| புதுச்சேரி,ஜன-31 குடியிருக்கும் இடத்திலேயே இலவச மணைப்பட்டா வழங்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி கோவிந்தசாலை நகராட்சிக்கு சொந்தமான சதூர்த்தி வினாயகர் கோவில் நிலத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு உடணடியாக பட்டா வழங்க வேண்டும்.முத்தியால் பேட்டை சோலைநகர் கசாப்புகாரன் தோப்பில் குடியிருக்கும் மக்களுக்கும்,இலாஸ்பேட்டை சென்பக வினாயகர் கோவில் தெருவில் வசித்து வரும் மக்களுக்கும் உடனடியாக பட்டாவழங்க வேண்டும்.கருவடிக்கும்பபம் சண்முகா நகரில் 20ஆண்டுகளாக வசித்து வரும் மக்களை அடியாட்கள் வைத்து மிரட்டுவதை உடணடியாக தடுக்ககோரியும்,சுனாமியால் பாதிக்கப்பட்ட மூர்த்திகுப்பம்,புதுக்குப்பத்தை சேர்ந்த 34 மீனவகுடும்பங்களுக்கு பட்டாநகல் வழங்கியவர்களுக்கு உடணடியாக இடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி பெரியார் சிலை எதிரே இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.பின்னர் சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பெரும் திரல் ஆர்ப்hட்டத்தை பிரதேச செயற்குழு உறுப்பினர் தா.முருகன் முடித்து வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர்கள் சுமதி,ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்கள் திரளாக பங்கேற்றனர். ஆட்சியர் உறுதி ஆர்ப்பாட்டம் இறுதியில் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,தா.முருகன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் தீபக்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்று கொண்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் பேசிய பின்னர் மேற்கொண்ட கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். |
Saturday, February 2, 2013
குடியிருக்கும் இடத்திலேயே இலவச மணைப்பட்டா வழங்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
