புதுச்சேரி,ஏப்-10
சகடப்பட்டு கிராமத்திற்கு சுடுகாடு அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திருபுவனை அடுத்துள்ள சகடப்பட்டு கிராமத்தில் நீண்ட காலமாக சுடுகாடும் ,சுடுகாட்டுக்கான பாதை,எரிகொட்டகை,கருமகாரியம் நடத்தும் கொட்டகையை உடணடியாக அமைத்து தரவேண்டும்.மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.சகடப்பட்டு முதல் சன்னியாசிக்குப்பம் வரை தெரு மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாய்த்து அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் வி.ரமேஷ் தலைமை தாங்கினார்.பிரதேச செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பி.உலகநாதன்,வி.சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி உறுப்பினர்கள் இராமமூர்த்தி,கருணாகரன்,விநாயகம்,உள்ளிட்ட திரளான அப்பகுதி பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக கொம்யூன் நிர்வாகத்தை கண்டித்து சவப்பாடை ஊர்வலம் நடத்த முயன்றபோது காவல்துறை அனுமதி மறுக்கவே கண்டன ஆர்ப்பாட்டம் மட்டும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.