Pages

ShareThis

Powered by Blogger.
 
Thursday, February 28, 2013

சாமிப்பிள்ளை தோட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,பிப்-27

சாமிப்பிள்ளை தோட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


புதுசசேரி சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும்.அணைக்கரை மேட்டில் வீடு கட்டும் மக்களுக்கு மூன்றாவது மாண்ய தொகையை உடனே வழங்க வேண்டும்.சுகாதார கேட்டை ஏற்படுத்தும் கழிவு நீர் வாய்க்காளை தூர்வாரி கோசு தொல்லையை கட்டுபடுத்த வேண்டும்.ஈ.சி.ஆர் சாலையில் இருந்து சாமிப்பிள்ளை தோட்டம் செல்லும் சாலையில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க சிக்னல் வசதியை ஏற்படுத்த வேண்டும்.பொதுகழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சாமிப்பிள்ளை தோட்டம் ,ஈசிஆர் சாலை சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரக்குழு உறுப்பினர் பாஸ்கர் தலைமை தாங்கினார். கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் எஸ்.லெனின்துரை,புதுச்சேரி நகரக்கமிட்டி உறுப்பினர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பிரதேசக்குழு உறுப்பினர் சத்தியா,கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

மாற்றுப் பாதைக்கான போர் முழக்கமாய் பிரச்சாரம் புதுச்சேரியில் துவங்கியது.

0 comments

புதுச்சேரி,பிப்-25

மாற்று பாதைக்கான போர் முழக்கமாய் பிரச்சாரம் புதுச்சேரியில் துவங்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்பில் மாற்று கொள்கைகளை முன்வைத்து
அகில இந்திய பிரச்சார பயணம் நான்கு திசைகளில் இருந்து ஞாயிரன்று
துவங்கியது.



இதன் துணைப்பிரச்சாரம் புதுச்சேரி,கடலுர்,விழுப்புரம்,திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில்திங்களன்று (பிப்-25) துவங்கி பிப்ரவரி 28வரை நடைபெறுகிறது.இறுதியாகவிழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இத்துணைப்பிரச்சார துவக்கவிழா புதுச்சேரியில் திங்களன்று (பிப்-25) துவங்கியது.

முத்தியால்பேட்டை காந்திவீதியில் துவங்கிய இப்பிரச்சாரத்திற்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை
தாங்கினார். தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்  கே.கனகராஜ்  பிரச்சாரத்தை
துவக்கி வைத்து பேசினார்.கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்
என்.குணசேகரன்,மாநிலக்குழு உறுப்பினர் சாமூவேல்ராஜ்,திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்
எம்.சிவக்குமார்,கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
ரமேஷ்பாபு,உதயகுமார்,இந்திய மாணவர் சங்க தமிழ்மாநில தலைவர்
கே.எஸ்.கனகராஜ், பிரதேசக் செயற்குழு உறுப்பினர்
தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன்,சுமதி,முத்தியாள்பேட்டை
கிளை செயலாளர் சரவணன் உளிட்ட திரளானோர் இப்பிரச்சாரத்தில்
பங்கேற்றனர்.முத்தியால்பேட்டையில் துவங்கிய பிரச்சாரம்
இலாஸ்பேட்டை,முத்திரையர்பாளையம்,வில்லியனூர்,மதகடிப்பட்டு,பாகூர்
உள்ளிட்ட பகுதிகளில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.முன்னதாக புதுவை
சப்தர்ஹஸ்மி  கலைக்குழுவின் கிராமிய பாடல் நிகழ்சி நடைபெற்றது.


 மதகடிப்பட்டு

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் துவங்கிய மாற்று பதைக்கான போர் முழக்கமாய் பிரச்சாரம் புதுச்சேரியில் எல்லையான மதகடிப்பட்டுக்கு வந்த பிரச்சாரபயணத்தை கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமையில்  வரவேற்ப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ்,என்.குணசேகரன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் சாமூவேல்ராஜ்,ஆனந்தன்,மாவட்ட செயலாளர்கள் பெருமாள்,வீரபத்திரன்,பிரதேச நிர்வாகிகள் கலிவரதன்,உலகநாதன்,
 உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Read more...

