6வது நாளாக புதுவை மாணவர்கள் போராட்டம்..!
முல்லை பெரியார் அணை விவகாரம்
சோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்
அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி
6வது நாளாக புதுவை பல்கலைகழகத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்..!
புதுச்சேரி பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியார் அணை விவகாரம்
முல்லைப் பெரியாறு பிரச்சினையில், இரு மாநிலங்களுக்கிடையே பகைமை இல்லாமல், சுமூகமானத் தீர்வை காணவேண்டும்
சோசலிசத்தால் மட்டுமே மாற்ற முடியும்
வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார்
அமெ. தொழிலாளி வர்க்கத்தால் நொறுங்கி
உலக முதலாளித்துவத்தின் சூதாட்டமைய மாக திகழும் அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பகு தியை கைப்பற்றுவோம்
Sunday, April 28, 2013
Friday, April 26, 2013
காமராஜர் கல்வி உதவி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பத்திரிகைச் செய்தி
காமராஜர் கல்வி உதவி திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் சுயநிதி மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் செண்டாக் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி உதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. கல்வி உதவி நிதி வழங்குவதில் விதிமுறைகளை மீறியும், மாணவரல்லாதவர்களுக்க்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் நிதி வழங்கிய மிகப்பெரும் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் வங்கி அதிகாரிகள் உயர்கல்வித்துறை ஊழியர்கள் கூட்டுக் கொள்ளை அடித்துள்ளனர். இத்தகைய மிகப் பெரும் மோசடியில் துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இது குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மத்திய, மாநில அரசுகளின் நவீன தாராளமயக் கொள்கையின் விளைவாக மிகப்பெரும் ஊழல், முறைகேடுகள் பெருகிவருகிறது. மேலும் அதிகரித்து வரும் நுகர்வு கலாச்சாரம், எதைச் செய்தேனும் செல்வத்தை குவிப்பு போன்ற உணர்வுகளும் மேலோங்கி வருகிறது. மேற்படி செண்டாக் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் சீட்டு பிடிக்க துவங்கி அதனால் ஏற்பட்ட விளைவுகளால் இத்தகைய நிதி மோசடியில் துணிந்து ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே மின் துறையில் வசூலிக்கப்பட்ட மின்கட்டணத் தொகையை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்திய வகையில் நிதி முறைகேடும் நடந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது. சில அரசு ஊழியர் அதிகாரிகள் பணி நியமன நிபந்தனைகளை மீறி வட்டித்தொழில், சீட்டுத்தொழில், ரியல் எஸ்டேட் தொழில் என பலதொழில்கள் செய்துவருகின்றனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருமானம் – சொத்து விபரம் பற்றிய விவரங்களை அரசு பெறுவதில் உறுதி காட்டுவதில்லை. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின் நேர்மையற்ற அணுகுமுறையும் இத்தகைய தவறுகளுக்கு உதவி செய்கிறது. ஆகவே, ஊழல், முறைகேடுகளை தவிர்த்திட மாற்றுக்கொள்கையும், மேலிருந்து கீழ்வாரியாக உறுதியான நடவடிக்கையும் தேவை என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.
மாநில அரசு செண்டாக் மாணவர்களுக்கு காலம் கடந்து நிதி உதவி வழங்குவது, சில நேரங்களில் ஒரு பகுதி மாணவர்களுக்கு மட்டும் வழங்குவது போன்ற நடைமுறை தவறுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. ஆகவே, காலதாமதமாக நிதி உதவி வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் அரசு நிதி உதவி வழங்காததால் தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களை நிர்பந்தித்து கட்டணத்தை வசூலிக்கின்றனர். இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
கடன் வாங்கி, சொத்துகளை விற்று படிக்க வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவதால், படிப்பை முடித்து பணிக்குச் செல்லும் இளைஞர்களிடம் இயல்பாகவே சமூகப் பொறுப்புணர்வை எதிர்பார்க்க முடியாது. இது சமூகத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, மாநில அரசு காலதாமதம் இல்லாமல் கல்வி உதவி நிதி உதவி வழங்கவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவும், நடந்துள்ள நிதி மோசடி குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
நூறு சதவீதம் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,ஏப்-24நூறு சதவீதம் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
300கோடிக்கு மேல் மின்சாரகட்டண உயர்வை மக்கள் மீது தினித்துள்ளதை உடனே ரத்து செய்ய வேண்டும்.மின்சாரத்தை தனியார் மயமாக்கும் வகையில் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் மின்சார சட்டம் 2003யை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும்.பெரிய தொழிற்சாலைகளில் கோடிக்கணக்கில் மின்பாக்கி வைத்துள்ள வசூலிக்க வேண்டும்.அறிவிக்கபடாத மின்வெட்டை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.
பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,எல்.கலிவரதன்,வே.கு.நிலவழகன்,இராமசாமி,ராமச்சந்திரன்,சுமதி மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,முருகையன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மின்கட்டண உர்வை எதிர்த்து முழுக்கமிட்டவாறு பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து ஊர்வளமாக வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tuesday, April 23, 2013
தீக்கதிர் பொன்விழா பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் ஒற்றுமை கலைவிழா
புதுச்சேரி,ஏப்-21
நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்து மே மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
தீக்கதிர் பொன்விழா பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் ஒற்றுமை கலைவிழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிங்காரவேலர் சிலை எதிரில் நடைபெற்ற இப்பொதுக்கூட்ட கலைவிழாவிற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.பிரதேச செயற்குழு உறுப்பினர் தா.முருகன் முன்னிலை வகித்தார்.தீக்கதிர் புதுச்சேரி பொருப்பாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஆர்.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று தீக்கதிர் முகவர்களையும்,திக்கதிர் ஊழியர்களையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார் பின்னர் அவர் பேசுகையில்,
உழைக்கும் மக்களின் நலன்களே முக்கியம் என்பதை பறைசாற்றி கொண்டிருக்கும் தீக்கதிர் நாளிதழில் ஆசிரியர் குழு முதல் முகவர்கள் வரை தங்களது நலனை விட உழைக்கும் மக்கள் நலன்களே முக்கியம் என்பதை வலியுறுத்தி செயல்பட்டு வருவது பாராட்டு குறியது.புதுச்சேரி பிரதேசத்தில் தீக்கதிர் வினியோகித்து மறைந்த தோழர் பி.இராமமூர்த்தி கட்சியின் இடைகமிட்டி,பிரதேசக்குழு உறுப்பினராக இருந்தாலும் தீக்கதிரை தனது இறுதி மூச்சு இருக்கும் வரை வாசகர்களிடம் வினியோகித்து வந்தார்.புதுச்சேரியில் தீக்கதிர் பதிப்பை துவக்க தனது சொந்த பணத்தில் ரூ.2லட்சம் தோழர் இராமமூர்த்தி வழங்கியுள்ளார்.புதுச்சேரிக்கேன்று பக்கங்களை அதிகரிக்கும் வேலையில் தீக்கதிர் சந்தாவை நாம் அதிகரிக்க வேண்டும் என்றார்.
சிறை நிரப்பும் போராட்டம்
புதுச்சேரியில் உண்மையான எதிர்கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசால் வழங்கி வந்த 70சதவீதம் மாண்ய தொகை 30சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்து இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராடி வருகிறது.கடந்த பிப்ரவரி மாதம் மாநில முதல்வர் ரங்கசாமியை நானும் கட்சியின் பிரதேச தலைவர்களும சந்தித்து பேசும்போது மணம் திறந்து பேசுங்கள் என்றோம்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து புதிய கட்சி துவங்கிய ரங்கசாமி காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அப்படியே அமல்படுத்துவது என்ன நியாம் என்றார்?தற்போது மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் மக்களை பாதிக்கும்.ஒரு பக்கம் கொலை கொள்ளைகள் அதிகரித்து வருவாதாக இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.இதே நிலை நீடித்தால் புதுச்சேரி அரசுக்கு எதிராக மார்க்சி°ட் கட்சி மக்களை திரட்டி போராடும் என்றார்.மத்திய அரசின் நவீன தாரளமய கொள்கையின் அமல்படுத்துவதின் விளைவு இன்றைக்கு நீர்மேலான்மை சட்ட மசோதா கொண்டு வருகிறார்கள்.அம்மசோதாவின் கூறியுள்ளபடி நாம் குடிக்கும் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும்.எனவே தான் மத்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளை கண்டித்து கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய அளவில் நான்கு முனைகளில் இருந்து நடைபயணம் மேற்கொண்டோம்.தற்போது மே மாதத்தில் நாடு தழுவிய அளவில் சிறைநிரப்பும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது.
