புதுச்சேரி,பிப்-25
மாற்று பாதைக்கான போர் முழக்கமாய் பிரச்சாரம் புதுச்சேரியில் துவங்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்பில் மாற்று கொள்கைகளை முன்வைத்து
அகில இந்திய பிரச்சார பயணம் நான்கு திசைகளில் இருந்து ஞாயிரன்று
துவங்கியது.
இதன் துணைப்பிரச்சாரம் புதுச்சேரி,கடலுர்,விழுப்புரம்,திருவண்ணாமாலை ஆகிய மாவட்டங்களில்திங்களன்று (பிப்-25) துவங்கி பிப்ரவரி 28வரை நடைபெறுகிறது.இறுதியாகவிழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இத்துணைப்பிரச்சார துவக்கவிழா புதுச்சேரியில் திங்களன்று (பிப்-25) துவங்கியது.
முத்தியால்பேட்டை காந்திவீதியில் துவங்கிய இப்பிரச்சாரத்திற்கு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை
தாங்கினார். தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பிரச்சாரத்தை
துவக்கி வைத்து பேசினார்.கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்
என்.குணசேகரன்,மாநிலக்குழு உறுப்பினர் சாமூவேல்ராஜ்,திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எம்.வீரபத்திரன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்
எம்.சிவக்குமார்,கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
ரமேஷ்பாபு,உதயகுமார்,இந்திய மாணவர் சங்க தமிழ்மாநில தலைவர்
கே.எஸ்.கனகராஜ், பிரதேசக் செயற்குழு உறுப்பினர்
தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,நிலவழகன்,சுமதி,முத்தியாள்பேட்டை
கிளை செயலாளர் சரவணன் உளிட்ட திரளானோர் இப்பிரச்சாரத்தில்
பங்கேற்றனர்.முத்தியால்பேட்டையில் துவங்கிய பிரச்சாரம்
இலாஸ்பேட்டை,முத்திரையர்பாளையம்,வில்லியனூர்,மதகடிப்பட்டு,பாகூர்
உள்ளிட்ட பகுதிகளில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.முன்னதாக புதுவை
சப்தர்ஹஸ்மி கலைக்குழுவின் கிராமிய பாடல் நிகழ்சி நடைபெற்றது.
உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மதகடிப்பட்டு
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் துவங்கிய மாற்று பதைக்கான போர் முழக்கமாய் பிரச்சாரம் புதுச்சேரியில் எல்லையான மதகடிப்பட்டுக்கு வந்த பிரச்சாரபயணத்தை கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ்,என்.குணசேகரன்,மாநிலக்குழு உறுப்பினர்கள் சாமூவேல்ராஜ்,ஆனந்தன்,மாவட்ட செயலாளர்கள் பெருமாள்,வீரபத்திரன்,பிரதேச நிர்வாகிகள் கலிவரதன்,உலகநாதன்,உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
