண்டும் நிருபணமாகிறது. என்றாலும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், நிதி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் எந்த ஆக்கப்பூர்வமான திட்டமும், கொள்கையும் ஆளுநர் உரையில் இல்லை.

மாநிலத்தின் பொருளாதாரம் உயர்வதர்கு நிலப்பாதுகாப்பு, விவசாய மற்றும் தொழில் வளர்ச்சிக்கான கொள்கைகள் குறித்து ஏதும் இடம்பெறவில்லை. மாநில அந்தஸ்து, உள்ளாட்சித் தேர்தல், உணவு பாதுகாப்பு, பஞ்சாலைத் தொழில்களை நவீனப்படுத்தி மாநிலத்தின் முதலீட்டு வருவாயை அதிகரிப்பது, வரிபாக்கியை வசூலிப்பது உள்ளிட்ட அம்சங்கள் துணைநிலை ஆளுநர் அறிக்கை வசதியாக மறந்துவிடுகிறது. LDC உள்ளிட்ட பல்வேறு அரசு காலிப்பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்குவது, செண்டாக் கல்வி உதவி, பென்சன், முதியோர் உதவி போன்ற மக்கள் நலத்திட்டங்கள் தடுமாற்றம் குறித்தும் ரூ.300 கோடி ரூபாய் அளவிற்கு மின்கட்டண உயர்த்தப்பட உள்ளது குறித்தும் ஆளுநர் அறிக்கை மௌனம் சாதிக்கிறது. சட்டப்பேரவை பொன்விழா குறித்தும் எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

மாநிலம் முன்னேற, மக்கள் வாழ்வாதாரம் உயர, மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கான மாற்றுக் கொள்கையை உருவாக்க வேண்டியது அவசர அவசியமாகும். ஆகவே, மாநிலத்தின் நிதிபாக்கியை ரத்து செய்து மாநில அந்தஸ்து பெற்றிட, மாநிலத்தின் பொருளாதாரம் உயர, வலுவான மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்தும், இடதுசாரி கட்சிகளுடன் இனைந்தும் நடத்தும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. மாநில மக்களும் இத்தகைய போராட்டங்களுடன் மாற்றுக் கொள்கைக்கு ஆதரவு தரவேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரியின் பிரதேச குழு கேட்டுக்கொள்கிறது.

இவண்

(வெ.பெருமாள்)
செயலாளர்
Read more...
Wednesday, March 20, 2013

உணவு, நிலம், வேலை உரிமைகளுக்காக போர் முழக்கம் தில்லியில் சிபிஎம் மாபெரும் பேரணி - மே மாதம் சிறை நிரப்பும் போர்

0 comments

பிரகாஷ் காரத் அறைகூவல்

புதுதில்லி, மார்ச் 19-உணவு, நிலம், வேலை, வீட்டு மனை உள்ளிட்ட முழக்கங்களை முன் வைத்து மே 15 முதல் 31 வரை நாடு முழு வதும் மத்திய -மாநில அரசு அலுவலகங் கள் முன்பும் ரேசன் கடைகள் முன்பும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் மறியல்-சிறை நிரப்பும் போரை நடத்துவீர் என தில்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக் கில் கூடியிருந்த மக்களிடையே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் “மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணம்” பிப்ரவரி 24 சனிக் கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கியது. நாட்டின் நான்கு முனை களிலிருந்தும் புறப்பட்ட பயணக்குழுக் கள் நாடு முழுவதும் பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் பயணம் செய்தபின் செவ்வாய்க்கிழமையன்று காலை புதுதில்லி, ராம்லீலா மைதானத் தில் மிகப்பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டத்தில் சங்கமித்தனர்.இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் பேசியதாவது:நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்தபின் இப்போது இங்கே பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை , எம்.ஏ.பேபி. கே. வரதராசன், மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர ராமன் ஆகியோர் அடங்கிய தெற்குப் பயணக்குழு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, கேரளம், தமிழகம், கர் நாடகம், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள் வழியாக மக்களைச் சந்தித்தபின் தில்லி வந்தது.