என்.குணசேகரன்
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில்,
1963 துவங்கிய தீக்கதிர் கடந்த 50ஆண்டுகளாக உழைக்கும் மக்களின் நலன்களை முன்வைத்து வெளி வந்து கொண்டிருக்கிறது.புதுச்சேரியில் தொழிலாளர்கள் எப்படி கொடிகளை தாங்கி கோரிக்கைகளுக்காக போராடுகிறார்களோ அதோபோல் தீக்கதிர் தனது பேனாவை பிடித்து வர்க்க போராட்டத்தை நடத்தி வந்துள்ளது.இன்றைக்கு முதலாளிகள் தங்களுக்கு பாதுகாப்புக்காக ஊடகங்களை வைத்து கொள்கிறார்கள்.அம்பானிக்கு மட்டும் 23 வகையான ஊடகங்கள் உள்ளது.இந்த ஊடகங்கள் என்ன சொல்ல நினைக்கிறார்களோ அதைதான் மக்கள் முடிவு செய்கிறார்கள்.தமிழகத்தில் மட்டும் 1கோடி பேர் வேலைக்காகாக பதிவு செய்து காத்து கொண்டிருக்கிறார்கள்.வேலையில்லாத்திண்டாட்டம் ஒருபக்கம் ஏற்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம்.இதை பற்றி எல்லாம் இந்த ஊடகங்கள் மக்களிடம் சொல்லமறுக்கிறார்கள். மகாராஷ்ட்ரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இந்த செய்தியை தமிழக ஊடகங்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்றார்.
இவ்விழாவில் தீக்கதிர் இணை ஆசிரியரும்,தமுஎகச வின் தலைவர்களுல் ஒருவருமான மதுக்கூர்.இராமலிங்கம்,சென்னை பொறுப்பாசிரியர் அ.குமரேசன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,கலிவரதன்,முருகன்,இராமசாமி,சுமதி,ராமச்சந்திரன் உள்ளிட்ட பிரதேசக்குழு,இடைகமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.புதுச்சேரி சப்தர்ஹஷ்மி கலைக்குழுவின் கிராமிய பாடல்களும்,அதிர்வு கலைக்குழுவின் தப்பாட்டமும்,அம்பைபூபதியின் கரகாட்ட சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தீக்கதிர் சந்தா
முன்னதாக இடைகுழுக்கள் வாரியாக வசூல் செய்யப்பட்ட 132 தீக்கதிர் ஆண்டு சந்தாவிற்க்கான தொகை ரூ.1லட்சத்து 26ஆயிரம் தொகையை தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
Saturday, April 20, 2013
சட்டவிரோதமாக ஏஎப்டி பஞ்சாலை கதவடைப்பு செய்துள்ளதை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி,ஏப்-19
சட்டவிரோதமாக ஏஎப்டி பஞ்சாலை கதவடைப்பு செய்துள்ளதை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,ஏஎப்டி,சுதேசி,பாரதி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு வ ழங்கிவந்த ஐடிஏ பஞ்சப்படியை நிறுத்திவைப்பது என்ற புதுச்சேரி அரசின் முடிவு துரதிஷ்டவசமானதாகும்.தொழிலாளர்கள் போராடி அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசே மீறுவதாகும்.1975 அவசர நிலைக் காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த பஞ்சப்படியை பிடித்தம் செய்வது ,போனஸ் சட்டத்தை மீறி போனஸை குறைத்து வழங்குவது என்ற அவசரகால நிலையை இன்று புதுச்சேரி அரசு அமல்படுத்து போல் உள்ளது.இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏஎப்டி பஞ்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கக்கு பலமாத சம்பளம் இன்னமும் கொடுக்கவில்லை தந்திரமாக விடுமுறை தருவது என்ற பெயரில் ஏஎப்டி ஐ மூடுகிறார்கள் முதல்வர் ரங்கசாமி அவர்களும், அமைச்சர் நாராயணசாமியும் நினைத்தால் மத்திய ஜவுளி மேம்பாட்டுக்கழகத்திடமிருந்து நிதியைப்பெற்று பஞ்சாலைகளை புனரமைக்க முடியும்.ஆனால் தங்களுக்குள் அரசியல் விளையாட்டுகளை விளையாடி தொழிலாளர்களை பழிவாங்குகிறார்கள்.பத்தாயிரத்த ிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வில் விளையாடுவதை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் வேடிக்கை பார்க்காது.
