Pages

ShareThis

Powered by Blogger.
 
Saturday, April 30, 2011

மோட்டார் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சிஜடியூ

0 comments

புதுச்சேரி ஏப் 29
மோட்டார் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி சிஜடியூ உள்ளிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அறிவிப்பின்றி ஆட்டோ ஒன்றுக்கு வசூல் செய்த வாகண காப்பீட்டுத்தொகை ரூ.1633 லிருந்து ரூ.2633 என்ற அளவில் ரூ.1000 உயர்த்தியதை மத்திய அரசு திரும்பபெறவேண்டும்.பெட்ரோல்,ஆயில் விலை உயர்வை உடனே திரும்பபெறவேண்டும்.விதிமுறைகளை மீறி இயங்கும் இரண்டு சக்கர மோட்டார் வாடகை நிலையங்களை தடை செய்ய வேண்டும்.விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் மீட்டர் கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு சிஜடியூ ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனுவான் தலைமை தாங்கினார்.சங்கத்தின் கவுர தலைவர் தா.முருகன்,சிஜடியூ மாவட்ட செயலாளர் கே.முருகன்,தலைவர் ராஜாங்கம்,மணிவண்ணன்-(புமாஆஓச),சிவக்குமார்-(ஜஎன்டியூசி),பிராங்கிளின்-(எல்பிஎப்),ஏழுமலை-ஏடியூ,சந்திரசேகர்-ஏஜடியூசி,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் அனைத்து சங்கங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள்,நிர்வாகிகள் திரளாக பங்கேற்று முழக்கமிட்டனர்.
Read more...
Wednesday, April 27, 2011

முழு கடை அடைப்பு போராட்டம் மக்கள் ஆதரவோடு அமைதியாக நடைபெற்றது

0 comments


புதுச்சேரி ஏப் 27
புதுச்சேரி கவர்னரை திரும்பபெறக்கோரி முழு கடை அடைப்பு போராட்டம் மக்கள் ஆதரவோடு அமைதியாக நடைபெற்றது.
கருப்பு பண மோசடி மன்னன் ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் எடுக்க பரிந்துரைத்த குற்றத்தில் சிக்கியுள்ள புதுச்சேரி கவர்னர் இக்பால் சிங் கை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.மேலும் புதுச்சேரி அமைச்சரவைக்கே தெரியாமல் தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு மருத்துவ கல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியிருப்பது.அரியாங்குப்பத்தில் 40 ஏக்கரில் குருத்வாரகோவில் கட்ட இடம் ஒதுக்கியது என பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கவர்னர் இக்பால்சிங் கை உடனடியாக திரும்ப பெற வலியுருத்தி புதன்கிழமை காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு அதிமுக,சிபிஎம்,சிபிஜ,தேமுதிக,பார்வர்டு பிளாக்,ஆர்எஸ்பி,பிஎஸ்பி,மற்றும் ஜனநாயக அமைப்புகள் அறைகூவல் விடுத்திருந்தனர்.
கடைகள் அடைப்பு
பந்த் போராட்டத்தை யொட்டி புதுச்சேரி நகரை சுற்றியுள்ள நேருவீதி,அண்ணாசாலை,காந்தி வீதி,மறைமலைஅடிகள் சாலை,காமராஜர் சாலை ஆகிய பகுதியில் உள்ள கடைகள் வர்த்தக நிறுவனங்கள்,திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது. தனியார்பேரூந்துகல் முற்றிலும் இயக்கபடவில்லை ,ஆட்டோ,டேம்போக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.வில்லியனுhர்,பாகூர்,திருக்னுhர் உள்ளிட்டகிராமப்புற பகுதிகளிலும் மக்கள் கடைகளைஅடைத்து போராட்டத்திற்கு ஆதரவலித்தனர்.ஒரு சில தமிழக அரசு பேருந்துகள் மட்டுமே காவல் துறை பாதுகாப்போடு புதுவை எல்லை வரை இயக்கப்பட்டது.

மறியலுக்கு தடை
பந்த் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிரபித்திருந்தார்.அதனால் ஊர்வலமாக சென்று மறியல் போராட்டம் செய்வதற்கு கட்சி தலைவர்களுக்கு அனுமதி அளிக்கபடவில்லை.மக்கள் பேராதரவோடு அமைதியாக பந்த் போராட்டம் நடைபெற்றதற்கு அதிமுக,சிபிஎம்,சிபிஜ,தேமுதிக,உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடைவியாபாரிகளுக்கும் அனைத்து பகுதிமக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.மக்கள் போராட்டத்திற்கு மதிப்பு அளித்து மத்திய அரசு கவர்னரை உடனே திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இதேப்போல் காரைக்கால்,மாஹே,யாணத்திலும் பந்த் போராட்டம் அமைதியாக நடைபெற்றது.
கவர்னர் டெல்லிக்கு விரைவு
இந்நிலையில் கவர்னரை அமலாக்கபிரிவு அதிகாரிகள் இரண்டு நாட்களாக புதுச்சேரியில் விசாரணை நடத்தினர்.செவ்வாய் கிழமை இரவு 8.45 மணி வரை விடியோ கான்பிரன்சிங் மூலம் அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்ற உடன் 45 நிமிடங்கள் கழித்து கவர்னர் இக்பால்சிங் டெல்லி செல்வதற்க்காக தனது முகத்தை கூட பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாத வண்ணம் மறைத்தவாறு காரில் சென்னைக்கு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் உள்ளது.
Read more...

காப்பீட்டு நிருவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

0 comments


ஆட்டோவிற்கான வாகணகாப்பீட்டு தொகை ரூ1700 லிருந்து ரூ.2700ஆக உயர்த்தியதை கண்டித்து சிஜடியூ ஆட்டோ சங்கம் சார்பில் புதுச்சேரி காந்திவீதியில் உள்ள நீ இந்தியா காப்பீட்டு நிருவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
Read more...
Monday, April 25, 2011

நன்றி தெரிவிக்கும் பிரச்சார ஊர்வலம்

0 comments

புதுச்சேரி ஏப் 25
இலாஸ்பேட்டை தொகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்காக மார்ச்சிஸ்ட் கட்சி தொடர்ந்துபோராடும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட சி.எச்.பாலமோகனனுக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரச்சார ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்-24) நடைபெற்றது.பெத்துசெட்டிபேட்டையிலிருந்து துவங்கிய பிரச்சாரத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.வேட்பாளர் பாலமோகனன் திறந்த வாகனத்தில் நின்றவாரு வாக்களித்த மக்களுக்கு வீதி வீதியாக நன்றி கூறினார்.
மேலும் பாலமோகனன் பேசுகையில் இத்தொகுதியில் போட்டியிட்டவர்கள் ஒரு வாக்களாருக்கு ரூ.1000முதல் ரூ 3000 ஆயிரமும் கிப்ட் டோக்கன் என லஞ்சமாக கொடுத்துள்ளனர்.இதற்கு மத்தியில் மார்க்சி°ட் கட்சி பனபலத்தை எதிர்த்தும் ஊழலற்ற நேர்மையான அரசியலுக்காக போட்டியிட்டது.தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் மார்ச்சிஸ்ட் கட்சி மக்களின் அடிப்படை பிரச்சனைக்கு தொடர்ந்து இத்தொகுதியில் குரல் கொடுக்கும் என்றார்.இப்பிரச்சாரத்தில் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் சீனுவாசன்,லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளனோர் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அசோக்நகர்,சாந்திநகர்,குறிஞ்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் இப்பிரச்சாரம் நடைபெற்றது.
Read more...
Saturday, April 23, 2011

புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங் கை உடனே திரும்பபெறக்கோரி அனைத்துக்கட்சிகள் சார்பில் ஏப்ரல் 27 ல் பந்த் போராட்டம்

0 comments

புதுச்சேரி ஏப் 23
புதுச்சேரி ஆளுநர் இக்பால்சிங் கை உடனே திரும்பபெறக்கோரி அனைத்துக்கட்சிகள் சார்பில் ஏப்ரல் 27 ல் பந்த் போராட்டம்.
முதலியார் பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை (ஏப்-23) நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்,அவைத்தலைவர் பாண்டுரங்கன்,சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,சிபிஜ மாநில செயலாளர் நாரா.கலைநாதன்,தேசியக்குழு உறுப்பினர் விசுவநாதன்,ராமமூர்த்தி,N R.காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பாலன்,ஆர்.எஸ்.பி மாநில நிர்வாகி சந்திரசேகர்,கெ.பிஎஸ்பி தலைவர் தங்ககலைமாறன்,தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் லோகுஅய்யப்பன்,கிராமபஞ்சாய்த்து கூட்டமைப்பு தலைவர் ஜெகநாதன்,உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.பின்னர் கூட்டாக தலைவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிகையில்,
கருப்பு பண விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க ஆவணம் செய்தகுற்றத்திலும் ,தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு காரைக்காலில் மருத்துவ கல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழை புதுச்சேரி அமைச்சரவைக்கே தெரியாமல் வழங்கியுள்ளது.என பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் கை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என வலியுருத்தி ஏப்ரல்-27 ல் புதுச்சேரி-காரைக்கால்,மாஹே,யாணம் ஆகிய நான்கு பிரதேசங்களிலும் முழு கடைஅடைப்பு போராட்டம் நடைபெறும்.இப்போரட்டத்திர்க்கு பிறகும் ஆளுநர் திரும்ப பெற வில்லை என்றால் குடியரசு தலைவரை சந்தித்து இக்கட்சிகளின் சார்பில் வலியுருத்தப்படும்.
மேலும் முழு கடைஅடைப்பு போராட்டத்தை விளக்கி ஏப்ரல்-25,26 ல் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும்.இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க அனைத்து கட்சி தலைவர்கள் கேட்டுகொண்டனர்.இவ்வாறு கூறினார்கள்
Read more...

அதிகாரத்தை தவராக பயன்படுத்தியுள்ள புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால்சிங் பதவி விலககோரி

0 comments

புதுச்சேரி ஏப் 22
அதிகாரத்தை தவராக பயன்படுத்தியுள்ள புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால்சிங் பதவி விலககோரி மார்ச்சிஸ்ட் கட்சி சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம்.
வரிஏய்பில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைத்த குற்றத்தில் சிக்கியுள்ள புதுச்சேரி துனைநிலை ஆளுநர் இக்பால் சிங் கை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவெண்டும்.புதுச்சேரி அமைச்சரவைக்கு தெரியாமல் தன்னிச்சையாக தனது மகன்கள் இடம் பெற்றுள்ள சவுத் எஜிகேஷ்னல் டிரஸ்டிக்கு, காரைக்காலில் மருத்துவகல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ள ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும். தவரும் பட்சத்தில் முதல்வர் வைத்தியலிங்கம் பதவி விலக வேண்டும்.மோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டுள்ளோர் மீது புதுச்சேரி அரசு வழக்கு பதிவு செய்ய வெண்டும். என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கவர்நர் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை (ஏப்-22)கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்க்கு செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வி.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றுகையில் ,முன்னால் முதல்வர் ரங்கசாமி ஆட்சியின் போது ஜந்து அமைச்சர்களும் எங்களை கேட்காமல் கோப்புகளில் கையெழுத்து போடுகிறார் என்று ரங்கசாமி மீது முதல்வர் வைத்தியலிங்கம் உட்பட குற்றம் சுமத்தினார்கள்.தற்போது அமைச்சரவைக்கே தெரியாமல் ஆளுநர் இக்பால் சிங் மருத்துவ கல்லுhரிக்கு அனுமதி வழங்கியிருப்பது ஏன் முதல்வர் மவுணம் காப்பது மாநில மக்களிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எனவே ஆளநரை மத்திய அரசு திரும்ப பெறவில்லை என்றால் அவர் பங்கேற்க்கும் நிகழ்ச்சிகளில் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை மார்க்சி°ட் கட்சி நடத்தும்.மேலும் அனைத்து கட்சிகளையும் இணைத்து ஆளநரை திரும்ப பெரும் வரை போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு பேசினார்கள்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர்.போராட்டத்தில் பங்கேற்றனர் போராட்டத்தையொட்டி கவர்னர் மாளிகை முன்பு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
படம் உள்ளது
Read more...
Friday, April 22, 2011

ஆளநரின் அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி தனது குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் சவுத் எஜிக்கேஷ்னல் டிரஸ்ட் பெயரில் காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி

0 comments

புதுச்சேரி ஏப் 21
காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்க தடையில்லா சான்றிதழ் வழங்கியது குறித்து புதுச்சேரி முதல்வர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வி.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
வரி மோசடி மன்னன் ஹசன் அலிக்கு போலி பாஸ்போர்ட் வழங்க ஆவணம் செய்திருந்த குற்றச்சாட்டில் ஆளாகியுள்ள புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால் சிங்கை அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில்
இக்பால் சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி தனது குடும்பத்தினர் அங்கம் வகிக்கும் சவுத் எஜிக்கேஷ்னல் டிரஸ்ட் பெயரில் காரைக்காலில் மருத்துவக்கல்லுhரி துவங்க அனுமதி பெற்றுள்ளார்.புதுச்சேரி அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் இம்மருத்துவக்கல்லுhரிக்கு சுகாதாரத்துறையின் கீழ்நிலை செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி அமைச்சரவைக்கு தெரியாமல் தலைமை செயலாளர் எப்படி அனுமதி வழங்கினார். ஆளநரின் உத்தரவின் பேரிலேயே வழங்கப்பட்டதா ?எனவே மோசடி மற்றும் முறைகேடுகளில் ஈடுப்பட்டோர் மீது புதுச்சேரி அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மேலும் இப்பிரச்சனை தொடர்பாக முதல்வர் மாநில மக்களுக்கு விலக்கமளிக்க வேண்டும் இல்லை என்றால் முதல்வர் வைத்தியலிங்கம் ராஜினமா செய்ய வேண்டும் .
மேலும் ஆளுநர் இக்பால்சிங் கை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெறுவதுடன் மருத்துவக்கல்லுhரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சிபிஜ விசாரணைக்கு உத்திரவிடவேண்டும்.அதோடு ஆளுநர் இக்பால் சிங் பதவி எற்றதிலிருந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் உத்தரவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.அவரது முழு சேமிப்பு கணக்குகளை ஆய்வு செய்ய வெண்டும்.
மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை (ஏப்-22) காலை ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு கூறினார்கள்.முன்னதாக மருத்துவக்கல்லுhரி துவங்க அரசால் வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழை பத்திரிக்கையாளர்களிடம் கான்பித்தனர்.பேட்டியின் போது செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்.நிலவழகன்,ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
படம் உள்ளது.
Read more...
Monday, April 18, 2011

புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால்சிங் பதவி விலக வேண்டும் என்று சிபிஜ வலியுறுத்தியுள்ளது

0 comments


புதுச்சேரி துனை நிலை ஆளுநர் இக்பால்சிங் பதவி விலக வேண்டும் என்று சிபிஜ வலியுறுத்தியுள்ளது.
அசன் அலிக்கு பாஸ்போர்ட்டு வழங்க கடிதம் எழுதிய விவகாரத்தில் சிக்கியுள்ள புதுவை துனை நிலைஆளுநர் இக்பால்சிங் கை அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்த உள்ள நிலையில் ஆளுநர் உடனடியாக பதவி விளக வேண்டும் இல்லை என்றால் அவரை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சிபிஜ மாநில செயலாளர் நாராகலைநாதன் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் கூறுகையில், ஆளுநர் பதவி என்பது நடுநிலையானது கட்சி சாராதவராக இருக்க வேண்டும். அப்படி இருக்க நடந்த சம்பவங்களை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து கூறிய பிறகே தான் பதவி விளகுவது குறித்து முடிவு எடுப்பேன் என்று ஆளுநர் இக்பால்சிங் கூறுவது கண்டனத்துகுறியது. என்று நாரா.கலைநாதன் கூறினார்.
ஆளுநர் இக்பால்சிங் மீதான குற்றச்சாட்டைஅடுத்து அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கடந்த ஏப்ரல் 9ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more...
Saturday, April 16, 2011

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் மாலை அணிவிக்கப்பட்டத

0 comments

புதுச்சேரி ஏப் 14
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புதுச்சேரியில் மாலை அணிவிக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டமன்றம் எதிரே அமைந்துள்ள அம்பேத்கரின் முழ திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுவை தலைவர் ஜி.ராமசாமி தலைமை தாங்கினார்.மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் மற்றும் முன்னணியின் நிர்வாகிகள்கலிவரதன்,கொளஞ்சியப்பன்,அரிகிருஷ்ணன்,லெனின்துரை,தமிழ்ச்செல்வன்,மணிபாலன்,வழக்கறிஞர் °டாலின்,ரமேஷ்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,ஆனந்தராசன்,புகழேந்தி,சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் நிலவழகன், முருகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,முருகைன்,ராம்ஜி,பிரபுராஜ் மற்றும் நடராஜன்,குணசேகரன்,சிவக்குமார்,சந்துரு அருந்ததியினர் சங்கத் தலைவர் தவமணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக வ.உ.சி அரசு பள்ளி எதிரில் இருந்து ஊர்வளமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
Read more...
Tuesday, April 12, 2011

பெண்களை இழிவாக பேசிய மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமியை அமைச்சரவையில் இருந்து திரும்பபெற வேண்டும்

0 comments

புதுச்சேரி ஏப்ரல் 9
பெண்களை இழிவாக பேசிய மத்திய இணைஅமைச்சர் நாராயணசாமியை அமைச்சரவையில் இருந்து திரும்பபெற வேண்டும் என்று மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி.பெருமாள் மாநிலக்குழு உறுப்பினர் முருகன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ,
இலா°பேட்டை தொகுதியில் பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசும் போது செல்போன்,குக்கர்,பிரிஜ் உள்ளிட்ட அணைத்து பொருட்களும் கொடுக்கிறோம் பிள்ளையை மட்டும் பெற்று கொடுக்கவில்லை என்று பெண்களை பார்த்து இழிவாக பேசியுள்ளார்.மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது மாநிலத்தில் மாற்று ஆட்சி அமைந்தால் நிதி கிடைக்காது என்று பேசியுள்ளார்.அமைச்சர் நாராயணசாமியின் பேச்சு இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது பெண்களையை இழிவு படுத்தும் செயல் எனவே முன்னாள் அமைச்சர் அங்காளனை திரும்பபெற்றதை போல் நாராயணசாமியையும் திரும்ப பெற வெண்டும்.அதே போல் ரு.70 ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட அசன் அலிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங் விசா எடுத்து கொடுத்துள்ளது தொடர்பாக அவரை விசாரிக்க புதுச்சேரி அரசுக்கு மத்திய அமலாக்க பிரிவினர் கடிதம் அனுப்பிள்ளனர்.எனவே அது உண்மை என்றால் துனைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சிறுவர்களை தேர்தல் பணியில் அமர்த்தி பணபட்டு வாட செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறையில் ஈடுபட்டு வருபவர்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவே மத்திய தேர்தல் ஆனையத்துக்கும் மாநில ஆனையத்துக்கும் புகார் கடிதங்களை கட்சியின் சார்பில் அனுப்பி வருகிறோம் .இவ்வாறு கூறினார்கள்.
முன்னதாக கட்சியின் புதுச்சேரி வெப்சைட் இணையளத்தை www.cpim-puducherry.org/தா.முருகன் புதியதாக இயக்கி வைத்தார்.உடன் செயற்குழு உறுப்பினர்கள் கே.முருகன்,ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.
Read more...