கிழக்குப் பயணக்குழு என் தலைமையில் கொல்கத்தாவிலிருந்தும், வடக்குப் பயணக்குழு பிருந்தாகாரத் தலைமையில் அமிர்தசரஸிலிருந்தும், மேற்குப் பயணக்குழு சீத்தாராம் யெச்சூரி தலைமையில் மும்பையிலிருந் தும் புறப்பட்டு தில்லி வந்தடைந்தது. பயணத்தின்போது, மக்கள் மத்தியில் மத்திய அரசின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளை எடுத்துக்கூறியும், இடதுசாரிக் கட்சிகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்தும், வர விருக்கும் காலங்களில் கட்சி நடத்தும் போராட்டங்களில் தங்களை முழுமை யாக இணைத்துக்கொள்ளுமாறும் மக்களிடையே அறைகூவல் விடுத் தோம்.பயணத்தின்போது நாசகர நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளைப் பின்பற்றுவதில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐ.மு. கூட்டணி அரசாங்கத்திற்கும் பல மாநி லங்களில் பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பன மக்கள் மத்தியில் விளக்கினோம்.காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற் கும் மாற்றாக இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள் மாற்றுக்கொள் கைகளை முன்வைத்துப் போராட முன் வரவேண்டும். இடதுசாரிக் கட்சி களைத் தவிர பல கட்சிகள் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மட்டும் இடதுசாரிக் கட்சி களுடன் வருகின்றன. தேர்தல் முடிந்த பின் மீண்டும் காங்கிரசோடு அல்லது பாஜகவோடு போய்ச் சேர்ந்து கொள் கின்றன. எனவே, அடிப்படையான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு பிரகாஷ்காரத் தன் உரையில் தெரிவித்தார். இதனை அடுத்து எஸ். ராமச்சந் திரன்பிள்ளை, பிருந்தாகாரத், சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., பிமன்பாசு, திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் ஆகி யோர் பயணம் சென்றபோது தங்க ளுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர்.

மாணிக் சர்க்கார்
மாணிக் சர்க்கார் உரையாற்றுகை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாற்றுக் கொள்கையை முன் வைத்து தேர்தலைச் சந்தித்ததால்தான் திரிபுராவில் மாபெரும் வெற்றியைப் பெற முடிந்தது என்று விளக்கினார்.
சிறைகளை நிரப்புவோம் நிறைவாகத் தொகுப்புரை வழங்கிய பிரகாஷ்காரத், போர் முழக்கப் பயணத் தின் போது முன்வைத்த கோரிக்கை களை மத்திய மாநில அரசுகள் நிறை வேற்ற வலியுறுத்தி, மே 15 முதல் 31 வரை ரேஷன்கடைகள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் முன்பு லட்சக்கணக் கான மக்களைத் திரட்டி மறியல் - சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறைகூவல் விடுத்தார். மேலும் இப்போராட்டத்தில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளும் தங் களை இணைத்துக் கொள்ள வேண் டும் என்றும் பிரகாஷ் காரத் கேட்டுக் கொண்டார். (ந.நி.)
Read more...
Tuesday, March 19, 2013

வன்கொடுமையை சட்டத்தை வளுபடுத்தக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் புதுச்சேரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

0 comments
புதுச்சேரி,மார்ச்-15
வன்கொடுமையை சட்டத்தை வளுபடுத்தக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் புதுச்சேரில்    கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

