Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, April 8, 2013

தோழர். ஜி.இராமகிருஷ்ணன் இராமமூர்த்தியின் உருவபடத்திற்கு மாலை

0 comments
புதுச்சேரி,ஏப்-5
பிரெஞ்சு இந்திய விடுதலை போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியின் புதுச்சேரி முதுபெரும் தோழரும்,தீக்கதிர் நாளிதழின் புதுச்சேரி நிருபர் இரா.முருகனின் தந்தையுமான  இராமு என்கிற இராமமூர்த்தி (83 வயது ) சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் காலமானார்.அவரது மறைவை யொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் இராமமூர்த்தி யின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.முன்னதாக ஜி.இராமக்கிருஷ்ணன் இராமமூர்த்தியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ்,வாலிபர் சங்க நிர்வாகிகள் ப.சரவணன்,ஆர்.சரவணன்,பாஸ்கர் மற்றும் காத்தவராயன்,ராமசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com