மாநிலத்தின் உரிமைகளை பரித்து கொள்ளும் ஆட்சியாக தான் மத்திய ஆட்சி உள்ளது

0 comments
மாநிலத்தின் உரிமைகளை பரித்து கொள்ளும் ஆட்சியாக தான் மத்திய  ஆட்சிஉள்ளது  என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பிகுற்றம்சாட்டியுள்ளார்.


புதுச்சேரி,பிப்-25

மாநிலத்தின் உரிமைகளை பரித்து கொள்ளும் ஆட்சியாக தான் மத்திய  ஆட்சிஉள்ளது  என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பிகுற்றம்சாட்டியுள்ளார்.


விலைவாசி உயர்வு ,இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய
அரசை கண்டித்து மாற்று பாதைக்கான போர் முழக்க பிரச்சார பயணத்தின்
துணைப்பிரச்சாரம் துவக்கவிழா பொதுக்கூட்டம் புதுச்சேரியில்
நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச
செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.நகரகமிட்டி செயலாளர்
என்.பிரபுராஜ் வரவேற்புரையாற்றினார்.
இப்பிரச்சார பொதுக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு
உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி துவக்கி வைத்து பேசுகையில்,
இந்திய பெருமுதலாளிகளுக்கு ஆளுகின்ற மத்திய காங்கிரஸ் அரசு பெரும்பாளன
இடத்தை ஒதுக்கி தருகிறது.ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்தும்
ஏழை எளிய மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை.53சதவீதம் மக்களுக்கு
கழிப்பரை இல்லை,39சதவீதம் பேருக்கு சுத்தமான உணவிகளை தயாரிக்க சமையல்
கட்டு இல்லை.சரியான சுகாதாரம் கிடைக்காததால்  ஒரு நிமிடத்திற்கு நாட்டில்
பிறக்கும் 218 குழந்தைகள் இறக்கும் கொடுமை உள்ளது.தமிழகத்தில் மட்டும்
50சதவீதம் பெண்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளது.இத்தகைய சூழ்நிலையில் தான்
இன்றைக்கு தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலையை மத்திய ஆட்சியாளர்கள்
ஏற்படுத்தியுள்ளனர்.ஒரு பக்கம் மாநில அதிகாரத்தை பரித்து கொள்ளும் மத்திய
அரசு அனைத்து வசதிகளையும் மாநில அரசுகளே நிறைவேற்றி கொள்ளவேண்டும் என்று
மாநில உரிமைகளை பரித்து கொண்டு செயல்படுகிறது.இத்தகைய மத்திய
ஆட்சியாளர்களின் கொள்கைகளை கண்டித்தும் மாற்று கொள்கைகளை முன்வைத்தும்
மார்க்சிஸ்ட் கட்சி மக்களை சந்திக்கும் இந்த தேசம் தழுவிய பிரச்சார
இயக்கத்தை துவக்கியுள்ளது.


என்.குணசேகரன்.

கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்
பேசுகையில்,இந்த தேசத்தின் நான்கு முனைகளில் இருந்து இன்றைய தினம்
இப்பிரச்சாரம் துவங்கியுள்ளது.புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்தி 23
ஆண்டுகள் இன்றைக்கு கடந்துள்ளது.இந்த கொள்கைகளால் நாட்டின் ஏழ்மை
அதிகரித்துள்ளது.பெரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு பன்மடங்குகளாக
உயர்ந்து நாட்டின் வளங்கள் அனைத்தும் அவர்களிடத்தில் அடமானம்
வைக்கப்பட்டுள்ளது.இந்த பெரும் முதலாளிகளுக்கு தான் மன்மோகன் சிங் அரசு
ஐந்து லட்சம் கோடி வரிசலுகைகள் வழங்கியுள்ளது.நாட்டின் வேலையில்லா
திண்டாட்டம் ஒருபக்கம் தலைவிரித்தாடும் நிலையில் தமிழகத்தில் 80லட்சம்
பேரும்,புதுச்சேரியில் 2லட்சம் பேரும்  வேலைக்காக காத்திருக்கும்
நிலையில் இந்த வரிசலுகைகள் வழங்கியிருப்பது யாருக்கான அரசு என்ற கேள்வி
தற்போது எழுந்துள்ளது.2ஜி ஸ்பெக்டரம் ஊழல் துவங்கி இன்றைக்கு
எழுந்திருக்கும் ஹெலிகாப்பர் ஊழல் வரை நாட்டில் நடந்தவண்ணமாக
உள்ளது.விடுதலை போராட்டத் தலைவர்களுக்கு புகலிடமாக விளங்கிய இந்த
புதுச்சேரி மண் இன்றைக்கு ஊழல் செய்தவர்களின் புகலிடமாக விளங்குவது
வருத்தத்திற்குறியதாகும்.எனவே தான் இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி
இன்றைக்கு இந்த பிரச்சார பயணத்தை துவக்கியுள்ளது.