ஏஎப்டி ஆலையில் ஐடிஏ ஒப்பந்தம் போடப்பட்டு சுதேசி,பாரதி பஞ்சாலைகைளை விரிவுபடுத்தினார்கள் இன்று ஒடிக்கொண்டிருக்கும் சுதேசி பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஐடிஏ நிறுத்தப்படுவதாக அரசு அறிவிப்பது வஞ்சகமாகும்.எனவே சட்டவிரோத தந்திரமாக கதவடைப்பை நீக்கி ஏஎப்டி பஞ்சாலையை இயக்கவும்,மூன்று பஞ்சாலையை தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த ஐடிஏ வை தொடர்ந்து வழங்கவும் ஏஎப்டி தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம் பாக்கியை உடனே வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசை வலியுறுத்துவதோடு,பஞ்சாலை தொழிலாளர்கள் அரசின் துரோகத்தை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.
சட்டவிரோதமாக ஏஎப்டி பஞ்சாலை கதவடைப்பு செய்துள்ளதை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,ஏஎப்டி,சுதேசி,பாரதி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு வ ழங்கிவந்த ஐடிஏ பஞ்சப்படியை நிறுத்திவைப்பது என்ற புதுச்சேரி அரசின் முடிவு துரதிஷ்டவசமானதாகும்.தொழிலாளர்கள் போராடி அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அரசே மீறுவதாகும்.1975 அவசர நிலைக் காலத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த பஞ்சப்படியை பிடித்தம் செய்வது ,போனஸ் சட்டத்தை மீறி போனஸை குறைத்து வழங்குவது என்ற அவசரகால நிலையை இன்று புதுச்சேரி அரசு அமல்படுத்து போல் உள்ளது.இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஏஎப்டி பஞ்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கக்கு பலமாத சம்பளம் இன்னமும் கொடுக்கவில்லை தந்திரமாக விடுமுறை தருவது என்ற பெயரில் ஏஎப்டி ஐ மூடுகிறார்கள் முதல்வர் ரங்கசாமி அவர்களும், அமைச்சர் நாராயணசாமியும் நினைத்தால் மத்திய ஜவுளி மேம்பாட்டுக்கழகத்திடமிருந்து நிதியைப்பெற்று பஞ்சாலைகளை புனரமைக்க முடியும்.ஆனால் தங்களுக்குள் அரசியல் விளையாட்டுகளை விளையாடி தொழிலாளர்களை பழிவாங்குகிறார்கள்.பத்தாயிரத்த
ஏஎப்டி ஆலையில் ஐடிஏ ஒப்பந்தம் போடப்பட்டு சுதேசி,பாரதி பஞ்சாலைகைளை விரிவுபடுத்தினார்கள் இன்று ஒடிக்கொண்டிருக்கும் சுதேசி பாரதி பஞ்சாலை தொழிலாளர்களுக்கும் ஐடிஏ நிறுத்தப்படுவதாக அரசு அறிவிப்பது வஞ்சகமாகும்.எனவே சட்டவிரோத தந்திரமாக கதவடைப்பை நீக்கி ஏஎப்டி பஞ்சாலையை இயக்கவும்,மூன்று பஞ்சாலையை தொழிலாளர்களுக்கு வழங்கிவந்த ஐடிஏ வை தொடர்ந்து வழங்கவும் ஏஎப்டி தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம் பாக்கியை உடனே வழங்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசை வலியுறுத்துவதோடு,பஞ்சாலை தொழிலாளர்கள் அரசின் துரோகத்தை எதிர்த்து போராட முன் வரவேண்டும்.Wednesday, April 17, 2013
மாநில என்.ஆர்.காங்கிரஸின் அநியாய மின் கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
புதுச்சேரி,ஏப்-16
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரி அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்து விற்ற வருவாயில் ரூ.306.6 கோடி பற்றாக்குறை ஏற்படுவதாகவும்இ பற்றாக்குறையை ஈடுசெய்ய மின்கட்டணத்தை உயர்த்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மனுசெய்திருந்தது. மேற்படி மனுவில்இ அரசு சார்பில் முன்வைக்கபட்ட உத்தேச மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மின் கட்டண உயர்விற்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தியிருந்தது. இதன் மூலம் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மின் கட்டண உயர்வை தவிர்ப்பதற்கு மாற்றுவழிகளை சிந்திக்காமல் ஈவிரக்கமற்ற முறையில் மக்கள் மீது மின்கட்டண உயர்வை திணிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை வெளிப்படுத்தியது. இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கண் துடைப்புக்காக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திவிட்டு அநியாய மின்கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