ஐபிசி சட்டத்தில் உள்ளதை விட குறைவான தண்டனை மட்டுமே உள்ள எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் -1989ல் சில பிரிவுகளை மேலும் கடுமையாக்க வேண்டும்.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு  செய்வதில் அலட்சியம் செய்வதை கைவிட வேண்டும்.வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.புதுச்சேரி,காரைக்கால் மாவட்ட எஸ்.சி,எஸ்.டி சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும்.சந்தை புதுக்குப்பத்தில் தலித் மக்களின் வீடுகள் மற்றும் உடமைகள் மீது தாக்குதலை நடத்தியவர்கள் பதிவு செய்யப்பட்ட வழக்கினை விரைந்து  நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் தலித்சுப்பையா தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் இராமசாமி,பொருளாளர் கொளஞ்சியப்பன்,அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராசன்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நிர்வாகிகள் தவமணி,கலிவரதன்,ராஜாங்கம்,முருகன்,மணிபாலன்,ராம்ஜி,ரமேஷ், பிரபுராஜ், உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

Press News - CPI(M) Statement regards Sri Lanka Tamilian Issue

0 comments

                                             19.03.2013
                                        பத்திரிக்கைசெய்தி

இலங்கை போர்குற்றம் தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசு தனது உறுதியான நிலைபாட்டை தெரிவிக்க வலியுறுத்தி மத்திய இணையமைச்சர் திரு நாராயணசாமியின் அலுவலகம் சென்றவர்கள் மீது காவல் துறையும், காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து தாக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

இலங்கை ராணுவத்திற்கும், எல்டிடிஇ- க்கும் இடையிலான போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் கடந்தபின்னும், போரின் போது நிகழ்த்தப்பட்ட மனிதபடுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மீது இதுவரையிலும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. ஏதுமறியாத அப்பாவி மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் உள்ளன. கடந்த 2012 மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இலங்கை அரசே அமைத்த போரின் போது கற்றுக்கொண்ட படிப்பினைகள் மற்றும் மறுசீரமைப்புக்கான ஆணையம் அளித்த பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென அத்தீர்மானம் வலியுறுத்தியது. ஆனால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இலங்கை உள்நாட்டுப் போரின் கடைசிக்கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக உயர்மட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் சுயேட்சையான விசாரணைக்கு இலங்கை அரசை ஏற்கச் செய்யவும், தமிழ் மக்கள் வசிக்கும் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு சுய ஆட்சி உரிமை வழங்கும் அரசியல் சட்டம் 13 வது பிரிவை செயல்படுத்தவும் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா வலியுறுத்த வேண்டும். அதற்கு உலகநாடுகளின் ஆதரவைப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை தனது நிலையை தெளிவுபடுத்தாதது அழ்ந்து சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது.

  இலங்கை போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற உணர்வில் இருந்து மாணவர் சமூகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராடி வருகிறார்கள். இந்தப்பின்னணியில் மத்திய அரசு தனது உறுதியான நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்பதற்காக மத்திய இணையமைச்சர் திரு நாராயணசாமி அலுவலகத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சென்றுள்ளனர். காவல் துறை உதவி ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்து சென்றவர்களை காவல் துறையினரும் , சில காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.  காவல் துறை மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் இந்த அத்து மீறலை மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மாநில முதல்வர் மற்றும் காவல் துறை தலைவரை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 2009 முருங்கப்பாக்கத்தில் இலங்கை போர்க்குற்றத்தை கண்டித்து உண்ணாவிரதம் இருந்த தமிழ் அமைப்பினர் மீது காங்கிரஸ் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல்  தொடுத்ததை மாநில மக்கள் மறந்துவிட கூடியதல்ல.

