Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, March 20, 2013

உணவு, நிலம், வேலை உரிமைகளுக்காக போர் முழக்கம் தில்லியில் சிபிஎம் மாபெரும் பேரணி - மே மாதம் சிறை நிரப்பும் போர்

0 comments


பிரகாஷ் காரத் அறைகூவல்

புதுதில்லி, மார்ச் 19-உணவு, நிலம், வேலை, வீட்டு மனை உள்ளிட்ட முழக்கங்களை முன் வைத்து மே 15 முதல் 31 வரை நாடு முழு வதும் மத்திய -மாநில அரசு அலுவலகங் கள் முன்பும் ரேசன் கடைகள் முன்பும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் மறியல்-சிறை நிரப்பும் போரை நடத்துவீர் என தில்லி ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக் கில் கூடியிருந்த மக்களிடையே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அழைப்பு விடுத்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் “மாற்றுப் பாதைக்கான போர் முழக்கப் பயணம்” பிப்ரவரி 24 சனிக் கிழமையன்று கன்னியாகுமரியில் தொடங்கியது. நாட்டின் நான்கு முனை களிலிருந்தும் புறப்பட்ட பயணக்குழுக் கள் நாடு முழுவதும் பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் பயணம் செய்தபின் செவ்வாய்க்கிழமையன்று காலை புதுதில்லி, ராம்லீலா மைதானத் தில் மிகப்பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டத்தில் சங்கமித்தனர்.இப்பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் பேசியதாவது:நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்தபின் இப்போது இங்கே பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை , எம்.ஏ.பேபி. கே. வரதராசன், மத்தியக்குழு உறுப்பினர் சுதா சுந்தர ராமன் ஆகியோர் அடங்கிய தெற்குப் பயணக்குழு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு, கேரளம், தமிழகம், கர் நாடகம், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள் வழியாக மக்களைச் சந்தித்தபின் தில்லி வந்தது.

கிழக்குப் பயணக்குழு என் தலைமையில் கொல்கத்தாவிலிருந்தும், வடக்குப் பயணக்குழு பிருந்தாகாரத் தலைமையில் அமிர்தசரஸிலிருந்தும், மேற்குப் பயணக்குழு சீத்தாராம் யெச்சூரி தலைமையில் மும்பையிலிருந் தும் புறப்பட்டு தில்லி வந்தடைந்தது. பயணத்தின்போது, மக்கள் மத்தியில் மத்திய அரசின் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகளை எடுத்துக்கூறியும், இடதுசாரிக் கட்சிகளின் மாற்றுக் கொள்கைகளை முன்வைத்தும், வர விருக்கும் காலங்களில் கட்சி நடத்தும் போராட்டங்களில் தங்களை முழுமை யாக இணைத்துக்கொள்ளுமாறும் மக்களிடையே அறைகூவல் விடுத் தோம்.பயணத்தின்போது நாசகர நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள் கைகளைப் பின்பற்றுவதில் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐ.மு. கூட்டணி அரசாங்கத்திற்கும் பல மாநி லங்களில் பாஜக தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பன மக்கள் மத்தியில் விளக்கினோம்.காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவிற் கும் மாற்றாக இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற கட்சிகள் மாற்றுக்கொள் கைகளை முன்வைத்துப் போராட முன் வரவேண்டும். இடதுசாரிக் கட்சி களைத் தவிர பல கட்சிகள் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மட்டும் இடதுசாரிக் கட்சி களுடன் வருகின்றன. தேர்தல் முடிந்த பின் மீண்டும் காங்கிரசோடு அல்லது பாஜகவோடு போய்ச் சேர்ந்து கொள் கின்றன. எனவே, அடிப்படையான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து மக்கள் இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு பிரகாஷ்காரத் தன் உரையில் தெரிவித்தார். இதனை அடுத்து எஸ். ராமச்சந் திரன்பிள்ளை, பிருந்தாகாரத், சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., பிமன்பாசு, திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் ஆகி யோர் பயணம் சென்றபோது தங்க ளுக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துரைத்தனர்.

மாணிக் சர்க்கார்
மாணிக் சர்க்கார் உரையாற்றுகை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாற்றுக் கொள்கையை முன் வைத்து தேர்தலைச் சந்தித்ததால்தான் திரிபுராவில் மாபெரும் வெற்றியைப் பெற முடிந்தது என்று விளக்கினார்.
சிறைகளை நிரப்புவோம் நிறைவாகத் தொகுப்புரை வழங்கிய பிரகாஷ்காரத், போர் முழக்கப் பயணத் தின் போது முன்வைத்த கோரிக்கை களை மத்திய மாநில அரசுகள் நிறை வேற்ற வலியுறுத்தி, மே 15 முதல் 31 வரை ரேஷன்கடைகள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் முன்பு லட்சக்கணக் கான மக்களைத் திரட்டி மறியல் - சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறைகூவல் விடுத்தார். மேலும் இப்போராட்டத்தில் அனைத்து இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளும் தங் களை இணைத்துக் கொள்ள வேண் டும் என்றும் பிரகாஷ் காரத் கேட்டுக் கொண்டார். (ந.நி.)

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com