கே.கனகராஜ்

தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில்,மத்திய காங்கிரஸ்
ஆட்சியாளர்கள் மக்கள் நலத்திட்டங்களை படிப்பபடியாக குறைத்து விட்டு
இன்றைக்கு உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடி திட்டம் கொண்டு
வரத்துடிக்கிறது.பெட்ரோல்,டீசல் மீதான வரிகளை உயர்த்தி சாதாரண மக்கள்
தலைiயில் விலைவாசி உயர்வை தினிக்கும் மத்திய அரசு காங்கிரஸ் அரசு ஏன் வரி
ஏய்ப்பவர்களிடம் வரியை வசுலிக்க மறுக்கிறது.வரிஏய்ப்பவர்களுக்காக கொண்டு
வரப்பட்ட சட்டத்தை ஏன் இந்த அரசு அமல்படுத்தவில்லை.அந்த சட்டத்தை இன்னும்
இரண்டு ஆண்டுகள் தள்ளிபோட காரணம் ஏன்?எனவே இந்த அரசு யாருடைய நலன்களை
பாதுகாக்கிறது.தமிழகத்தில் ஸ்டார்லைட் நிறுவனத்தில் நடந்த வரிஏய்ப்பு
தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.வரிகளை சாதாரண மக்கள்
பயண்படுத்தும் பொருட்கள் மீது சுமத்தி அவர்களின் வாழ்க்கையை
கேள்விகுறியாக்கும் மத்திய அரசு. எனவே தான் மக்களை திரட்டும் வகையில்
இந்த பிரச்சார பயணம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.மாநிலக்குழு
உறுப்பினர் மூசா மற்றும்
புதுச்சேரி,கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை,மாவட்ட செயற்குழு
உறுப்பினர்கள் முருகன்,நிலவழகன்,கலிவரதன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,ராமசாமி,சுமதி,ரமேஷ்பாபு,உதயகுமார்,குமார்
உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.
Read more...

காவல்நிலையத்தில் தொழிலாளி அடித்து கொலை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும்

0 comments

புதுச்சேரி,பிப்-22

காவல்நிலையத்தில் தொழிலாளி அடித்து கொலை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.


மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு, புதுச்சேரி தவளக்குப்பத்தில் மினிலோடு கேரியர் ஓட்டிவந்தவர் மணி( எ) ரவி இவர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தவளப்குப்பம் காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மணைவி கலைச்செல்வி  காவல்நிலையத்தில் சென்று தனது கனவர் எங்கே என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்கிருந்த காவலர்கள் பதில் ஏதும் சொல்லாததால் தனது உறவினர் மூலம் அக்கம் பக்கம் தேடிபார்த்ததில் காவல்நிலையம் பின்பு ஒரு மரத்தில் மர்மமான முறையில் மணி தூக்கில் தொங்கியுள்ளார்.மர்மமான முறையில் இறந்து கிடந்த மணி(எ)ரவி க்கு மஞ்சுலா (15வயது),மைதிலி (9 வயது) ஆகிய இரண்டு பெண்குழந்தைகளும்,குமார் (வயது 7) ஒரு மகனும் உள்ளனர்.
காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மணி மர்மாக இறந்துள்ளார்.அவர் தற்கொலை செய்வதற்கான  எந்த  வித முகாந்திரம் இல்லாதபோது அவரை காவல்நிலையத்தில்  வைத்து அடித்து கொள்ளப்பட்டுள்ளார் என்ற தகவல் வருகிறது.எனவே இது குறித்து உண்மை குற்றவாலிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில்  ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட அவரது குடுப்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.10லட்சம் உடனே புதுவை அரசு வழங்க வேண்டும்.இல்லை என்றால் பிப்-28ல் தவளக்குப்பம் காவல்நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தும்.இவ்வாறு கூறினார்.பேட்டியின் போது இறந்த  மணியின் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உடன் இருந்தனர்.


