ஏகாத்தியபத்தியத்தை எதிர்க்கும் உண்மையான தலைவராக விங்கியவர் தோழர். ஹியூகோ சாவேஸ் என்று புதுச்சேரியில் நடந்த இரங்கல் கூட்டத்தில் என்.குணசேகரன் புகழாரம் சூட்டினார்.
சோசலிச கீயூபாவின் தலைமையால் கவர்ந்த தோழர் சாவேஸ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.

அமெரிக்கா நாட்டு பொம்மை அரசுகளால் எப்படி எல்லாம் வெனிசுலா மக்கள் சுரண்டபடுகின்றார்கள் எனவே அதனை எதிர்த்து போராட வேண்டும் என்று துனிவை மேற்கொண்டார்.தான் அதிபராக பதவிஏற்ற உடன் தனிநபர் வசம் மிருந்த எண்ணை வளங்களை அரசுடமையாக்கினார்.பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்த அரசின் சொத்துகளை மீட்டெடுத்தார்.ஏகாத்தியபத்தியத்தை எதிர்க்கும் உண்மையான தலைவராக விளங்கியவர் தோழர் சாவேஸ்.லத்தின் அமெரிக்கா நாட்டு மக்களை கவர்ந்தவர்,உழைக்கும் மக்கள் வரலாற்றில் இருந்து அத்தகைய தலைவரை மறைக்க முடியாது.இவ்வாறு என்.குணசேகரன் தனது இரங்கல் கூட்டத்தில் தோழர் சாவேசுக்கு புகழாரம் சூட்டினார்.
இக்கூட்டத்தில் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கலிவரதன்,நிலவழகன்,ராமசாமி,சுமதி உட்பட திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.இறுதியாக மறைந்த தலைவர் தோழர் சாவேசின் உருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.பின்னர் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
