Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, April 8, 2013

கிராமப்புற வேலைத்திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் மீது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - CPIM Puducherry

0 comments
புதுச்சேரி,ஏப்-6
கிராமப்புற வேலைத்திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் மீது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாநில அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறியிருப்பது வருமாறு,
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ்
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்டகளில் 64ஆயிரத்தி773 குடும்பங்கள் பதிவு செய்து வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது.ஒரு குடும்பத்திற்கு 100நாள் வேலை வழங்க 64,773 இலட்சம் மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட வேண்டும்.நாளொன்றுக்கு கூலி 132 என்ற முறையில் ஆண்டுக்கு ரூ.85.49கோடி நிதி ஒதுக்க வேண்டும்.ஆனால் மத்திய காங்கர° அரசு புதுச்சேரிக்கு 2011-2012 நிதியாண்டில் ரூ.33.50கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.இது ஒதுக்கப்பட வேண்டிய தொகையில் 40சதவீதமாகும்.ஆனால் ஒதுக்கிய தொகையில்  ரூ.13.50கோடி ரூபாய் கிராமப்புற வேலைத்திட்டத்தின் கீழ் செலவிடப்பட்டுள்ளது.

செலவிடப்பட்ட தொகையில் விதிமுறைகளை மீறி நிர்வாகச் செலவினத்திற்கு கூடுதலாக கூலி வழங்குவது அதிகாரிகளுக்கு வேண்டியவர்கள் வேலை செய்யாமலே வேலை செய்ததாக கணக்கு காட்டி சம்பளம் வழங்குவது தொடர்கதையாகிவிட்டது.மேலும் கிராமப்புற ஏழை மக்களை அதிகாரிகள் அடிமைகளைப்போல் நடத்துகிற சாதிய கண்ணோட்டத்தோடு வேலை வாங்குகிற கொடுமை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. அதிகாரிகளின் இத்தகைய அணுகுமுறையை மார்கசி°ட் கட்சி கண்டிக்கிறது.மறுபுறத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் டிஆர்டிஏ துறை அதிகாரிகள் திட்டப்பணத்தை நவீன விஞ்ஞான முறையில் கொள்ளையடித்து வருகிறார்கள்.
குறிப்பாக வில்லியனூர் வட்டார வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்று வருகிறன்றன.வில்லியனூர்,மண்ணாடிப்பட்டு ஆகிய இரண்டு கொம்யூன் பஞ்சாய்த்துகளுக்கு உட்பட்ட 34 கிராமப்பஞ்சாய்த்துகளில்  2012-13 ஆம் நிதியாண்டில் சராசரி 31நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளன.ஆனால் இத்துறைக்கு தனியாக நான்கு சக்கர வாகனம் இருந்தும் 2012-13 ஆம் நிதியாண்டில் 139 நாட்களுக்கு வாடகைக் கார் பயன்படுததப்பட்டு ரூ.1லட்சத்து 19ஆயிரத்தி 500 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.அலுவலக விடுமுறை நாட்களிலும் வாடகை கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஒரு தனியார் டிராவல்ஸில் இருந்து வாடகைக் கார் எடுக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டாலும் உண்மையயில் பழைய கார் ஒன்று கடனில் வாங்கப்பட்டு அதற்கான மாதாந்திர தொகையை செலுத்தி சொந்தமாக்கிக் கொள்வது எனற விஞ்ஞான மோசடி நடந்துள்ளது.
இதேப்போல் வில்லியனூர் பிடிஓ அலுவலகத்திற்கு தேவைக்கு அதிகமான கணிணி,மடிக்கணிணி,கேமரா திடடப்பணத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இதிலும் அதிகாரிகள் ஆதாயமடைந்துள்ளார்கள்.கிரமாப்புற வேலைத்திட்ட  பயனாளிகள் பெயர் பட்டியலை கணிணியில் பதிவு செய்ய  3ஆப்ரேட்டர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.ஆனால் பயணாளிகளின் பட்டியலை கணிணிமூலம் பதிவு செய்து குறுந்தகடாக பெற்ற வகையில் சுய உதவிக் குழுக்களுக்கு 2010-2011மற்றும் 2011-2012 நிதியாண்டுகளில் மொத்தமாக ரூ.1,19,481 காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது.இப்பாடி வழங்கப்பட்ட தொகையை சம்மந்தப்பட்ட சுய உதவிக்குழு தலைவிகள் பணத்தை எடுத்து பிடிஓ அதிகாரிகளுக்கு திருப்பிக் கொடுத்துள்ளனர்.
கிரமாப்புற வேலை உறுதிட்டத்தில் மட்டுமல்ல  டிஆர்டிஏ மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டட்ஙகளிலும் முறைகேடுகள் நடைபெறுகிறது.சுய உதவி குழுகளுக்கு பயிற்சி அளிப்பதாக பொய்யான ஆதாரங்களை உருவாக்கி மொத்த தொகையிம் களவாடப்படுகிறது.வில்லியனூர் பிடிஓ ஆசீர்வாதத்தோடு நான்காம் பிரிவு பெண் ஊழியர் சுய உதவிக்குழு அமைக்கப்பட்டதாக போலி ஆவணங்களை தயாரித்து வங்கியில் 4.5 இலட்சம் கடன் பெற்றது குறித்து வழக்கு பதிவு செய்யப்ப்ட்டுள்ளது.
ஆகவே கிரமாப்புற வேலை திட்டம் மற்றும் வட்டார வளர்ச்சி முகவாண்மை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட அமுலாக்கம் நடந்துள்ள முறைகேடுகள் குறித்த மாநில  என்.ஆர் காங்கிரஸ் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.கிரமாப்புற வேலைத்திட்டத்தின் செலவு கணக்குகளை மத்திய தணிக்கைக் குழுவின் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.மேலும் முந்தைய காங்கிரஸ் அரசானாலும் சரி தற்போதைய என்.ஆர் காங்கிரஸ் ஆனாலும் ஆண்டுக்கு 100நாள் வேலைஅளிப்பதற்கு மாறாக சராசரியாக 30நாட்கள் மட்டுமே வேலை அளிக்கிறது.
எனவே வேலை அளிக்காத காலத்திற்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுத்திடவும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.இத்திட்டத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைத் தடுத்திட அனைத்து கிராமப்புற மக்களும் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.
இவ்வாறு பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com