புதுச்சேரி,பிப்-22
 மாற்று கொள்கைகளை முன்வைத்து பிப்ரவரி 24ல் மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரியில் பிரச்சாரம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
புதுச்சேரியில் நிலவும் நிதி நெருக்கடி,நீதி நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடு,மாநில தலைமை செயலாளர் மாற்றம் உள்ளிட்டவைகள் மாநில அரசின் பிரச்சனையாக மார்க்சி°ட் கட்சி பார்க்கவில்லை.இது மக்கள் பிரச்சனை எனவே மத்திய அரசின் இத்தகைய அனுகுமுறையை மார்க்சி°ட் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது.மேலும் கடந்த காங்கிர° ஆட்சியில் நடைபெற்ற பாதாளசாக்கடை திட்டம்,குப்பை அள்ளும் திட்டம் ஆகியவைகளில் நடந்துள்ள ஊழல்  முறைகேடுகள் தொடர்பாக மாநில அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.எனவே இக்கோரிக்ககைளை முன்வைத்தும் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 27 ஆம் தேதியிலிருந்து மார்ச் 10 ஆம்தேதி வரை புதுச்சேரி முழுவதும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெறுகிறது. அகில இந்திய துணை பிரச்சாரம் துவக்கவிழா அணைவருக்கும் உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்த வேண்டும்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிப்பதை எதிர்த்தும்,பெண்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் பரிந்துறைகளை நிiவேற்றக்கோரியும்  அகில இந்திய அளவில பிரச்சாரபயணம் நடைபெறுகிறது.இந்த பிரச்சாரத்தின் நோக்கங்களை வலியுறுத்தி புதுச்சேரி,கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் துணைப்பிரச்சாரம் நான்கு தினங்களுக்கு நடைபெறுகிறது.பிரச்சாரத்தின் இருதி நாளான பிப்ரவரி 28ல் விழுப்புரத்தில் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.புதுச்சேரியில் பிப்ரவரி 24 ல் துவங்கும் பிரச்சார துவக்கவிழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி,தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன்,கனகராஜ்,மாநிலக்குழு உறுப்பினர் பாலபாரதி, எம்எல்ஏ மற்றும் நான்கு மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.இவ்வாறு கூறினார்கள்.பேட்டியின்போது செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உடன் இருந்தார்.
Read more...

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இரண்டாயிர்த்திற்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது

0 comments

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இரண்டாயிர்த்திற்கும்மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டு கைது.

                 மத்திய அரசின் விலைவாசி உயர்வு கண்டித்தும்,தொழிற்சங்க உரிமை
மறுப்பு,அனைவருக்கும் உத்தரவாதமான வேலைவழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.10ஆயிரம்,அரசு  காலிபணியிடங்களை நிரப்புதல்,பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்பதைகைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து  பிப்வரி 20,21 ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்தி பொது வேலை நிறுத்தத்திற்குமத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவலுக்கு இணங்க இந்த பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.








கடைகள் அடைப்பு

இப்பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரி முழுவதும் கடைகள்
அடைக்கப்பட்டிருந்தது.ஆட்டோ,டெம்போ,பேருந்துகள் முற்றிலும்
ஒடவில்லை.புதுச்சேரி நகரத்தில் உள்ள அண்ணாசாலை,நேரு வீதி,காந்தி வீதியில்
உள்ள வர்த்தக நிறுவனங்கள்,பெரிய அங்காடிகள் மூடப்பட்டிருந்தது.இதேப்போல்
நகரை சுற்றியுள்ள முத்தியால்பேட்டை,முதலியார்பேட்டை,சின்னகடை,நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளின் அங்காடிகள் மூடப்பட்டதால்  சாலைகளில் மக்கள் கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.மாநில அரசு ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் பெறும்பாளான அரசு துறை அலுவலகங்களில் ஊழியர் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

மறியல்

புதுச்சேரி காமராஜர் சிலை
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற
சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,சிஐடியு மாவட்ட செயலாளர்
நிலவழகன்,நிர்வாகிகள்
ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சுமதி,குணசேகரன்,சிவக்குமார்,ராமசாமி உள்ளிட்ட
15 பெண்கள் உட்பட 140பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை
செய்யப்பட்டனர்.