புதுச்சேரி மின் துறை அறிவிப்பில் மின் கட்டண உயர்வுஇ கூடுதல் வரி விதிப்பு மற்றும் பல்வேறு சேவை கட்டணம் என சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றியுள்ளது. உதாரணமாகஇ ஏற்கெனவே வீட்டு உபயோகத்திற்கு மாதம் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தியவர்கள் மின்கட்டணம் ரூ.60இ நிரந்த சேவைக்கட்டணம் ரூ.10இ என மாதம் ரூ.70 மின்கட்டணமாக செலுத்திவந்தனர். தற்போது மின் துறை அறிவித்துள்ள கட்டண விகிதப்படி மாதத்திற்கு மின்கட்டணமாக ரூ.100இ நிரந்தர சேவைக்கட்டணம் ரூ.30இ கூடுதல் சேவைவரியாக 10மூ என்ற வகையில் ரு.13 மற்றும் மாதந்திர மீட்டர் வாடகை ரூ.10 என ரூ.153 மின்கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. அதாவது இருமடங்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி கொள்முதல் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப 3 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணம்
வசூலிக்கப்பட்டு வருகிறது. இவைத்தவிர புதிய இணைப்பு கட்டணம்இ சொந்தமாக மீட்டர் வாங்கினாலும் சோதனை கட்டணம் ரூ.150ஃ-இ புதிய மின் இணைப்புஇ இடமாற்றம்இ லைனை வேறு இடத்திற்கு மாற்றம் மின்பழுது நீக்குதல் உள்ளிட்ட மின் துறையின் அனைத்து பணிகளுக்கும் கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில என்.ஆர். காங்கிரஸின் இத்தகைய அநியாய மின்கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.
மாநில அரசு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அநியாய மின்கட்டன உயர்வை ரத்துசெய்திடவும்இ மின் துறையின் வருவாய் பற்றாக்குறையை குறைத்திட 25மூ மின்இழப்பை தவிர்ப்பதுஇ மின் நுகர்வோர்களின் வைப்புத் தொகையை வருவாய் முதலீட்டில் முதலீடு செய்வதுஇ மின் திருட்டை செய்த தொழில் நிறுவனங்களிடம் முழுமையான ஈட்டுத்தொகையை வசூலிப்பதுஇ அரசு சார் நிறுவனம் உள்ளிட்டவைகளிடமிருந்து நிலுவை கட்டணங்களை வசூலிப்பதுஇ நவீன நிலக்கரிச் சுரங்கத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
நிதிநெருக்கடியை காரணம் காட்டி மக்கள் மீது அநியாய மின்கட்டண உயர்வினை திணித்துள்ளது. மத்திய காங்கிரஸ் அரசும்இ மாநில என்.ஆர். காங்கிரச் அரசும் மாநில மக்களுக்கு எதிரான தாக்குதலை தொடுத்துள்ளன. இதற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும்இ ஜனநாயக இயக்கங்களும் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் அராஜகத்தை கண்டித்து இடதுசாரிகட்சிகள் சார்பில் புதுச்சேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,ஏப்-16
மேற்கு வங்கத்தில் மம்தா கட்சியின் அராஜகத்தை கண்டித்து இடதுசாரிகட்சிகள் சார்பில் புதுச்சேரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆயிரம் இடதுசாரிகட்சிகளின் அலுவலகத்தை சூரையாடிய திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், புகழ்பெற்ற பிரசிடென்சி பல்கலைகழக ஆய்வுகூடத்தை சூறையாடிய மம்தா கட்சியின் குண்டர்களை கைது செய்ய வேண்டும்.மாணவர் சங்க தலைவர் சுதித்தா குப்தா படுகொலை சம்பவம் குறித்து நீதி விசாணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இ;;ப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,பார்வர்டு கட்சியின் புதுவை மாநில தலைவர் முத்து ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.சிபிஐ,சிபிஎம் தலைவர்கள்,ஊழீயர்கள் திரளாக இப்போரட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அராஜகத்தை கண்டித்து முழக்கமிட்டனர்.