இந்திய வரலாற்றில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மாற்று கட்சி ஆட்சிகள் களைப்பு, அவசரகால தடைச்சட்டம், மாற்றுக்கட்சி ஆட்சிக்கு எதிரான அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான

நெருக்கடி,மாநில சுயாட்சிக்கு எதிரான அணுகுமுறை, மத்தியில் அதிகார குவிப்பு .... என ஜனநாய மாண்புகள் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. தற்போது போராடும் ஜனநாயக சக்தியினர் மீது காங்கிரஸ் கட்சியினரும் , காவல் துறையினரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் திரு. நாராயணசாமி அவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஆகவே, மாநில மக்கள் ஜனநாயக உரிமையை பாதுகாக்கவும், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் காவல் துறையினர் நடத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை எதிரக்கவும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவண்

    (வெ.பெருமாள்)
        செயலாளர்
Read more...
Friday, March 15, 2013

புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு அநியாய உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

0 comments

பத்திரிகைச் செய்தி  13.03.2013

புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு அநியாய உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

      புதுச்சேரி மாநிலத்தில் மின்சாரத்தை கொள்முதல் செய்து விற்பனை செய்வதில் 306.6 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 306.6 கோடி ரூபாய் அளவிற்கு அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் பல மடங்கு கட்டணம் உயர்த்த புதுச்சேரி மின் துறை உத்தேசித்துள்ளது. மின் துறையின் உத்தேச கட்டண உயர்வை எந்த மாற்றமும் செய்யாமல் மின் கட்டண உயர்விற்கு அனுமதி வழங்கிட இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு மற்றும் புதுச்செரி மின் துறையின் 3 மடங்கு 4 மடங்கு அளவிலான கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

      மின்சாரத்தை தனியார்மயமாக்கவும், மின் கட்டண உயர்விற்கு வழிவகுக்கவும் முந்தைய பாஜக ஆட்சியில் மின்சார சட்டம் 2003ல் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மின் உற்பத்தி  கொள்முதல்-வினியோகம் என மாநில மின்வாரியங்களை கூறுகளாக பிரித்து தனியார் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு வழிவகை செய்யப்பட்டது. மேலும் மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமையை அரசுப்பொறுப்பில் இருந்து விடுவித்து அதிகாரம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவும், கட்டண உயர்வை நியாயப்படுத்தவும், மக்கள் மீது மின் கட்டண உயர்வை திணிக்கவுமே, இத்தகைய அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய காங்கிரஸ் அரசு இத்தகைய மக்கள் விரோத மின்சர கொள்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

      மின்சார சட்டம் 2003ன் கீழ் மாநில அரசு, மின் துறை மூலம் 306.6 கோடி அளவிற்கு கட்டண உயர்வை அதிகரிக்க முயற்சிக்கிறது. வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய மாற்றுவழிகள் குறித்து ஆராயாமல் விலைவாசி உயர்வால் துன்பப்படும் மக்களுக்கும் பல மடங்கு கட்டண உயர்வு மக்களுக்கு எதிரானதாகும். ஆகவே, மாநில அரசு மின் இணைப்புக்காக மின் நுகர்வோர்கள் அளித்துள்ள முன்வைப்புத் தொகையை வருவாய் இனத்தில் முதலீடு செய்யவேண்டும். 25% மின்சார இழப்பை 10%க்குள் குறைத்திட, மின் திருட்டை கட்டுப்படுத்தி, மின் வினியோகப் பாதையை நவீன தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்திட வேண்டும்.  அரசு மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள், தனியார் தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள மின்கட்டண பாக்கிகளை வசூல் செய்வது, மின்சார சிக்கனம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரிசா மாநிலத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கத்தைப் பயன்படுத்தி மின்சாரம் பெறுவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மாநில அரசும், மின் துறையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வீட்டு உபயோகம், விவசாயம், சிறு, குறுத்தொழில்கள், மற்றும் சிறிய வணிக நிறுவனங்களுக்கு கட்டண உயர்விலிருந்து விலக்களிக்க வேண்டும், என்றும் ஒருவிளக்கு வசதி, ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சார சலுகை தொடர வேண்டும் மின்கட்டண உயர்வுக்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும் போராட முன்வரவேண்டுமாய் மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு கேட்டுக்கொள்கிறது.
இங்ஙனம்

(வெ. பெருமாள்)
செயலாளர்
Read more...

புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு அநியாய உத்தேச மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும்

புதுச்சேரி மாநிலத்தின் முதலீட்டு வருவாய் உயர்ந்திட, நகர் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்திட பஞ்சாலைத் தொழிலை நவீனப்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

0 comments

புதுச்சேரி மாநிலத்தின் முதலீட்டு வருவாய் உயர்ந்திட, நகர் மற்றும் கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்திட பஞ்சாலைத் தொழிலை நவீனப்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

      புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புராதன பஞ்சாலைகளான ரோடியர், சுதேசி, பாரதி மில்கள் வெறும் கட்டிடங்களும், இயந்திரங்களும் கொண்ட ஆலைகள் அல்ல. மாறாக 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட தொழிலாளி வர்க்கத்தின் உரிமைப்போராட்டத்தின் அடையாளமாகும். இப்போராட்டம் பிரஞ்சு விடுதலைக்கு உத்வேகம் அளித்தது என்பது வரலாறு. மேலும் மாநிலத்தின் பொருளாதாரத்திலும், மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு தளத்திலும் பஞ்சாலைகள் முக்கிய பங்குவகித்துவந்துள்ளன. ஆகவே, புதுச்சேரியின் பஞ்சாலைகளை அடிச்சுவடில்லாமல் அழித்து, சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முனையும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மேலும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் மாற்று இடத்தையும், பொருத்தமான திட்டங்களையும் உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

      புதுச்சேரி மாநிலத்தில் விவசாயம் சார்ந்த தொழிலான புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி இலாபகரமாக இயக்கிட மாநில அரசு திட்டங்களை உருவாக்கிட வேண்டும். மத்திய அரசு அதற்கு தேவையான நிதியை வழங்கவேண்டும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். பஞ்சாலைத் தொழிலுக்கு தேவையான பருத்தி உற்பத்தியை அரசு ஊக்கப்படுத்துவதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் உயரும். மேலும் பஞ்சாலைகள் இலாபத்தில் இயங்குகிற போது மாநில அரசுக்கு அந்நியச் செலாவணி உள்ளிட்ட முதலீட்டு வருவாய் பெருகும். இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சிக்கான புதியத் திட்டங்களை செயல்படுத்த முடியும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன், மாநிலத்தின் முன்னேற்றம் என்ற பொதுத்தன்மையில் செயல்பட முன்வர வேண்டும்.

      கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியும் அளித்த வாக்குறுதிகளான புதுச்சேரி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது அறிவிப்புகளாகவே உள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக வாக்குறுதிகளை அளிப்பதும், காங்கிரசும், என்.ஆர்.காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு மக்களை ஏமாற்றுவதும் மலிவான அரசியலாகும்.

      ஆகவே, மாநிலத்தின் முதலீட்டு வருவாயைப் அதிகரிக்க, நகர்ப்புற, கிராமப்புற பொருளாதாரம் மேம்பட, பஞ்சாலைத் தொழில்களைப் பாதுகாத்திட மாநில அரசு திட்டம் உருவாக்க வேண்டும். மேற்படி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தேவையான நிதியை அளித்து உதவிட வேண்டும். மேலும் மூடியுள்ள ரோடியர் பஞ்சாலைகளை இயக்கவும், வழங்கப்படாமல் உள்ள சம்பள பாக்கியினை உடன் வழங்கவும் மாநில அரசு முன்வர வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் அடையாளமாகவும், பிரஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உலைக்களங்களாகவும் செயலபட்டு வந்த பஞ்சாலைத் தொழில்களை பாதுகாத்திட, அனைத்துப்பகுதி மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இங்ஙனம்

(வெ. பெருமாள்)
செயலாளர்

Read more...