இந்திராகாந்தி சதுக்கம்

எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள இந்திராகாந்தி சதுக்கத்தில் நடைபெற்ற
மறியல் போராட்டத்தில் சிஐடியு ஆட்டோ சங்க கவுரவத்தலைவர்
தா.முருகன்,பொதுச்செயலாளர் சீனூவாசன்,சிபிஐ தேசிக்குழு உறுப்பினர்
நாரா.கலைநாதன்,மாநில ஆட்டோ சங்க தலைவர் மணிவண்ணன்,எல்எல்எப் சங்க தலைவர்
ஜெயகுமார் மற்றும் பல்வேறு ஆட்டோ சங்கங்களின் தலைவர்கள் உட்பட 400 ஆட்டோ
ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
திருவாண்டார் கோவில்
திருவாண்டார் கோவிலில் நடைபெற்ற மறியல்போராட்டத்தில் சிஐடியு மாவட்ட
தலைவர் ஜி.ராமசாமி,மற்றும் பல்வேறு வெகுஜென இயக்க தலைவர்கள்
கலிவரதன்,ஆவனியப்பன்,உலகநாதன்,சங்கர் உட்பட 9பெண்கள் உட்பட 90பேர் கைது செய்யப்பட்டார்கள்.

பாகூர்

பாகூர் மாரியம்மன் கோவில் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு
கட்டுமான சங்க தலைவர் கலியன் தலைமை தாங்கினார்.வெகுஜென இயக்க தலைவர்கள் ராமசாமி,பத்மநாபன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 20 பெண்கள் உட்பட 110பேர் கைது செய்யப்பட்டனர்.இதேப்போல் கரிகலாம்பாக்கத்தில் நடைபெற்ற மறியல் போராட்த்தில் விவசாய சங்க தலைவர்  முருகையன்,நிர்வாகிகள்
இரத்தினவேல்,அரிதா°,முருகன்,சண்முகம் உள்ளிட்ட 40பேர் கைது
செய்யப்பட்டார்கள்.புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை,சுப்பையா சிலை உள்ளிட்ட
மாநிலம் முழுவதும் 12 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில்
2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவித்தனர்.


புதுச்சேரி,பிப்-21

விலைவாசி உயர்வை எதிர்த்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் புதுச்சேரியில் கைது.

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதிப்பதை கைவிட
வேண்டும்.பெட்ரோல்,டீசல் விலைஉயர்வை உடனடியாக குறைக்க வேண்டும்.அரசு
காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.அனைவருக்கும் பாதுகாப்புள்ள
ஓய்வூதியம்,7வது ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்த்தில்
அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன்,மற்றும் தலைவர்கள்
ஆனந்தராசன்,புகழேந்தி,இளங்கோவன்,கீதா,முருகவேல்,பிரமதாசன்,கிருஷ்டோபர்,ஆசிரியர்
சங்க தலைவர்கள் சண்முகம்,ஜெயராமன்,வத்சா,வாசுதேவன்,ரமேஷ்,ஜெயராஜ்
உள்ளிட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள்,அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட
120பெண்கள் உட்பட 380பேர்கள் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக சம்மேளன
அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக பேரூந்து நிலையம் அருகே வந்து மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள்.

Read more...
Thursday, February 21, 2013

புதுச்சேரியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற மத்திய பொதுத்துறை ஊழியர்கள்

0 comments



புதுச்சேரியில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற மத்திய பொதுத்துறை ஊழியர்கள் போராட்ட படங்கள்.



