Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, April 15, 2013

மருத்துவ நுழைவு தேர்வு தேதியை மாற்றிட வேண்டும் என ஜிப்மர் நிர்வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,ஏப்-10
மருத்துவ  நுழைவு தேர்வு தேதியை  மாற்றிட வேண்டும் என ஜிப்மர் நிர்வாகத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 
மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள்  ஜிப்மர் இயக்குனருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது வருமாறு,
ஒருங்கினைந்த பொறியியல் நுழைவுத்தேர்வுக்கான முதன்மை தேர்வு இம்மாதம் 7ஆம் தேதி நடைபெற்றது.நாடு முழுவதிலிருந்து  சுமார் 17லட்சம் மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.மீண்டும் ஜுன் 2ல், இரண்டாம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது.அதே  ஜுன் 2 ஆம்தேதியிலேயே  ஜிப்மர் நிர்வாகம்  மருத்துவகல்லூரிக்கான நுழைவு தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.இதனால் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்கள் மருத்துவம் அல்லது தகவல் தொழிற்நுட்ப உயர்கல்வியில், இரண்டில் ஒன்றை தேர்வு செய்து நுழைவு தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
கடந்த கல்வியாண்டில் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டபோது ஜிப்மர் கல்லூரி  நிர்வாகம் மாணவர்களின் நலன் கருதி நுழைவுத் தேர்வு தேதியை பொருத்தமான தேதியில் மாற்றியமைத்தது.ஆகவே ஜிப்மர் நிர்வாகம் மாணவர்களின் நலன்,மருத்துவதுறையின் வளர்ச்சி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நுழைவுத் தேர்வு தேதியை மாற்றி அறிவித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com