புதுச்சேரி,பிப்-8
மக்கள் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசை எதிர்த்து போராடி தான் நிதி பெற வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமியை என்.குணசேகரன் கேட்டு கொண்டார்.
புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். நீண்ட காலமாக உள்ள புதுச்சேரியின் கடன் ரூ.4ஆயிரத்தி 700கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழு சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.
என்.குணசேகரன்
இப்போராட்டத்திற்கு கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் போராட்டத்தில் பங்கேற்று பேசுகையில்,
தொழில் வளர்ச்சி இல்லாத பீகார்,உ.பி போன்ற வட மாநிலங்களில் அம்மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து வாங்கிய கடன்களை கடந்த காலங்களில் மத்திய அரசு தள்ளுபடி செய்யதுள்ளது. எனவே அத்தகைய தொழில் வளர்ச்சி இல்லாத புதுச்சேரியிலும் இந்த கடன்களை மத்திய காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் மறுத்து வருகிறது.இதே நிலை கடந்த காலங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு நேர்ந்தது.அப்போதைய முதல்வர் தோழர் ஜோதிபாசு மத்திய காங்கரஸ் அரசை எதிர்த்து மக்களை திரட்டி போராடி போராடி தான் நிதியை பெற்றார்.புதுச்சேரியில் உள்ள 12லட்சம் மக்களின் வாழ்வாதார பிரச்சனை எனவே முதல்வர் ரங்கசாமி மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரiசை எதிர்த்து மக்களை திரட்டி போராட முன்வரவேண்டும்.அத்தகைய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றார்.
புதுச்சேரி மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் ரங்கசாமி வெறும் அதிகாரிகளிடம் மட்டுமே ஆலோசனை கேட்பதற்கு மாறாக பொருளாதார வள்ளுநர்களிடம் ஆலோசனைகளை கேட்க வேண்டும். அத்தகைய ஆலோசனைகளை ஏற்க முன் வந்தால் பொருளாதார நிபுனர்களை மார்க்சிஸ்ட் கட்சி அடையாளம் காட்ட தயாராக உள்ளது.
எனவே புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உறுதுனையாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழு வரும் பிப்ரவரி 18ல் முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து இப்பிரச்சனைகளுக்கு மாற்று ஆலோசனைகளை வழங்க உள்ளது.இச்சந்திப்பில் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணனும் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு என்.குணசேகரன் பேசினார்.
முன்னதாக செயற்குழு உறுப்பினர் தா.முருகன் பேசினார்.செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,கலிவரதன்,நிலவழகன்,ராமச்சந்திரன்,சுமதி இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,முருகையன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.