புதுச்சேரி,பிப்-20
அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்தை யொட்டி புதுச்சேரியில் இன்று (வியாழனன்று)  பந்த் போராட்டம் நடைபெறுகிறது.
மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து சிஐடியு,ஏஐடியுசி,ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் நேற்றும் இன்றும் இரண்டு நாள் பொதுவேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.வங்கி,இன்சூரன்ஸ்,தொலைத்தொடர்பு,தபால்துறை,மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் இந்த வேலை நிறுத்த போராட்டம் புதனன்று வெற்றிகரமாக நடைபெற்றது.இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக புதுச்சேரியில் இடதுசாரிகட்சிகள்,தொழிற்சங்க அமைப்புகள் முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர்.இதனால் புதுச்சேரியில் ஆட்டோ,பேருந்து,டெம்போ,வர்த்தக நிறுவனங்கள் இயங்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதரவு ஊர்வலம்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு சிபிஎம்,சிபிஐ,மற்றும் அனைத்து மத்திய தொழிற்சங்க தலைவர்கள் புதனன்று மாலை புதுச்சேரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாசாலை,நேருவீதி,பாரதிவீதி,காந்தி வீதியில் ஊர்வலமாக சென்று இன்று நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு பிரச்சரம் செய்தனர். 
Read more...
Tuesday, February 19, 2013

நிதி நெருக்கடியில் இருந்து புதுச்சேரி மாநிலத்தை மீட்க அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

0 comments


புதுச்சேரி,பிப்-18
நிதி நெருக்கடியில் இருந்து புதுச்சேரி மாநிலத்தை மீட்க அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன்  வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் திங்களன்று (பிப்-18) புதுச்சேரி சட்டமன்றத்தில் சந்தித்து மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றும் பட்டியல் அடங்கிய மனு ஒன்றை அளித்தர்.இச்சந்திப்பின் போது மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,கலிவரதன்,ராமசாமி,ராமச்சந்திரன்,பிரதேக்குழு உறுப்பினர் உலகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சுமார் 30நிமிடம் முதல்வரை சந்தித்து பேசிய பிறகு பின்னர் வெளியில் வந்த  ஜி.இராமக்கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியது வருமாறு,
யூனியன் பிரதேச பட்டியலில் இருந்த டில்லி,கோவா பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுவிட்டது. எனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் மாநில அந்தஸ்து உடனே மத்திய அரசு வழங்க வேண்டும்.தற்போது புதுச்சேரியின் கடன் தொகை ரூ.4ஆயிரம் கோடிக்குமேல் உள்ளது.இந்த கடன் தொகைக்கு  நாள் ஒன்றுக்கு  மத்திய அரசுக்கு ரூ.1கோடி வட்டியாக  செலுத்தப்படுகிறது.இதனால் மாநில வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்ற  தேவையான நிதியின்மையால் நிதி நெருக்கடி  ஏற்படுகிறது.எனவே இந்த 4ஆயிரம் கோடியை  மத்திய அரசு உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் புதுச்சேரியில் இருப்பதால்  மாநில தலைமை செயலாளர்,நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை  மாற்றவும்,புதிய செயலர்களை நியமிக்கவும் அதற்கான அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு உள்ளது.தற்போது தலைமை செயலாளரை  மாற்றியதில் எனக்கு எதுவும் தெரியாது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி  கூறுவது  சரியானதல்ல.எப்படி டில்லிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ அதேப்போல் புதுச்சேரிக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும்.எனவே மாநிலத்தின் நிதிநெருக்கடியிலிருந்து மாநில மக்களை பாதுகாக்கவும்,மாநில அந்தஸ்து பெறவும் உடனடியாக புதுச்சேரி முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்றார்.மேலும் மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற சுயேச்சையான போராட்டத்தையும் மேற்கொள்ளும் இவ்வாறு ஜி.இராமக்கிருஷ்ணன் கூறினார்.
Read more...
Friday, February 15, 2013

வினோதினி உடலுக்கு புதுச்சேரியில் கன்னீர் அஞ்சலி.