மார்ச்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலமோகனனுக்கு இறுதி கட்ட பிரச்சாரத்தில் மக்கள் அமோக வரவேற்ப்பு அளித்தனர்

0 comments


புதுச்சேரி ஏப் 11
இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்ச்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பாலமோகனனுக்கு இறுதி கட்ட பிரச்சாரத்தில் மக்கள் அமோக வரவேற்ப்பு அளித்தனர்.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.அதனையொட்டி அரசியல் கட்சிகளின் இறுதி கட்ட பிரச்சாரம் திங்கள் கிழமை நடைபெற்றது.இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலமோகனனுக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சார ஊர்வலம் பெத்து செட்டிபேட்டையிலிருந்து துவங்கியது. கட்சியின் வேட்பாளர் பாலமோகனன், பிரதேச செயலாளர் வி.பெருமாள்,தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,கே.முருகன்,நிலவழகன்,உலகநாதன், ஆகியோர் திறந்த வாகணத்தில் வீதி வீதியாக வாக்குகள் சேகரித்தனர்.
நெசவாளர் நகர்,மஹாவீரர் நகர்,சாந்தி நகர்,அசோக்நகர்,குறிஞ்சி நகர்,கவிகுயில் வீதி,ஜீவானந்தம்புரம்,லாஸ்பேட்,மடுவுபேட்,சலவையார்நகர்,குமரன் நகர்,ஆகிய நான்கு வார்டுக்கு உட்பட்ட மக்களை பிரச்சார வேன் மூலம் வீதி வீதியாக சந்தித்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்.அப்போது மக்கள் வீட்டு வாசலில் இருந்த படியே பாலமோகனனுக்கு கைகளை அசைத்தபடி வரவேற்ப்பு கொடுத்தனர். இப்பிரச்சார ஊர்வலத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் ஊழியர்கள், பெண்கள் பொதுமக்கள் தங்கள் இரு சக்கர மோட்டார் வாகனங்களுடன் பங்கேற்றனர்.
Read more...

ஏன் காங்கிரஸ் ஆட்சியில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வில்லை என்று உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்

0 comments

புதுச்சேரி ஏப்ரல் 8
சாரயக்கடை-பிராந்திகடை அதிகம் உள்ள புதுச்சேரியில் ஏன் காங்கிரஸ் ஆட்சியில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வில்லை என்று உ.வாசுகி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலமோகனனுக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரக்கூட்டம் ஜீவானந்தபுரம்,நெசவாளர் நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பங்கேற்று பேசுகையில்,மக்கள் வரிபணத்தை வாரி சாப்பிட்டு ஏப்பம்விட்டு தற்போது மக்களிடம் வாக்கு சேகரிக்க காங்கிரஸ்-திமுக கட்சிகளின் வேட்பாளர்கள் வளம் வருகின்றனர்.இவர்களின் கடந்த ஜந்து ஆண்டுகாள ஆட்சியில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் விண்னை முட்டியுள்ளது.இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் சமூக விரோத குற்றங்களை திட்டமிட்டு புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அதிகரிக்க வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டிய உ.வாசுகி
திருமங்களம் தேர்தல் பார்மளாவின் படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பாதித்த பணத்தை வைத்து தமிழகம்-புதுச்சேரி வாக்காளர்களை விலைபேசிடலாம் என்ற திமுக-காங்கிரஸ் எண்ணங்கள் முறியடிக்கப்படும்.நெசவாளர்கள்,முறைச்சார தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைப்பாளி மக்களுக்காக தொடர்ந்து போராடிவரும் மார்ச்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பாலமோகனன் தேர்ந்தெடுக்கப்பட்டாள் சட்டமன்றத்தின் கண்களாக செயல்படுவார்.இவ்வாறு பேசினார்.
முன்னதாக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,பிரதேச செயலாளர் பெருமாள்,வேட்பாளர் பாலமோகனன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...

புதுச்சேரியில் மக்களை கவர்ந்து வரும்கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினரின் நீங்களே சொல்லுங்கள் என்ற நாடகம்.

0 comments



புதுச்சேரி ஏப்ரல் 7
புதுச்சேரியில் மக்களை கவர்ந்து வரும்கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினரின் நீங்களே சொல்லுங்கள் என்ற நாடகம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இலாஸ்பேட்டை தொகுதி போட்டியிடும் வேட்பாளர் பாலமோகனனுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி தப்பாட்ட கலைக்குழுவினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.முதலில் தப்பட்டத்தை அடித்து மக்களை கவர்ந்து கூட்டம் கூடிய உடன் பின்னர் நீங்களே சொல்லுங்கள் என்ற வீதி நாடகம் அரங்கேற்ற படுகிறது.இந்த நாடகத்தில் திருமணம் செயவதற்க்கு மாப்பிளை வீட்டார் பெண் பார்க்க செல்கின்றனர்.பெண் வீட்டார் மாப்பிளை வீட்டாரை பார்த்து எவ்வளவு வரதட்சனையாக தங்கம் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்க வரதட்சனையா அதெல்லாம் தேவையில்லை ஒரு கிலோ வெங்காயம்,ஒரு கிலோ பூண்டு ,ஒரு கிலோ சமையல் எண்னை உள்ளிட்ட பொருட்களை மட்டும் கொடுத்தாபோதும் எனக்கூற அதற்கு பெண் வீட்டார் சம்மத்துடன் திருமணமும் நடைபெருகிறது.தாலி கட்டும் நேரத்தின் போது கேட்ட பொருட்களில் 100 கிராம் எடை குறைகிறது.உடனே மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நடத்த மருக்கின்றனர்.அப்போது பெண் வீட்டார் நீங்கள் கேட்ட பொருட்களை வரதட்சனையாக கொடுத்துள்ளேன் எனக்கூற பின்னர் குறைந்த பருப்பை திருப்பி தந்தவுடன் கல்யானத்திர்க்கு மாப்பிளை வீட்டார் சம்மதிக்கின்றனர்.
விலை உயர்ந்த தங்கத்தைவிட மளிகை காய்கறிகள் விலை உயர்ந்திருப்பதை எடுத்து காட்டும் விதமாக நடகத்தின் கருத்து அமைந்தது.இந்நாடகத்தை பார்த்த மக்கள் நம்மை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை பற்றி தெரிந்து கொண்டனர். நீங்களே சொல்லுங்கள் என்ற நாடகத்தின் தலைப்புக்கினங்க மார்ச்சி°ட் கட்சிக்கு தான் எங்கள் ஓட்டு என்று வாக்காளர்கள் கைதட்டலுடன் உறக்க தெரிவித்தனர்.
Read more...
Thursday, April 7, 2011

புதுச்சேரி மாநில வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

0 comments
புதுச்சேரி மாநிலத்தில் 13 வது சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்பரல் 13, 2011 ல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் புதுச்சேரி மாநில மக்களின் கடமைகள் குறித்தும், மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு குறித்தும் இத்தேர்தல் அறிக்கையை மாநில மக்களுக்கு முன்வைக்கின்றோம். காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் - தேர்தல்கால வாக்குறுதிகளின் செயலாக்கம் - மக்கள் பிரச்சனைகளில் ஆட்சியாளர்களின் தலையீடுகள் எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய தருணமாகும்.

மத்தியிலும் காங்கிரஸ், மாநிலத்திலும் காங்கிரஸ் என்ற முழக்கத்தோடு அதிகாரத்தைப்பிடித்த காங்கிரஸ் கட்சி மாநிலத்தை முன்னேற்றவில்லை. அனைத்து துறைகளிலும் மிகப்பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கையை அப்படியே புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க துணையோடு காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. இதனால் புதிய தொழில்கள் இல்லை. இருக்கும் தொழில்கள் படிப்படியாக மூடப்படுகிறது. விவசாயம் சீரழிந்து வருகிறது. நகர் மற்றும் கிராமப்புற வறுமையும் , வேலையின்மையும் பெருகிவருவது, மறுபுறத்தில் விலைவாசி உயர்வு வருமானத்தின் பெரும்பகுதியை பறித்துவருகிறது. எழை, எளிய நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகிவருகின்றனர்.

சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதிகள்;
பட்ஜெட் உரையின் அறிவிப்புகள், சட்டப்பேரவை அறிவிப்புகள் பல நடைமுறைக்கு வரவேயில்லை. மக்கள் நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன. மக்களுக்கான திட்டம் என்பதற்கு மாறாக கமி­னுக்காகத் தான் திட்டங்கள் என்றாகிவிட்டது. மேலும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து சொந்த வீட்டிற்கு மாதம் ஒன்றுக்கு பல ஆயிரங்கள் வாடகைப்பெறும் அமைச்சர்கள் சில அமைச்சர்களின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு அரசு செலவில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயணச் செலவு ..... என வகைத்தொகையில்லாமல் செலவழிக்கப்படுகிறது. கல்வி, சுகாதாரம், துப்புரவு ..... என பலத்துறைகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறது. ஊழலும் , முறைகேடுகளும் தலைவிரித்தாடுகிறது. போராடும் ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான அடக்குமுறைகளும் , 144 தடை உத்தரவுகளும் சகஜமாகிவிட்டது. ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கான முன்னுதாரணத்தை காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆட்சியில் உள்ள காங்கிரஸ் - திமுக தலைமையிலான 2 வது ஐ.மு. கூட்டணி அரசு ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. வேலையின்மை, வறுமை, விவசாயம், மற்றும் தொழில் நெருக்கடிக்கு தீர்வு காணவில்லை. தனியார் மய , தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பொதுத்துறை பங்குகள் விற்பனை, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, தனியார் வங்கிகள் துவங்க தாராள அனுமதி, புதிய பென்­ன் திட்டம் அமுலாக்கம் ஆகியவற்றை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக புதிய மெகா மகா ஊழல்களால் நாட்டின் செல்வம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் ஆட்சியாளர்களின் செயல்பாடும், ஊழல் பேர்வழிகளுக்கு அதிகாரப் பொறுப்பு வழங்கி அழகுபார்த்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இத்தகைய தவறான கொள்கை மற்றும் ஊழல்களால் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு மக்கள் மத்தியில் தனிமைப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சரிவை சமாளிக்க நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்லில் எதைச்செய்தேனும் ஆட்சியை பிடிக்க முயலுகிறார்கள்.


இத்தகைய மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்டுவது புதுச்சேரி மாநில மக்களின் மிக முக்கிய ஜனநாய கடமை என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்த நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் களத்தில் புதுச்சேரி மக்களை சந்திக்கிறது.
புதுச்சேரி மாநிலம் முன்னேற மக்களின் நலன் காத்திட மார்க்சிஸ்ட் கட்சி கீழ் கண்ட கோரிக்கைகளுக்காக பாடுபடும்
மத்திய , மாநில அரசுகள் பின்பற்றிவரும் ஏழ்மையை அதிகப்படுத்தும் தாராளமய , தனியார் மய கொள்கையை முறியடித்து மக்கள் நலன் சார்ந்த மாற்றுக்கொள்கைக்காக மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

தொழில் வளர்ச்சி

காங்கிரஸ் தி.மு.க மத்திய கூட்டணி ஆட்சியின் நவீன தாராளமயக் கொள்கையை புதுச்சேரி காங்கிரஸ் அரசு அப்படியே பின்பற்றி வருகிறது. இதனால் குறு, சிறு நடுத்தரத் தொழில்களும் , பாரம்பரிய நெசவுத் தொழிலும் கடுமையான பாதிப்புகளுக்கு இலக்காகி உள்ளன. தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான கச்சாப்பொருளோ , விற்பனை சந்தையோ புதுச்சேரி பெற்றிருக்கவில்லை. அனாலும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வகைப்போக்குவரத்து வசதி, தட்டுபாடில்லாத மின்சாரம் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு திட்டமிடவில்லை.

புதுச்சேரியின் புராதன தொழில்களான ரோடியர், சதேசி , பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகள் பெருகிட மத்திய அரசிடம் இருந்து நதி உதவி பெற்றுத் தரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி அறவிப்பாகவே உள்ளது. மத்திய ஜவுளி மேம்பாட்டு கழகம் 2010 -2011 க்கு ஒதுக்கிய 3000 கோடியை பல்வேறு மாநிலங்களில் ஜவுளித் தொழில் மேம்பாட்டுக்கு நிதி வழங்கியுள்ளது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும் புதுச்சேரிக்கு நிதி பெறவில்லை. மறுபுறத்தில் பஞ்சாலைத் தொழிலில் சில பிரிவுகள் மூடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் புதிய தொழில் வரவுகளை விட மூடியத் தொழிற்சாலைகள் தான் ஏராளம். பாரம்பரிய நெசவுத் தொழில் காங்கிரஸ் ஆட்சியில் அழிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசு அளித்துவந்த மானியமும் நிறுத்தப்பட்டுவிட்டது.இலவச துணித்திட்டத்திற்கு நெசவுத் துணிகளை கொள்முதல் செய்வதையும் நிறுத்திவிட்டது.மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள காங்கிரஸ் - தி.மு.க ஆட்சிகள் தொழில் வளர்ச்சியை முடக்கிப்போட்டுள்ளன. இதனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் , வேலைவாய்ப்புகளும் கடுமையாக பாதித்துள்ளன.

மாநிலத்தின் முதலீடு வருவாயை அதிகரிக்க கேரள இடது முன்னணி அரசைப்போல மாநில பொதுத்துறை தன்னாட்சி மற்றும் கூட்டுறவு தொழில் நிறுவனங்களை இலாபகரமாக இயக்கிட கட்சி உறுதியாகப் போராடும். மேலும் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கட்சிக் குரல்கொடுக்கும்.
காங்கிரஸ் ஆட்சியில் அழிவின் விளிம்பில் உள்ள பஞ்சாலைத் தொழில்களைப்பாடுகாத்திட , மத்திய ஜவுளி மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து நிதி உதவிப் பெற்று பஞ்சாலை தொழிலை புரணமைத்திட மார்க்சிஸ்ட் கட்சி போராடும், ஆயத்த ஆடை தயாரிப்பு தொழில் துவங்கி ஏராளமான ஆண்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும்.

