Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, April 26, 2013

நூறு சதவீதம் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஏப்-24
நூறு சதவீதம் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

300கோடிக்கு மேல் மின்சாரகட்டண உயர்வை மக்கள் மீது தினித்துள்ளதை உடனே ரத்து செய்ய வேண்டும்.மின்சாரத்தை தனியார் மயமாக்கும் வகையில் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் மின்சார சட்டம் 2003யை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டும்.பெரிய தொழிற்சாலைகளில் கோடிக்கணக்கில் மின்பாக்கி வைத்துள்ள வசூலிக்க வேண்டும்.அறிவிக்கபடாத மின்வெட்டை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.


புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை அலுவலகம் எதிரில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.

பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,எல்.கலிவரதன்,வே.கு.நிலவழகன்,இராமசாமி,ராமச்சந்திரன்,சுமதி மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,முருகையன்,தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மின்கட்டண உர்வை எதிர்த்து முழுக்கமிட்டவாறு  பழைய பேரூந்து நிலையத்தில் இருந்து ஊர்வளமாக வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com