0 comments
புதுச்சேரி,பிப்-14
வினோதினி உடலுக்கு புதுச்சேரியில் கன்னீர் அஞ்சலி.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு சென்னை கீழ்பாக்கம் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி சிகிச்சை பலனிக்காமல் செவ்வாய்கிழமை இறந்தார்.இந்நிலையில் அவரது சொந்த ஊரான காரைக்காலுக்கு எடுத்து செல்லும் வழியில் புதுச்சேரிக்கு வந்த வினோதினி உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரி ராஜிவ்காந்தி மகப்பேறு மருத்துவமனை எதிரில் நடைபெற்றது.
இரங்கல் கூட்டம்
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நலத்துறை அமைச்சர் ராஜவேல்,உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர் செல்வம்,எதிர்கட்சி தலைவர் வைத்தியலிங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,மற்றும் மாதர்,வாலிபர்,மாணவர்  சங்கங்களின் தலைவர்கள் , ஜனநாயக அமைப்புகளை கொண்டவர்கள்  திரளானோர்  பங்கேற்று வினோதினியின் உடலுக்கு மலர் வலையம் வைத்து கன்னீர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் இரண்டு நிமிடம்  இரங்கல் கூட்டமும் நடைபெற்றது.  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக உறுதி மொழி நிகழ்சி நடைபெற்றது.
Read more...
Saturday, February 9, 2013

மக்கள் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை எதிர்த்து போராடி தான் நிதி பெற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியை என்.குணசேகரன் கேட்டு கொண்டார்.

0 comments
புதுச்சேரி,பிப்-8

மக்கள் வளர்ச்சி  திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை எதிர்த்து  போராடி தான் நிதி பெற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியை  என்.குணசேகரன் கேட்டு கொண்டார்.
புதுச்சேரி  மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நீண்ட காலமாக உள்ள  புதுச்சேரியின் கடன்  ரூ.4ஆயிரத்தி 700கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு  சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

என்.குணசேகரன்
இப்போராட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் போராட்டத்தில் பங்கேற்று பேசுகையில்,
தொழில் வளர்ச்சி இல்லாத பீகார்,உ.பி  போன்ற வட மாநிலங்களில் அம்மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து வாங்கிய  கடன்களை கடந்த காலங்களில் மத்திய அரசு  தள்ளுபடி செய்யதுள்ளது. எனவே அத்தகைய  தொழில் வளர்ச்சி இல்லாத புதுச்சேரியிலும் இந்த கடன்களை மத்திய காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டிய நிதியை வழங்காமல்  மறுத்து வருகிறது.இதே நிலை கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு நேர்ந்தது.அப்போதைய முதல்வர் தோழர் ஜோதிபாசு  மத்திய காங்கரஸ் அரசை எதிர்த்து  மக்களை திரட்டி போராடி போராடி தான் நிதியை பெற்றார்.புதுச்சேரியில் உள்ள  12லட்சம் மக்களின் வாழ்வாதார பிரச்சனை எனவே  முதல்வர் ரங்கசாமி  மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரiசை எதிர்த்து மக்களை திரட்டி போராட முன்வரவேண்டும்.அத்தகைய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
புதுச்சேரி மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் ரங்கசாமி வெறும் அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசனை கேட்பதற்கு மாறாக பொருளாதார வள்ளுநர்களிடம் ஆலோசனைகளை கேட்க வேண்டும். அத்தகைய  ஆலோசனைகளை ஏற்க முன் வந்தால்  பொருளாதார நிபுனர்களை மார்க்சிஸ்ட் கட்சி  அடையாளம் காட்ட தயாராக உள்ளது.
எனவே புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உறுதுனையாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு வரும் பிப்ரவரி 18ல் முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து இப்பிரச்சனைகளுக்கு மாற்று ஆலோசனைகளை  வழங்க உள்ளது.இச்சந்திப்பில் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணனும்  பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு என்.குணசேகரன் பேசினார்.
முன்னதாக செயற்குழு உறுப்பினர் தா.முருகன் பேசினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கலிவரதன்,நிலவழகன்,ராமச்சந்திரன்,சுமதி இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,முருகையன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
Read more...
Saturday, February 2, 2013

குடியிருக்கும் இடத்திலேயே இலவச மணைப்பட்டா வழங்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