மாநிலத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்திடவும் புதிய தொழில்கள் துவங்கவும் கட்சி போராடும் .பாரம்பரியத் தொழிலாள நெசவு, ஜவுளி மற்றும் மரபு சார்ந்த கைத்தொழில், கைவினைத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்த கட்சி குரல்கொடுக்கும்.
பசுமை புதுச்சேரியும் விளை நிலங்கள் பாதுகாப்பும்

புதுச்சேரி மாநிலத்தில் மொத்த விவசாயம் சார்ந்த நிலம் 48,651 யஹக்டேராகும். கடந்த 15 ஆண்டுகளில் 20 ஆயிரம் யஹக்டேர் விவசாய நிலம் விவசாயம் சாராதவற்றிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. மத்திய , மாநில ஆட்சியாளர்களின் தவறான விவசாயக் கொள்கையால் தேசிய சராசரியை விட பல மடங்கு கூடுதலாக விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகிறது. நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனால் கிராமப்புற வறுமையும், உணவு நெருக்கடியும் ஏற்படுவதோடு, நகரத்தை நோக்கி இடம்பெயர்வதால் நகர்புற நெருக்கடியும் தீவிரமாகும். இந்த நிலை நீடித்தால் சமூகப்பதட்டமும், குற்றப்பெருக்கமும் அதிகரித்து அமைதியற்ற மாநிலமாக மாறிவிடும் ஆபத்துள்ளது. ஆகவே. தற்போதுள்ள விளைநிலங்களை பாதுகாத்திட நிலவங்கி துவக்கவும், நிலமற்ற ஏழைகள் விவசாயம் செய்ய , நிலங்கள் வழங்கவும் மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும். நிலம் விற்க முன்வருகிற விவசாயிகளிடம் இருந்து வெளிச்சந்தை விலைக்கு கொள்முதல் செய்யவும் , நில உச்சவரம்பை மறு சீரமைக்கவும் கட்சி பாடுபடும். இதன் மூலம் விவசாய வளர்ச்சி , கிராமப்புற, நகர்புற வளர்ச்சி- ஆகியவற்றை உள்ளடக்கிய பசுமை புதுச்சேரியை உருவாக்க கட்சி போராடும்.

தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டப்படி கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர்புற ஏழைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 150 நாட்களாக உயர்த்தவும் , முழுமையான வேலை அளிப்பதை உறுதிப்படுத்தவும் , நாள் கூலி ரூ 150 ஆக உயர்த்தவும் கட்சி போராடும்.

வேளாண்தொழில் முன்னேற்றத்திற்காக துவங்கப்பட்ட பாசிக் மற்றும் பாப்ஸ்கோ நிறுவனங்கள் மது, ஜவுளி மற்றும் பெட்ரோலிய தொழில்களில் ஈடுபட்டு வருகின்றன.இதை மாற்றி தேவைக்கேற்பஉரத்தை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவும் . விதை மற்றும் நவீன விவசாய தொழில் நட்பம் , நுண்ணுரிய விவசாயம் ஆகியவற்றிற்கு உதவிட மார்க்சிஸ்ட் கட்சி போராடும்.

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ 3000 வழங்கவும் , குவிண்டால் நெல்லுக்கு ரூ 1500 வழங்கவும் , விவசாய விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும்.ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாய விளைப்பொருள்களை திட்டமிட்ட கூட்டு செயல்பாடு மூலம் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யும் மோசடியை தடுத்திட கட்சி உறுதியாகப் போராடும்.

விவசாயம் நட்டத் தொழிலாக மாறியதால் நிலவானிபம் மாநிலத்தில் கோலோச்சுகிறது. விளைநிலங்கள் குறைந்து கிராமப்புற வறுமையும் , குடிபெயர்தலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. விவசாயத்தை இலாபகர தொழிலாக மாற்றிட பொறுத்தமான விவசாய கொள்கையை உருவாக்க கட்சி பாடுபடும்.
அனைவருக்கும்வீட்டுமனைப்பட்டா

மாநிலத்தில் வீடில்லாத அனைத்து ஏழை ,எளிய மக்களுக்கும் இலவச வீட்டுமனை வழங்கவும், குடியிருக்கிற வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கவும் கட்சி பாடுபடும். காமராஜர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய உதவித்தொகையை ரூ 2 லட்சமாக உயர்த்தவும், அரசியல் பாகுபாடில்லாமல் தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கவும் கட்சி போராடும்.
வலுவான பொதுவினியோகத்திட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில காங்கிரஸ் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. மானிய விலையில் வழங்கப்பட்ட 6 மளிçக் பொருள்கள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. கேரளத்தைப்போல சமையல் எண்ணெய், பருப்பு, பூண்டு ..... உள்ளிட்ட 14 பொருள்கள் அனைத்து ரே­ன் கடைகளிலும் வழங்க கட்சி போராடும். அனைவருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த கட்சி பாடுபடும்.
இளைஞர் நலம்
வேலையின்மை சமூகப்பதட்டத்தையும் - குற்றப் பெருக்கத்தையும் உருவாக்கி வருகிறது. மாநிலத்தின் மேம்பட்ட மனிதவளத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும் கட்சி பாடுபடும்.

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இளைஞர் நல கொள்கையை உருவாக்கிட கட்சி பாடுபடும்.

புதுச்சேரி மகப்பேறு மருத்துவமனை,அரசு மருத்துவக்கல்லூரி, இந்திராகாந்தி அறவியல் கலைக்கல்லூரி, உள்ளாட்சித்துறை ..... போன்ற பல்வேறு துறைகளில் தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு பணி வழங்குவதை ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும். மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கவும், சமூக நீதியை உறுதிப்படுத்தவும் கட்சி பாடுபடும்.

அனைத்து அரசுத் துறைகளிலும் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிப்பதை தடுத்திட , ஓய்வுப் பெற்றவர்களை மீண்டும் பணிநீட்டிப்பு செய்வதை தடுத்திட கட்சி போராடும். மேலும் புதிய பென்­ன் திட்டத்தை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் நீண்டகால பாதுகாப்புடன் கூடிய பழைய பென்­ன் திட்டத்தை செயல்படுத்திட ஊதிய முரண்பாடுகளை களைந்திட, உறுதிசெய்யப்பட பதவி உயர்வு வழங்கிட மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும்.
கல்வி வளர்ச்சி

அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தை 1:40 ஆக உறுதிப்படுத்தவும், ஆசிரியர் பணிநியமனத்தை வேலைவாய்ப்பகம் மூலம் நிரப்பிட, ஒப்பந்த ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட கட்சி போராடும். மேலும் வகுப்பறை ஜனநாயகம், விஞ்ஞான கல்வி, செய்முறை கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிக்கல்வியை மேம்படுத்த கட்சி பாடுபடும். கல்வி உதவித் தொகையை கல்வியாண்டின் துவக்கத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சமூக கட்டுப்பாட்டை ஏற்படுத்த , கல்விக் கட்டணம் மற்றும் ஆசிரியர் பணிநிலையை முறைப்படுத்திட சட்டம் இயற்ற கட்சி உறுதியாகப் போராடும்.

தனியார் மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்லூரிகளில் 50 சதவீத அரசு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தவும் , கல்விக்கட்டணத்தை முறைப்படுத்தவும் கட்சி போராடும் . மேலும் காமராஜர் கல்வி உதவித் தொகையை நிலுவையில்லாமல் காலத்துடன் வழங்கவும் கட்சி குரல் கொடுக்கும்.