Monday, April 15, 2013
மருத்துவ நுழைவு தேர்வு தேதியை மாற்றிட வேண்டும் என ஜிப்மர் நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி,ஏப்-10

மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஜிப்மர் இயக்குனருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது வருமாறு,
ஒருங்கினைந்த பொறியியல் நுழைவுத்தேர்வுக்கான முதன்மை தேர்வு இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.நாடு முழுவதிலிருந்து சுமார் 17லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.மீண்டும் ஜுன் 2ல், இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது.அதே ஜுன் 2 ஆம்தேதியிலேயே ஜிப்மர் நிர்வாகம் மருத்துவகல்லூரிக்கான நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.இதனால் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்கள் மருத்துவம் அல்லது தகவல் தொழிற்நுட்ப உயர்கல்வியில், இரண்டில் ஒன்றை தேர்வு செய்து நுழைவு தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
கடந்த கல்வியாண்டில் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டபோது ஜிப்மர் கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வு தேதியை பொருத்தமான தேதியில் மாற்றியமைத்தது.ஆகவே ஜிப்மர் நிர்வாகம் மாணவர்களின் நலன்,மருத்துவதுறையின் வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

சகடப்பட்டு கிராமத்திற்கு சுடுகாடு அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி,ஏப்-10
சகடப்பட்டு கிராமத்திற்கு சுடுகாடு அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திருபுவனை அடுத்துள்ள சகடப்பட்டு கிராமத்தில் நீண்ட காலமாக சுடுகாடும் ,சுடுகாட்டுக்கான பாதை,எரிகொட்டகை,கருமகாரியம் நடத்தும் கொட்டகையை உடணடியாக அமைத்து தரவேண்டும்.மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.சகடப்பட்டு முதல் சன்னியாசிக்குப்பம் வரை தெரு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாய்த்து அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் வி.ரமேஷ் தலைமை தாங்கினார்.பிரதேச செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பி.உலகநாதன்,வி.சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி உறுப்பினர்கள் இராமமூர்த்தி,கருணாகரன்,விநாயகம்,உள்ளிட்ட திரளான அப்பகுதி பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக கொம்யூன் நிர்வாகத்தை கண்டித்து சவப்பாடை ஊர்வலம் நடத்த முயன்றபோது காவல்துறை அனுமதி மறுக்கவே கண்டன ஆர்ப்பாட்டம் மட்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Monday, April 8, 2013
தோழர். ஜி.இராமகிருஷ்ணன் இராமமூர்த்தியின் உருவபடத்திற்கு மாலை
புதுச்சேரி,ஏப்-5
பிரெஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியின் புதுச்சேரி முதுபெரும் தோழரும்,தீக்கதிர் நாளிதழின் புதுச்சேரி நிருபர் இரா.முருகனின் தந்தையுமான இராமு என்கிற இராமமூர்த்தி (83 வயது ) சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் காலமானார்.அவரது மறைவை யொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் இராமமூர்த்தி யின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.முன்னதாக ஜி.இராமக்கிருஷ்ணன் இராமமூர்த்தியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ்,வாலிபர் சங்க நிர்வாகிகள் ப.சரவணன்,ஆர்.சரவணன்,பாஸ்கர் மற்றும் காத்தவராயன்,ராமசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Read more...

கிராமப்புற வேலைத்திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் மீது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - CPIM Puducherry
புதுச்சேரி,ஏப்-6
கிராமப்புற வேலைத்திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் மீது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பது வருமாறு,
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்டகளில் 64ஆயிரத்தி773 குடும்பங்கள் பதிவு செய்து வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.ஒரு குடும்பத்திற்கு 100நாள் வேலை வழங்க 64,773 இலட்சம் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட வேண்டும்.நாளொன்றுக்கு கூலி 132 என்ற முறையில் ஆண்டுக்கு ரூ.85.49கோடி நிதி ஒதுக்க வேண்டும்.ஆனால் மத்திய காங்கர° அரசு புதுச்சேரிக்கு 2011-2012 நிதியாண்டில் ரூ.33.50கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.இது ஒதுக்கப்பட வேண்டிய தொகையில் 40சதவீதமாகும்.ஆனால் ஒதுக்கிய தொகையில் ரூ.13.50கோடி ரூபாய் கிராமப்புற வேலைத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டுள்ளது.
