மாநிலத்தின் உரிமைகளை பரித்து கொள்ளும் ஆட்சியாக தான் மத்திய ஆட்சிஉள்ளது என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பிகுற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி,பிப்-25
மாநிலத்தின் உரிமைகளை பரித்து கொள்ளும் ஆட்சியாக தான் மத்திய ஆட்சிஉள்ளது என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பிகுற்றம்சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வு ,இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய
அரசை கண்டித்து மாற்று பாதைக்கான போர் முழக்க பிரச்சார பயணத்தின்
துணைப்பிரச்சாரம் துவக்கவிழா பொதுக்கூட்டம் புதுச்சேரியில்
நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச
செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.நகரகமிட்டி செயலாளர்
என்.பிரபுராஜ் வரவேற்புரையாற்றினார்.
இப்பிரச்சார பொதுக்கூட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு
உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி துவக்கி வைத்து பேசுகையில்,
இந்திய பெருமுதலாளிகளுக்கு ஆளுகின்ற மத்திய காங்கிரஸ் அரசு பெரும்பாளன
இடத்தை ஒதுக்கி தருகிறது.ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை கடந்தும்
ஏழை எளிய மக்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை.53சதவீதம் மக்களுக்கு
கழிப்பரை இல்லை,39சதவீதம் பேருக்கு சுத்தமான உணவிகளை தயாரிக்க சமையல்
கட்டு இல்லை.சரியான சுகாதாரம் கிடைக்காததால் ஒரு நிமிடத்திற்கு நாட்டில்
பிறக்கும் 218 குழந்தைகள் இறக்கும் கொடுமை உள்ளது.தமிழகத்தில் மட்டும்
50சதவீதம் பெண்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளது.இத்தகைய சூழ்நிலையில் தான்
இன்றைக்கு தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலையை மத்திய ஆட்சியாளர்கள்
ஏற்படுத்தியுள்ளனர்.ஒரு பக்கம் மாநில அதிகாரத்தை பரித்து கொள்ளும் மத்திய
அரசு அனைத்து வசதிகளையும் மாநில அரசுகளே நிறைவேற்றி கொள்ளவேண்டும் என்று
மாநில உரிமைகளை பரித்து கொண்டு செயல்படுகிறது.இத்தகைய மத்திய
ஆட்சியாளர்களின் கொள்கைகளை கண்டித்தும் மாற்று கொள்கைகளை முன்வைத்தும்
மார்க்சிஸ்ட் கட்சி மக்களை சந்திக்கும் இந்த தேசம் தழுவிய பிரச்சார
இயக்கத்தை துவக்கியுள்ளது.
என்.குணசேகரன்.
கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்பேசுகையில்,இந்த தேசத்தின் நான்கு முனைகளில் இருந்து இன்றைய தினம்
இப்பிரச்சாரம் துவங்கியுள்ளது.புதிய தாராளமய கொள்கைகளை அமல்படுத்தி 23
ஆண்டுகள் இன்றைக்கு கடந்துள்ளது.இந்த கொள்கைகளால் நாட்டின் ஏழ்மை
அதிகரித்துள்ளது.பெரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு பன்மடங்குகளாக
உயர்ந்து நாட்டின் வளங்கள் அனைத்தும் அவர்களிடத்தில் அடமானம்
வைக்கப்பட்டுள்ளது.இந்த பெரும் முதலாளிகளுக்கு தான் மன்மோகன் சிங் அரசு
ஐந்து லட்சம் கோடி வரிசலுகைகள் வழங்கியுள்ளது.நாட்டின் வேலையில்லா
திண்டாட்டம் ஒருபக்கம் தலைவிரித்தாடும் நிலையில் தமிழகத்தில் 80லட்சம்
பேரும்,புதுச்சேரியில் 2லட்சம் பேரும் வேலைக்காக காத்திருக்கும்
நிலையில் இந்த வரிசலுகைகள் வழங்கியிருப்பது யாருக்கான அரசு என்ற கேள்வி
தற்போது எழுந்துள்ளது.2ஜி ஸ்பெக்டரம் ஊழல் துவங்கி இன்றைக்கு
எழுந்திருக்கும் ஹெலிகாப்பர் ஊழல் வரை நாட்டில் நடந்தவண்ணமாக
உள்ளது.விடுதலை போராட்டத் தலைவர்களுக்கு புகலிடமாக விளங்கிய இந்த
புதுச்சேரி மண் இன்றைக்கு ஊழல் செய்தவர்களின் புகலிடமாக விளங்குவது
வருத்தத்திற்குறியதாகும்.எனவே தான் இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி
இன்றைக்கு இந்த பிரச்சார பயணத்தை துவக்கியுள்ளது.
கே.கனகராஜ்
தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசுகையில்,மத்திய காங்கிரஸ்ஆட்சியாளர்கள் மக்கள் நலத்திட்டங்களை படிப்பபடியாக குறைத்து விட்டு
இன்றைக்கு உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடி திட்டம் கொண்டு
வரத்துடிக்கிறது.பெட்ரோல்,டீசல் மீதான வரிகளை உயர்த்தி சாதாரண மக்கள்
தலைiயில் விலைவாசி உயர்வை தினிக்கும் மத்திய அரசு காங்கிரஸ் அரசு ஏன் வரி
ஏய்ப்பவர்களிடம் வரியை வசுலிக்க மறுக்கிறது.வரிஏய்ப்பவர்களுக்காக கொண்டு
வரப்பட்ட சட்டத்தை ஏன் இந்த அரசு அமல்படுத்தவில்லை.அந்த சட்டத்தை இன்னும்
இரண்டு ஆண்டுகள் தள்ளிபோட காரணம் ஏன்?எனவே இந்த அரசு யாருடைய நலன்களை
பாதுகாக்கிறது.தமிழகத்தில் ஸ்டார்லைட் நிறுவனத்தில் நடந்த வரிஏய்ப்பு
தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.வரிகளை சாதாரண மக்கள்
பயண்படுத்தும் பொருட்கள் மீது சுமத்தி அவர்களின் வாழ்க்கையை
கேள்விகுறியாக்கும் மத்திய அரசு. எனவே தான் மக்களை திரட்டும் வகையில்
இந்த பிரச்சார பயணம் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.மாநிலக்குழு
உறுப்பினர் மூசா மற்றும்
புதுச்சேரி,கடலூர்,விழுப்புரம்,திருவண்ணாமலை,மாவட்ட செயற்குழு
உறுப்பினர்கள் முருகன்,நிலவழகன்,கலிவரதன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,ராமசாமி,சுமதி,ரமேஷ்பாபு,உதயகுமார்,குமார்
உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