0 comments

புதுச்சேரி,ஜன-31
 குடியிருக்கும் இடத்திலேயே இலவச மணைப்பட்டா வழங்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கோவிந்தசாலை  நகராட்சிக்கு  சொந்தமான  சதூர்த்தி வினாயகர் கோவில் நிலத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு உடணடியாக பட்டா வழங்க வேண்டும்.முத்தியால் பேட்டை சோலைநகர் கசாப்புகாரன் தோப்பில் குடியிருக்கும் மக்களுக்கும்,இலாஸ்பேட்டை சென்பக வினாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் மக்களுக்கும் உடனடியாக பட்டாவழங்க வேண்டும்.கருவடிக்கும்பபம் சண்முகா நகரில் 20ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை அடியாட்கள் வைத்து மிரட்டுவதை உடணடியாக தடுக்ககோரியும்,சுனாமியால் பாதிக்கப்பட்ட மூர்த்திகுப்பம்,புதுக்குப்பத்தை சேர்ந்த 34 மீனவகுடும்பங்களுக்கு பட்டாநகல் வழங்கியவர்களுக்கு உடணடியாக  இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பெரியார் சிலை எதிரே இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.பின்னர் சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பெரும் திரல் ஆர்ப்hட்டத்தை பிரதேச செயற்குழு உறுப்பினர் தா.முருகன்  முடித்து வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர்கள் சுமதி,ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் திரளாக பங்கேற்றனர்.
ஆட்சியர் உறுதி
ஆர்ப்பாட்டம் இறுதியில் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தா.முருகன் உள்ளிட்டோர்  மாவட்ட ஆட்சியர் தீபக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் பேசிய பின்னர் மேற்கொண்ட கோரிக்கைகள் தொடர்பாக  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Read more...

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,பிப்-2

 மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி   புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
மாக்சிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு கூட்டம் அன்மையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநிலத்தின் நிதிநிலமை குறித்தும்,விவசாய ம்,தொழில்,மீன்பிடி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.மத்திய அரசின் தவறான கொள்கைகலாளும்,மாநிலத்தின் முந்தைய காங்கிர° ஆட்சியும்,தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கைகாளும் கிராமப்புரத்திலும்,நகர்புறத்திலும் ஏழ்மை அதிகரித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து வாங்கிய கடன்தொகை மட்டும் ரூ.4761கோடியாக உயர்ந்துள்ளது.இதற்கு மாநில அரசு ரூ.58கேடி வட்டியாக செலுத்தப்படுகிறது. யூனியன் பிரதேசம்  என்பதால் ஏற்கனவே அளித்துவந்த 70சதவீதம் மாண்ய தொகையில் இருந்து தற்போது 30சதவீதம் மாண்ய தொகை மட்டுமே வழங்கப்படுகிறது.இதனால் மாநிலத்தின் நிதிதேவை அதிகரித்துள்ளது.பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் இந்த அரசு செயல்படுத்தவில்லை.ஒரு பக்கம் கூட்டுறவு மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணி  செய்து வரும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கபடவில்லை.புதியதாக தேர்வு செய்யப்பட்ட எல்.டி.சி,யூ.டி.சி,ஆசிரியர் பணியிடங்களில் இன்னும் ஆட்களை நியகிக்கப்படவில்லை. இது ஒருபக்கம் இருந்தாலும் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட பாதாளசாக்கடை திட்டம்,குப்பை தூர்வார தனியாரிடம் ஒப்படைத்தில் மிகப்பெறும் ஊழல் நடைபெற்றுள்ளது.

இதனால்   மாநிலத்தின் நிதி சுமையை சரிகட்ட  வரிகள் மூலம் வசூலிக்க மாநில அரசு  மக்கள் தலையில் பெரும் சுமையை சுமத்தியுள்ளது.
ஏற்கனவே கோடிகணக்கில் மிக்பாக்கி வைத்துள்ளவர்களிடம் மின்கட்டணத்தை வசூலிக்காமல், தற்போது குடிசை வீடுகள் முதல் பெரும் தொழிற்சாலைகள் வரை இரண்டு மடங்காக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
எனவே மத்திய அரசு நிதி வழங்குவதில் பாராபட்சமாக நடந்துகொள்வதை கண்டித்தும்,மாநிலத்தின் மொத்த கடன்தொகையை தள்ளுபடி செய்யவும்,சிறப்பு மாநில அந்தஸ்த்து உடனே வழங்க வேண்டும் என்பன கோரிக்கைகளை விலியுறுத்தி பிப்ரவரி 8ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பெருமாள் கூறினார்.பேட்டியின் போது செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமட்டி செயலாளர் பிரபுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com