புதுச்சேரி,ஏப்-21
நவீன தாராளமய கொள்கைகளை எதிர்த்து மே மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
தீக்கதிர் பொன்விழா பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் ஒற்றுமை கலைவிழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிங்காரவேலர் சிலை எதிரில் நடைபெற்ற இப்பொதுக்கூட்ட கலைவிழாவிற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.பிரதேச செயற்குழு உறுப்பினர் தா.முருகன் முன்னிலை வகித்தார்.தீக்கதிர் புதுச்சேரி பொருப்பாளரும் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஆர்.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று தீக்கதிர் முகவர்களையும்,திக்கதிர் ஊழியர்களையும் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார் பின்னர் அவர் பேசுகையில்,
உழைக்கும் மக்களின் நலன்களே முக்கியம் என்பதை பறைசாற்றி கொண்டிருக்கும் தீக்கதிர் நாளிதழில் ஆசிரியர் குழு முதல் முகவர்கள் வரை தங்களது நலனை விட உழைக்கும் மக்கள் நலன்களே முக்கியம் என்பதை வலியுறுத்தி செயல்பட்டு வருவது பாராட்டு குறியது.புதுச்சேரி பிரதேசத்தில் தீக்கதிர் வினியோகித்து மறைந்த தோழர் பி.இராமமூர்த்தி கட்சியின் இடைகமிட்டி,பிரதேசக்குழு உறுப்பினராக இருந்தாலும் தீக்கதிரை தனது இறுதி மூச்சு இருக்கும் வரை வாசகர்களிடம் வினியோகித்து வந்தார்.புதுச்சேரியில் தீக்கதிர் பதிப்பை துவக்க தனது சொந்த பணத்தில் ரூ.2லட்சம் தோழர் இராமமூர்த்தி வழங்கியுள்ளார்.புதுச்சேரிக்கேன்று பக்கங்களை அதிகரிக்கும் வேலையில் தீக்கதிர் சந்தாவை நாம் அதிகரிக்க வேண்டும் என்றார்.
சிறை நிரப்பும் போராட்டம்
புதுச்சேரியில் உண்மையான எதிர்கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசால் வழங்கி வந்த 70சதவீதம் மாண்ய தொகை 30சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்து இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராடி வருகிறது.கடந்த பிப்ரவரி மாதம் மாநில முதல்வர் ரங்கசாமியை நானும் கட்சியின் பிரதேச தலைவர்களும சந்தித்து பேசும்போது மணம் திறந்து பேசுங்கள் என்றோம்.காங்கிரஸ் கட்சியை எதிர்த்து புதிய கட்சி துவங்கிய ரங்கசாமி காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அப்படியே அமல்படுத்துவது என்ன நியாம் என்றார்?தற்போது மாநிலத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேலும் மக்களை பாதிக்கும்.ஒரு பக்கம் கொலை கொள்ளைகள் அதிகரித்து வருவாதாக இங்கு பேசியவர்கள் குறிப்பிட்டார்கள்.இதே நிலை நீடித்தால் புதுச்சேரி அரசுக்கு எதிராக மார்க்சி°ட் கட்சி மக்களை திரட்டி போராடும் என்றார்.மத்திய அரசின் நவீன தாரளமய கொள்கையின் அமல்படுத்துவதின் விளைவு இன்றைக்கு நீர்மேலான்மை சட்ட மசோதா கொண்டு வருகிறார்கள்.அம்மசோதாவின் கூறியுள்ளபடி நாம் குடிக்கும் தண்ணீர் விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும்.எனவே தான் மத்திய அரசின் நவீன தாராளமய கொள்கைகளை கண்டித்து கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய அளவில் நான்கு முனைகளில் இருந்து நடைபயணம் மேற்கொண்டோம்.தற்போது மே மாதத்தில் நாடு தழுவிய அளவில் சிறைநிரப்பும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தவுள்ளது.
என்.குணசேகரன்
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் பேசுகையில்,
1963 துவங்கிய தீக்கதிர் கடந்த 50ஆண்டுகளாக உழைக்கும் மக்களின் நலன்களை முன்வைத்து வெளி வந்து கொண்டிருக்கிறது.புதுச்சேரியில் தொழிலாளர்கள் எப்படி கொடிகளை தாங்கி கோரிக்கைகளுக்காக போராடுகிறார்களோ அதோபோல் தீக்கதிர் தனது பேனாவை பிடித்து வர்க்க போராட்டத்தை நடத்தி வந்துள்ளது.இன்றைக்கு முதலாளிகள் தங்களுக்கு பாதுகாப்புக்காக ஊடகங்களை வைத்து கொள்கிறார்கள்.அம்பானிக்கு மட்டும் 23 வகையான ஊடகங்கள் உள்ளது.இந்த ஊடகங்கள் என்ன சொல்ல நினைக்கிறார்களோ அதைதான் மக்கள் முடிவு செய்கிறார்கள்.தமிழகத்தில் மட்டும் 1கோடி பேர் வேலைக்காகாக பதிவு செய்து காத்து கொண்டிருக்கிறார்கள்.வேலையில்லாத்திண்டாட்டம் ஒருபக்கம் ஏற்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம்.இதை பற்றி எல்லாம் இந்த ஊடகங்கள் மக்களிடம் சொல்லமறுக்கிறார்கள். மகாராஷ்ட்ரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.இந்த செய்தியை தமிழக ஊடகங்கள் வெளியிட மறுக்கிறார்கள் என்றார்.
இவ்விழாவில் தீக்கதிர் இணை ஆசிரியரும்,தமுஎகச வின் தலைவர்களுல் ஒருவருமான மதுக்கூர்.இராமலிங்கம்,சென்னை பொறுப்பாசிரியர் அ.குமரேசன் ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன்,கலிவரதன்,முருகன்,இராமசாமி,சுமதி,ராமச்சந்திரன் உள்ளிட்ட பிரதேசக்குழு,இடைகமிட்டி செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.புதுச்சேரி சப்தர்ஹஷ்மி கலைக்குழுவின் கிராமிய பாடல்களும்,அதிர்வு கலைக்குழுவின் தப்பாட்டமும்,அம்பைபூபதியின் கரகாட்ட சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தீக்கதிர் சந்தா
முன்னதாக இடைகுழுக்கள் வாரியாக வசூல் செய்யப்பட்ட 132 தீக்கதிர் ஆண்டு சந்தாவிற்க்கான தொகை ரூ.1லட்சத்து 26ஆயிரம் தொகையை தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.



