ராமதாசை புறக்கணிக்க புதுவை மக்களுக்கு வேண்டுகோள்
புதுச்சேரி, மார்ச் 5-சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ராமதாசின் முயற்சியை புதுச்சேரி மக் கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள் ளது.இதுகுறித்து கட்சியின் பிரதேச செயலாளர் வெ. பெருமாள் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:பா.ம.க நிறுவனர் ராம தாஸ் கலந்து கொண்ட அனைத்து சமுதாயத் தலை வர்களின் கூட்டம் ஞாயிறன்று (மார்ச் 3) புதுச்சேரி ஓட்டல் சன்வேயில் நடந் துள்ளது. அதில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை நீர்த் துப்போகச் செய்யும் வகை யில் சட்டத்திருத்தம், சாதி மறுப்பு திருமண எதிர்ப்பு ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக சாதிய வன்மத் தோடு மேற்கொள்ளும் நட வடிக்கை மட்டுமல்ல சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.
நாடு விடுதலையடைந்து 65 ஆண்டுகளை கடந்த பின்னும் சாதிய ஒடுக்கு முறையும், தீண்டாமை கொடு மைகளும் இன்றளவும் நீடித் துக் கொண்டிருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் சாதிய வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக் கப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆட்சியா ளர்களால் நேர்மையாக செயல்படுத்துவதில்லை. சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதில்லை. நிர்ப் பந்தத்தின் விளைவாக பதி வான வழக்குகளில் தண் டனை வழங்கப்பட்டது என்பதும் மிகக் குறைவா கும். இந்நிலையில் வன் கொடுமை தடுப்புச் சட்டத் தில் திருத்தம் கோருவது என்பது சாதிய ஒடுக்கு முறைகள் மற்றும் தீண் டாமை கொடுமைகள் மேலும் வளர்வதற்கு வழிவகுக்கின்ற சாதி ஆதிக்கத்தின் வெளிப் பாடாகும்.
மத்திய ஆட்சியாளர் களின் நவீன தாராளமயக் கொள்கையால் விலைவாசி உயர்வு, வறுமை, வேலை யின்மை வளர்ந்து வருகிறது. விவசாயிகளின் தற்கொலை கள் தொடர்கிறது. நிலம் மற்றும் குடிமனைப் பட்டா இல்லாத மக்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண் டிருக்கிறது. வசதி படைத் தவர்களுக்கு மட்டுமே கல்வி, சுகாதாரம் என்ற நிலை உரு வாகியுள்ளது. அனைத்து சமுதாயத்தி னரையும் பாதிக் கிற மக்களின் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனையில் தலை யீடு செய்யாமல் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக அனைத்து சமூகத்தினரை யும் ஒற்றுமைப்படுத்துவது என்பது மக்கள் ஒற்றுமைக் கும், வாழ்க்கை முன்னேற் றத்திற்கும் எதிரானதாகும்.
ஆகவே, குறுகிய அரசி யல் நோக்கத்திற்காக தலித் மக்களுக்கு எதிராக மேற் கொள்ளும் ராமதாசின் செயலை மார்க்சிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேச செயற்குழு எதிர்க்கிறது. மாநில மக்கள் புதுச்சேரி யின் பாரம்பரியமான சமூக நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை பாதுகாத் திடவும், ராமதாசின் கருத்து களை புறக்கணிக்கவும் மார்க் சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
--