மத்திய மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரியில் தெருமுனைகூட்டம்

0 comments
புதுச்சேரி,மார்ச்-9
மத்திய மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரியில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது.புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்து வந்த மாணியங்களை குறைப்பதைமத்திய அரசு கைவிட வேண்டும்.புதுச்சேரியின் கடன் தொகை ரூ.4ஆயிரம் கோடியைதள்ளுபடி செய்ய வேண்டும்.உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடி திட்டத்தைபுதுச்சேரி அரசு கைவிட வேண்டும்.மக்கள் நலத்திட்டங்களை தாமதமின்றிசெயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரிமுழுவதும் இத்தெருமுனைக்கூட்டங்கள் நடைபெறுகிறது.

புதுச்சேரி காந்திவீதியில் நடைபெற்ற இத்தெருமுனைப்கூட்டத்திற்கு
மார்க்சிஸ்ட் கட்சியின்  தலைமை நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ்
தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள்
தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நகரகமிட்டி உறுப்பினர் சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்,உள்ளிட்ட திரளானோர் இத்தெருமுனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.இத்தெருமுனைக்கூட்டம் புதுச்சேரி
முழுவதும் மார்ச் 20வரை நடைபெருகிறது.
Read more...
Saturday, March 9, 2013

ஏகாத்தியபத்தியத்தை எதிர்க்கும் உண்மையான தலைவராக விங்கியவர் தோழர். ஹியூகோ சாவேஸ்

0 comments
புதுச்சேரி,மார்ச்-8

ஏகாத்தியபத்தியத்தை எதிர்க்கும் உண்மையான தலைவராக விங்கியவர்  தோழர். ஹியூகோ சாவேஸ் என்று புதுச்சேரியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் என்.குணசேகரன் புகழாரம் சூட்டினார்.

வெனிசுலாவின் அதிபர் ஹியூகோ சாவேஸ் மறைவை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில்  இரங்கல் கூட்டம் நடைபெற்றது.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமையில் நடைபெற்ற இரங்கல்கூட்டத்தில் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பங்கேற்று பேசுகையில்,
சோசலிச கீயூபாவின் தலைமையால் கவர்ந்த தோழர் சாவேஸ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

அமெரிக்கா நாட்டு  பொம்மை அரசுகளால் எப்படி எல்லாம் வெனிசுலா மக்கள் சுரண்டபடுகின்றார்கள் எனவே அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று துனிவை மேற்கொண்டார்.தான் அதிபராக பதவிஏற்ற உடன் தனிநபர் வசம் மிருந்த எண்ணை வளங்களை அரசுடமையாக்கினார்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்த அரசின் சொத்துகளை மீட்டெடுத்தார்.ஏகாத்தியபத்தியத்தை எதிர்க்கும் உண்மையான தலைவராக விளங்கியவர் தோழர் சாவேஸ்.லத்தின் அமெரிக்கா நாட்டு மக்களை கவர்ந்தவர்,உழைக்கும் மக்கள் வரலாற்றில் இருந்து அத்தகைய தலைவரை மறைக்க முடியாது.இவ்வாறு என்.குணசேகரன் தனது இரங்கல் கூட்டத்தில் தோழர் சாவேசுக்கு புகழாரம் சூட்டினார்.

இக்கூட்டத்தில் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கலிவரதன்,நிலவழகன்,ராமசாமி,சுமதி உட்பட திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.இறுதியாக மறைந்த தலைவர் தோழர் சாவேசின் உருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.பின்னர் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Read more...

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான நில ஆர்ஜிதம் செய்ததில் முறைகேடு