தொழிலாளர் நலம்

அனைத்து தொழில்களிலும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டுபேர உரிமையை உறுதிப்படுத்தவும், குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து வழங்கவும் - கண்காணிக்கவும் கட்சி போராடும். மேலும் சட்டவிரோத ஒப்பந்த தொழிலாளர் முறை, கொத்தடிமை தொழிலாளர் முறையை அகற்றிட கட்சி குரல்கொடுக்கும்.

மாநிலத்தின் மொத்த உழைப்பு சக்தியில் பெரும்பகுதியினராக உள்ள அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு பென்­ன் ,வைப்பு நிதி, மருத்துவ கப்பீடு உள்ளிட்ட சமூகப்பாதுகாப்பு உறுதிப்படுத்திட கட்சி பாடுபடும். முறைசாரா தொழிலாளர் சமூகப்பாதுகாப்பு சட்டத்தின் (2008) ன் படி அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றிட, சமூகப்பாதுகாப்பு திட்டத்திற்கு வெளியில் உள்ள வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட இதர அமைப்புசாரா தொழிலாளர் பிரிவினரையும் இணைத்திட கட்சி போராடும்.

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை செயல்படுத்தவும், அதில் நடைபெறும் முறைகேடுகளை களைந்திடவும், கட்டிடத்தொழிலாளர்களை நலவாரியத்தில் உறுப்பினராக சேர்த்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி பாடுபடும். மேலும் நலவாரியத்திற்கான நலவரியை உறுதியாக வசூலித்திடவும், நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.மீனவ மக்கள் நலன்

மீனவ மக்களை வாழிடத்தில் இருந்து அகற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் முயற்சியை தடுத்திடவும், இலங்கை கடற்படையினால் தொடரும் தாக்குதல் மற்றும் படுகொலைகளை தடுத்திடவும் மத்திய மாநில அரசுகளை கட்சி வலியுறுத்தும்.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும், இலங்கை இராணுவத்தின் முள்வேலி முகாம்களில் அடைப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களின் பூர்வீக இடத்தில் மறு குடியமர்த்தவும், சுயாட்சி உரிமை வழங்கவும் மத்திய அரசு தலையீடு செய்ய கட்சி நிர்பந்திக்கும்.

பெண்கள் நலன்

பெண்களுக்கு நாடாளுமன்றம் , சட்டமன்றங்களில் 3 ல் 1 பங்கு இடஒதுக்கீடு கிடைக்கவும், உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கவும் கட்சி போராடும். பெண்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்தவும் , பெண்கள் மீதான கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் கட்சி தொடர்ந்து போராடும். பெண்கள் மீதான குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்தவும், வரதட்சனை கொடுமையில் இருந்து பெண்களை விடுவிக்கவும் கட்சி பாடுபடும்.

மாநில பெண்கள் ஆணையத்தில் பெண் உரிமைக்காக போராடும் அமைப்புகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி அதன் செயல்பாட்டை முறைப்படுத்திட , கூடுதல் அதிகாரங்கள் வழங்கிட கட்சி போராடும்.
சமூகநீதி - தீண்டாமை ஒழீப்பு

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களின் நலன் காத்திட, நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமி­னின் பரிந்துரைப்படி கல்வி , வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கட்சி பாடுபடும். இஸ்லாமியர்களின் சமூக மேம்பாட்டிற்கு தனி நிதி ஒதக்கீடு செய்து சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த கட்சி வலியுறுத்தும்.

தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டவும், தீண்டாமையின் அனைத்து வடிவங்களையும் அகற்றிட கட்சி போராடும். கல்வி வேலை வாய்ப்புகளில் தலித் இடஒதுக்கீடு முழுமையாக அமுலாகவும் , அனைத்து பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பவும் கட்சி குரல் கொடுக்கும். தலித் மக்கள் சமூகமேம்பாட்டுத் திட்டமான சிறப்பு துணைத்திட்ட நிதியை முழுமையாக செலவிட , தலித் மக்களின்வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சீரிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த கட்சி போராடும்.

தலித் மக்களுக்குள் பூர்வகுடி மற்றும் குடிபெயர்ந்தோர் என்ற சர்ச்சசை தலித் மக்களின் ஒற்றுமையை சிதைத்துவருகிறது. உலகமயம், தனியார் மயம், தாராள மயக்கொள்கை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் , வாழ்வு தேடி புலம் பெயர்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மத்திய அரசுப்பணியில் உள்ளவர்கள் இடம் பெயர்வதும் தொடர்கிறது. மேலும் பூர்வகுடிகளாக இருந்தும் கல்வியறிவு இன்மையாலும், சொந்த வீடோ, நிலமோ பெற்றிருக்காத நிலையில் இம்மக்களும் குடிபெயர்ந்தவர்களாகவே கருதப்படுகிறார்கள். ஆகவே, தலித் மக்களில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைத்திட , தலித் மக்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடும்.

தலித் மக்களில் மேலும் ஒடுக்கப்பட்ட பிர்வாக உள்ள அருந்ததியர் மக்களுக்கு உரிய உள்ஒதுக்கீடு கிடைக்கவும் , பிற்பட்ட பழங்குடி இன மக்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு என்பதை பழங்குடி இன மக்களுக்குரிய இடஒதுக்கீடாக பெற்றிடவும் கட்சி போராடும்.

தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தங்கும் விடுதிகளை நவீனப்படுத்தி சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும், சத்தமான கடிநீர், சத்தான உணவு வழங்க தேவையான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட கட்சி பாடுபடும்.

தலித் மக்களுக்கு 5.90 லட்சம் செலவில் கட்டி வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைந்து, தகுதியான மக்கள் அனைவருக்கும் கிடைத்திட, கண்காணிப்பு குழு அமைத்திட கட்சி போராடும்.

உள்ளாட்சிக்கு கூடுதல் அதிகாரம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கிட மக்கள் பங்கேற்போடு சமூக நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திட, மாநில அரசின் மொத்த வருவாயில் 30% நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கிட கட்சி உறுதியாகப் போராடும். தனியார் பங்கேற்புடன் நடைபெறும் துப்புரவு பணியை முறைப்படுத்தவும், ஒப்பந்த துப்புறவு தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கவும் கட்சி பாடுபடும்.


தமிழ் ஆட்சிமொழி


நீதிமன்றம் உள்பட அனைத்து துறைகளிலும் தமிழ் ஆட்சி என்பதை உறுதிப்படுத்த, தமிழ்மொழி வளர்ச்சிக்கு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த கட்சி போராடும். மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் பிராந்திய மொழியை ஆட்சி மொழியாக இருப்பதை உறுதிப்படுத்தவும் கட்சி போராடும்.