செலவிடப்பட்ட தொகையில் விதிமுறைகளை மீறி நிர்வாகச் செலவினத்திற்கு கூடுதலாக கூலி வழங்குவது அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் வேலை செய்யாமலே வேலை செய்ததாக கணக்கு காட்டி சம்பளம் வழங்குவது தொடர்கதையாகிவிட்டது.மேலும் கிராமப்புற ஏழை மக்களை அதிகாரிகள் அடிமைகளைப்போல் நடத்துகிற சாதிய கண்ணோட்டத்தோடு வேலை வாங்குகிற கொடுமை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. அதிகாரிகளின் இத்தகைய அணுகுமுறையை மார்கசி°ட் கட்சி கண்டிக்கிறது.மறுபுறத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் டிஆர்டிஏ துறை அதிகாரிகள் திட்டப்பணத்தை நவீன விஞ்ஞான முறையில் கொள்ளையடித்து வருகிறார்கள்.
குறிப்பாக வில்லியனூர் வட்டார வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்று வருகிறன்றன.வில்லியனூர்,மண்ணாடிப்பட்டு ஆகிய இரண்டு கொம்யூன் பஞ்சாய்த்துகளுக்கு உட்பட்ட 34 கிராமப்பஞ்சாய்த்துகளில் 2012-13 ஆம் நிதியாண்டில் சராசரி 31நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளன.ஆனால் இத்துறைக்கு தனியாக நான்கு சக்கர வாகனம் இருந்தும் 2012-13 ஆம் நிதியாண்டில் 139 நாட்களுக்கு வாடகைக் கார் பயன்படுததப்பட்டு ரூ.1லட்சத்து 19ஆயிரத்தி 500 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.அலுவலக விடுமுறை நாட்களிலும் வாடகை கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒரு தனியார் டிராவல்ஸில் இருந்து வாடகைக் கார் எடுக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டாலும் உண்மையயில் பழைய கார் ஒன்று கடனில் வாங்கப்பட்டு அதற்கான மாதாந்திர தொகையை செலுத்தி சொந்தமாக்கிக் கொள்வது எனற விஞ்ஞான மோசடி நடந்துள்ளது.
இதேப்போல் வில்லியனூர் பிடிஓ அலுவலகத்திற்கு தேவைக்கு அதிகமான கணிணி,மடிக்கணிணி,கேமரா திடடப்பணத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இதிலும் அதிகாரிகள் ஆதாயமடைந்துள்ளார்கள்.கிரமாப்புற வேலைத்திட்ட பயனாளிகள் பெயர் பட்டியலை கணிணியில் பதிவு செய்ய 3ஆப்ரேட்டர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.ஆனால் பயணாளிகளின் பட்டியலை கணிணிமூலம் பதிவு செய்து குறுந்தகடாக பெற்ற வகையில் சுய உதவிக் குழுக்களுக்கு 2010-2011மற்றும் 2011-2012 நிதியாண்டுகளில் மொத்தமாக ரூ.1,19,481 காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது.இப்பாடி வழங்கப்பட்ட தொகையை சம்மந்தப்பட்ட சுய உதவிக்குழு தலைவிகள் பணத்தை எடுத்து பிடிஓ அதிகாரிகளுக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர்.
கிரமாப்புற வேலை உறுதிட்டத்தில் மட்டுமல்ல டிஆர்டிஏ மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டட்ஙகளிலும் முறைகேடுகள் நடைபெறுகிறது.சுய உதவி குழுகளுக்கு பயிற்சி அளிப்பதாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி மொத்த தொகையிம் களவாடப்படுகிறது.வில்லியனூர் பிடிஓ ஆசீர்வாதத்தோடு நான்காம் பிரிவு பெண் ஊழியர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் 4.5 இலட்சம் கடன் பெற்றது குறித்து வழக்கு பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.
ஆகவே கிரமாப்புற வேலை திட்டம் மற்றும் வட்டார வளர்ச்சி முகவாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட அமுலாக்கம் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கிரமாப்புற வேலைத்திட்டத்தின் செலவு கணக்குகளை மத்திய தணிக்கைக் குழுவின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.மேலும் முந்தைய காங்கிரஸ் அரசானாலும் சரி தற்போதைய என்.ஆர் காங்கிரஸ் ஆனாலும் ஆண்டுக்கு 100நாள் வேலைஅளிப்பதற்கு மாறாக சராசரியாக 30நாட்கள் மட்டுமே வேலை அளிக்கிறது.
எனவே வேலை அளிக்காத காலத்திற்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்திடவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இத்திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்திட அனைத்து கிராமப்புற மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.
இவ்வாறு பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to:
Comments (Atom)
.jpg)