0 comments
புதுச்சேரி,மார்ச்-6

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான நில ஆர்ஜிதம் செய்ததில் முறைகேடு புதுச்சேரி அரசு விசாரணைக்கு உத்தரவிட  மாரக்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை செயலர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பது வருமாறு,
கிருமாம்பாக்கம் வருவாய் கிராமத்திற்கு அருகில் உள்ள பன்னித்திட்டில் அட்டவணை இனத்து மாணவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிக்கான இடம்  ரூ.13.64 கோடிக்கு கையகப்படுத்தப்பட்டது.மேற்படி நிலம் கடலோரத்தில் விதிமுறைகளை மீறி கூடுதல் விலைக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது.அந்த நிலத்தில் கட்டிடம்  எழுப்புவதற்கு தகுதியான நிலம்தானா என்பதும் சந்தேகத்திற்கு உட்பட்டதாகும்.ஆதிதிராவிடர் நத்துறை மூலம் நிலம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடந்துள்ளது எனவே மார்க்சிஸ்ட் கட்சி இது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

பேப்பர் மில்

அதேப்போல் புதுச்சேரி மாநிலம் பாகூர் கொம்யூன் பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பேப்பர் மில் அமைப்பதற்காக புதுச்சேரி பேப்பர்° லிமிடெட் அப்போதைய  இயக்குநர் ஞானகிரி கனேசன் அரசிடம் நிலம் ஆர்ஜிதம் செய்துதர கோரினார்.அதன்படி நில ஆர்ஜிதச் சட்டம் 1894 பிரிவு 41ன் கீழ்  1977 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.மேற்படி  ஒப்பந்தத்தின் படி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் 10 சிறுவிவசாயிகளிடமிருந்து 5ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கையகப்படுத்தப்பட்டது.அதற்கு இழப்பீடும் வழங்கப்பட்டது.அரசு கையகப்டுத்திய நிலத்துடன் ஒப்பந்தத்திற்கு அடங்காத சுமார் 7ஏக்கர் புறம்போக்கு நிலமும் பேப்பர் மில் நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.

மேற்படி  ஒப்பந்தத்தில் நிலம் கையகப்படுத்திய நோக்கத்திற்கு பயன்படுத்தாதபட்சத்தில் அரசே அந்த நிலத்தை கையகப்படுத்திக்கொள்ளலாம் என்றும் பொது நோக்கத்திற்கோ அல்லது பழைய நில உரிமையாளர்களுக்கோ கூட வழங்கலாம் என்றும் குறிப்பிடுகிறது.ஆனால் ஒப்பந்தப்படி அரசு தனக்குள்ள உரிமையை பயன்படுத்தி பொதுப்பயன்பாட்டிற்கு நிலத்தை  கையகப்படுத்த தவறியுள்ளது.ஒப்பந்தப்படி ரூ.1.50 இலட்சத்திற்கும் குறைவான விலைக்கு எடுத்திருக்க வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தாததால் அரசுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதோடு அதிகாரத்தில் இருந்த அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஆதாயம் அடைந்தற்கான முகாந்திரங்கள் உள்ளதாக மாரக்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.

எனவே மேற்படி இரண்டு சம்பவங்களிலும் அரசுக்கு மிகப்பெரும் இழப்பு திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில் ஆட்சியாளர்கள் மற்றும அதிகாரிகள் ஆதாயம் அடைந்துள்ளனர்.இது குறித்து நியாயமான விசாரணைக்கு உத்திரவிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Read more...
Wednesday, March 6, 2013

ராமதாசை புறக்கணிக்க புதுவை மக்களுக்கு வேண்டுகோள்

0 comments

ராமதாசை புறக்கணிக்க புதுவை மக்களுக்கு வேண்டுகோள்

புதுச்சேரி, மார்ச் 5-சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ராமதாசின் முயற்சியை புதுச்சேரி மக் கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள் ளது.இதுகுறித்து கட்சியின் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:பா.ம.க நிறுவனர் ராம தாஸ் கலந்து கொண்ட அனைத்து சமுதாயத் தலை வர்களின் கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 3) புதுச்சேரி ஓட்டல் சன்வேயில் நடந் துள்ளது. அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை நீர்த் துப்போகச் செய்யும் வகை யில் சட்டத்திருத்தம், சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிய வன்மத் தோடு மேற்கொள்ளும் நட வடிக்கை மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.

