மத்திய மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரியில் தெருமுனைகூட்டம் நடைபெற்றது.புதுச்சேரி வளர்ச்சி திட்டங்களுக்கு அளித்து வந்த மாணியங்களை குறைப்பதைமத்திய அரசு கைவிட வேண்டும்.புதுச்சேரியின் கடன் தொகை ரூ.4ஆயிரம் கோடியைதள்ளுபடி செய்ய வேண்டும்.உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடி திட்டத்தைபுதுச்சேரி அரசு கைவிட வேண்டும்.மக்கள் நலத்திட்டங்களை தாமதமின்றிசெயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரிமுழுவதும் இத்தெருமுனைக்கூட்டங்கள் நடைபெறுகிறது.
புதுச்சேரி காந்திவீதியில் நடைபெற்ற இத்தெருமுனைப்கூட்டத்திற்கு
மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ்
தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள்
தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நகரகமிட்டி உறுப்பினர் சரவணன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்,உள்ளிட்ட திரளானோர் இத்தெருமுனைக்கூட்டத்தில் பங்கேற்றனர்.இத்தெருமுனைக்கூட்டம் புதுச்சேரி
முழுவதும் மார்ச் 20வரை நடைபெருகிறது.