புதுச்சேரி,மார்ச்-15
வன்கொடுமையை சட்டத்தை வளுபடுத்தக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னனி சார்பில் புதுச்சேரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது
ஐபிசி சட்டத்தில் உள்ளதை விட குறைவான தண்டனை மட்டுமே உள்ள எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் -1989ல் சில பிரிவுகளை மேலும் கடுமையாக்க வேண்டும்.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்வதில் அலட்சியம் செய்வதை கைவிட வேண்டும்.வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்.புதுச்சேரி,காரைக்கால் மாவட்ட எஸ்.சி,எஸ்.டி சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட வேண்டும்.சந்தை புதுக்குப்பத்தில் தலித் மக்களின் வீடுகள் மற்றும் உடமைகள் மீது தாக்குதலை நடத்தியவர்கள் பதிவு செய்யப்பட்ட வழக்கினை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் தலித்சுப்பையா தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் இராமசாமி,பொருளாளர் கொளஞ்சியப்பன்,அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராசன்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.நிர்வாகிகள் தவமணி,கலிவரதன்,ராஜாங்கம்,முருகன்,மணிபாலன்,ராம்ஜி,ரமேஷ், பிரபுராஜ், உட்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Tuesday, March 19, 2013
Subscribe to:
Post Comments (Atom)