நாடு விடுதலையடைந்து 65 ஆண்டுகளை கடந்த பின்னும் சாதிய ஒடுக்கு முறையும், தீண்டாமை கொடு மைகளும் இன்றளவும் நீடித் துக் கொண்டிருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சாதிய வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக் கப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆட்சியா ளர்களால் நேர்மையாக செயல்படுத்துவதில்லை. சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதில்லை. நிர்ப் பந்தத்தின் விளைவாக பதி வான வழக்குகளில் தண் டனை வழங்கப்பட்டது என்பதும் மிகக் குறைவா கும். இந்நிலையில் வன் கொடுமை தடுப்புச் சட்டத் தில் திருத்தம் கோருவது என்பது சாதிய ஒடுக்கு முறைகள் மற்றும் தீண் டாமை கொடுமைகள் மேலும் வளர்வதற்கு வழிவகுக்கின்ற சாதி ஆதிக்கத்தின் வெளிப் பாடாகும்.

மத்திய ஆட்சியாளர் களின் நவீன தாராளமயக் கொள்கையால் விலைவாசி உயர்வு, வறுமை, வேலை யின்மை வளர்ந்து வருகிறது. விவசாயிகளின் தற்கொலை கள் தொடர்கிறது. நிலம் மற்றும் குடிமனைப் பட்டா இல்லாத மக்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண் டிருக்கிறது. வசதி படைத் தவர்களுக்கு மட்டுமே கல்வி, சுகாதாரம் என்ற நிலை உரு வாகியுள்ளது. அனைத்து சமுதாயத்தி னரையும் பாதிக் கிற மக்களின் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனையில் தலை யீடு செய்யாமல் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து சமூகத்தினரை யும் ஒற்றுமைப்படுத்துவது என்பது மக்கள் ஒற்றுமைக் கும், வாழ்க்கை முன்னேற் றத்திற்கும் எதிரானதாகும்.

ஆகவே, குறுகிய அரசி யல் நோக்கத்திற்காக தலித் மக்களுக்கு எதிராக மேற் கொள்ளும் ராமதாசின் செயலை மார்க்சிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச செயற்குழு எதிர்க்கிறது. மாநில மக்கள் புதுச்சேரி யின் பாரம்பரியமான சமூக நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாத் திடவும், ராமதாசின் கருத்து களை புறக்கணிக்கவும் மார்க் சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
--
Read more...
Sunday, March 3, 2013

அம்பேத்கர் கல்வி பயிற்சி மையம் நிறைவு விழா

0 comments
புதுச்சேரி,மார்ச்-2
அம்பேத்கர் கல்வி பயிற்சி மையம் நிறைவு விழா

புதுச்சேரியில்   ஆரம்பிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை
வாய்ப்பு பயிற்சி மையத்தில்  எல்ஐசி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு
எழுதுவதற்க்கானக் இலவச பயிற்சிகள் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்தது.இதன்நிறைவு விழா புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் சனிக்கிழமை (மார்ச்-2) நடைபெற்றது.இப்பயிற்சி மையத்தின் ஒருங்கினைப்பாளர் ஆர்.நடராஜன்,இணை ஒருங்கினைப்பாளர் ஆர்.எம்.ராம்ஜி,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவை தலைவர் தலித்சுப்பையா,பொருளாளர் என்.கொளஞ்சியப்பன்,ஆசிரியர் சங்க தலைவர்களுள் ஒருவர் ரமேஷ் ஆகியோர் நிறைவுவிழாவில் பங்கேற்றனர்.

மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு தேர்வுகள் எழுதுவதற்கான  எழுது பொருட்களும்,நினைவு புத்தகங்கiயும் வழங்கினார்.இப்பயிற்சி மையம் துவங்கிய ஒரு மாதத்தில் முதன் முதலில் பயிற்சி பெற்றவர்கள் தேர்வு எழுதுவது
குறிப்பிடத்தக்கது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com