Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, April 17, 2013

மாநில என்.ஆர்.காங்கிரஸின் அநியாய மின் கட்டண உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

0 comments
புதுச்சேரி,ஏப்-16

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    
    புதுச்சேரி அரசு மின்சாரத்தை கொள்முதல் செய்து விற்ற வருவாயில் ரூ.306.6 கோடி பற்றாக்குறை ஏற்படுவதாகவும்இ பற்றாக்குறையை ஈடுசெய்ய மின்கட்டணத்தை உயர்த்த இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மனுசெய்திருந்தது. மேற்படி மனுவில்இ அரசு சார்பில் முன்வைக்கபட்ட உத்தேச மின் கட்டண உயர்வில் எந்தவித மாற்றமும் செய்யாமல் மின் கட்டண உயர்விற்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தியிருந்தது. இதன் மூலம் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மின் கட்டண உயர்வை தவிர்ப்பதற்கு மாற்றுவழிகளை சிந்திக்காமல் ஈவிரக்கமற்ற முறையில் மக்கள் மீது மின்கட்டண உயர்வை திணிக்க வேண்டும் என்ற பிடிவாதத்தை வெளிப்படுத்தியது. இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கண் துடைப்புக்காக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்திவிட்டு அநியாய மின்கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. 

    புதுச்சேரி மின் துறை அறிவிப்பில் மின் கட்டண உயர்வுஇ கூடுதல் வரி விதிப்பு மற்றும் பல்வேறு சேவை கட்டணம் என சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றியுள்ளது. உதாரணமாகஇ ஏற்கெனவே வீட்டு உபயோகத்திற்கு மாதம் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தியவர்கள் மின்கட்டணம் ரூ.60இ நிரந்த சேவைக்கட்டணம் ரூ.10இ என மாதம் ரூ.70 மின்கட்டணமாக செலுத்திவந்தனர். தற்போது மின் துறை அறிவித்துள்ள கட்டண விகிதப்படி மாதத்திற்கு மின்கட்டணமாக ரூ.100இ நிரந்தர சேவைக்கட்டணம் ரூ.30இ கூடுதல் சேவைவரியாக 10மூ என்ற வகையில் ரு.13 மற்றும் மாதந்திர மீட்டர் வாடகை ரூ.10 என ரூ.153 மின்கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது. அதாவது இருமடங்காக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வை காரணம் காட்டி கொள்முதல் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப 3 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணம் 

வசூலிக்கப்பட்டு வருகிறது. இவைத்தவிர புதிய இணைப்பு கட்டணம்இ சொந்தமாக மீட்டர் வாங்கினாலும் சோதனை கட்டணம் ரூ.150ஃ-இ புதிய மின் இணைப்புஇ இடமாற்றம்இ லைனை வேறு இடத்திற்கு மாற்றம் மின்பழுது நீக்குதல் உள்ளிட்ட மின் துறையின் அனைத்து பணிகளுக்கும் கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில என்.ஆர். காங்கிரஸின் இத்தகைய அநியாய மின்கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. 

    மாநில அரசு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அநியாய மின்கட்டன உயர்வை ரத்துசெய்திடவும்இ மின் துறையின் வருவாய் பற்றாக்குறையை குறைத்திட 25மூ மின்இழப்பை தவிர்ப்பதுஇ மின் நுகர்வோர்களின் வைப்புத் தொகையை வருவாய் முதலீட்டில் முதலீடு செய்வதுஇ மின் திருட்டை செய்த தொழில் நிறுவனங்களிடம் முழுமையான ஈட்டுத்தொகையை வசூலிப்பதுஇ அரசு சார் நிறுவனம் உள்ளிட்டவைகளிடமிருந்து நிலுவை கட்டணங்களை வசூலிப்பதுஇ நவீன நிலக்கரிச் சுரங்கத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.

   நிதிநெருக்கடியை காரணம் காட்டி மக்கள் மீது அநியாய மின்கட்டண உயர்வினை திணித்துள்ளது. மத்திய காங்கிரஸ் அரசும்இ மாநில என்.ஆர். காங்கிரச் அரசும் மாநில மக்களுக்கு எதிரான தாக்குதலை தொடுத்துள்ளன. இதற்கு எதிராக அனைத்துப் பகுதி மக்களும்இ ஜனநாயக இயக்கங்களும் ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com