தடையில்லா மின்சாரம் அனைத்துப் பகுதியினருக்கும் கிடைத்திடும் வகையில் மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் , மரபுசார் உள்ளிட்ட புதிய மின் திட்டங்கள் கொண்டுவந்தும் மின் தேவையை ஈடுசெய்ய கட்சி போராடும்.
மாற்றுத்திறனாளிகள் நலன்

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3% இடஒதுக்கீடு வழங்கிட உறுதியாக கட்சி போராடும். மாற்றுத் திறனாளிகளுக்கான பென்­ன் உதவியை அதிகரிக்க, நின்று போன மாதம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, போர்வை .... உள்ளிட்ட நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்திட, சுயத்தொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க கட்சி பாடுபடும்.


சிறப்பு மாநில அந்தஸ்து


புதுச்சேரி சட்டமன்றம் நிதி நிர்வாகம் , சட்டம் இயற்றுதல், ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் சுயேட்சையாக முடிவெடுக்கும் அதிகாரமற்ற அரசாக உள்ளது. அரசு உயர் பதவிகளில் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க மாநில பணித்தேர்வாணையம் மற்றும் தனி கல்வி வாரியம் அமைக்க இயலவில்லை. மேலும் புதுச்சேரி விடுதலையடைந்து இந்திய ஒன்றியத் தோடு இணைக்கப்படுகிற போது இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் நடப்பில் இருந்ததால் புதுச்சேரி அடிப்படை கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆகவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றிட கட்சி உறுதியாகப் போராடும்.


காரைக்கால் பிராந்தியத்திற்கு சிறப்புத்திட்டங்கள்


புதுச்சேரி மாநில ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் நான்கு பிராந்தியங்களிலும் உள்ள வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கண்டறிந்து திட்டங்களை செயல்படுத்துவதிலும், சமஅளவு முக்கியத்துவம் அளிப்பதிலும் தோல்வியடைந்துவிட்டார்கள். இதனால் ஒன்றுபட்ட மாநிலத்தில் பிராந்தியங்களுக்கிடையில் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற இறக்கம் உருவாகி பிராந்திய கோ­ங்களும் எழுகிறது. இந்நிலையை மாற்றிட பிராந்தியங்களுக்கிடையில் சமூக கலாச்சார பண்பாட்டுத்தளத்தில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்த - பொருளாதார வளர்ச்சி திட்டங்களை சம அளவு முக்கியத்துவம் செயல்படுத்திட கட்சி போராடும். மிகவும் பின்தங்கிய காரைக்கால் மாவட்டத்தில் சிறப்பு வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த கட்சி போராடும்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத காங்கிரஸ் தி.மு.க கூட்டணியை தோற்கடித்து , ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி, மாற்று அரசை கொண்டுவருவதன் மூலமே புதுச்சேரி மக்களின் நலன்களையும் , உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.


புதுச்சேரி சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் பலம் அதிகரிப்பது என்பது மக்கள் பிரச்சனைகளை வலுவாக உறுதியாக வாதிடவும், மக்கள் நலனை பாதுகாக்கவும், சட்டப்பேரவை ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் இயலும். கடந்த 14 வது நடாளுமன்ற காலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பது இந்திய சூழலில் மாறுபட்ட ஒன்றாக , மக்கள் நலன்சார்ந்ததாக இருந்ததை மக்கள் அறிவார்கள். அந்த தன்மையில் புதுச்சேரி அரசியலில் இடதுசாரிகளின் பங்களிப்போடு கூடிய சட்டப்பேரவை ஆரோக்கியமான மக்கள் நலன்சார்ந்த அரசியலை வெளிப்படையான ஆட்சியை உறுதிப்படுத்த உதவும்.

ஆகவே, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி இலாசுப்பேட்டை , பாகூர், திருபுவனை ஆகிய தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு அரிவால் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.இதரத் தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை வீழ்த்திட அ.இ.அ.தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு அவரவர்களின் சின்னத்தில் வாக்களித்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேசக்குழு மாநில மக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறது.

இவண்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி பிரதேசக்குழு
Read more...

தேர்தல் அறிக்கை மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம்

0 comments

புதுச்சேரி ஏப் 4
பணபளத்தால் ஜனநாயகத்தை விலை பேசிவிடலாம் என்ற காங்கிரஸ்-திமுக வின் எண்ணத்தை மக்கள் முறியடிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன் கூறினார்.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை சட்டபேரவை தேர்தல் அறிக்கையை கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட மத்தியக்குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன் பெற்று கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு இலவசங்களை கொடுப்போம் என அறிவிப்பு செய்து வரும் கட்சிகளுக்கு மத்தியில் மார்ச்சிஸ்ட் கட்சி மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவோம் என உறுதியோடு தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம். இலவசங்கள் வழங்குவதன் மூலம் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறையாது எனவே தான் கொள்கை ரீதியாக மார்ச்சி°ட் கட்சி எதிர்க்கிறது.
புதுச்சேரி ஆட்சியாளர்களின் கொள்கையால் விவசாயம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.எனவே தான் மார்ச்சிஸ்ட் கட்சி விவசாயத்திர்க்கும் ,தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
திமுக-காங்கிரஸ் கட்சிகள் பணபளத்தின் மூலம் ஜனநாயகத்தை விலை பேசிவிடலாம் என்ற கனவு மக்கள் சக்தி மூலம் நிராகரிக்கபடும் என்றார்.மேலும் தமிழகத்தில் பணம்,பொருட்கள் கைப்பற்றி வருவது போல் ஏன் புதுச்சேரியில்அத்தகைய சோதனைகள் நடைபெறுவதில்லை என்று சுதாசுந்தரராமன் கேள்வி எழுப்பினார்.
பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் சாந்தி,கலிவரதன்,ராமச்சந்திரன்,உலகநாதன் ,உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
படம் உள்ளது
Read more...
Sunday, April 3, 2011

திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 1.5 லட்சம் ஏக்கர் விளைநிலம் வேறு பணிக்கு மாற்றம் ‘ரியல் எஸ்டேட்’ என்ற பெயரில் விளைநிலம் கொள்ளை போகிறது- விவசாயிகள் வாழ்வாதா

0 comments


தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் ஏக்கர் விளைநிலம் வேளாண்மை அல்லாத வேறு பணிகளுக்கு மாற்றப்படு கிறது. இதனால் விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பறிக் கப்படுகிறது; உணவு பற்றாக்குறை மாநில மாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் கூறினார்.

தொலைக்காட்சியில் 1ம் தேதி அவர் நிகழ்த்திய உரை வருமாறு:

கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழகத் தை ஆண்ட திமுக, மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகளை காற்றிலே பறக்க விட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு கடைப்பிடித்து வரும் தாராளமய கொள்கைகளை மாநிலத்திலும் திமுக அப்படியே செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, தமிழகத்தில், ‘உழவுக் கும்-தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற நிலை மாறி, ‘உழவையும்-தொழி லையும் ஒழித்துக்கட்டுவோம்’ என்று ஆட்சியாளர்கள் முனைப்புடன் செயல் பட்டு வருகின்றனர். வேறு எந்தக்காலத் திலும் இல்லாத வகையில் நாடு முழுவ தும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற் கொலை செய்து கொள்ளும் அவலம் வந்து விட்டது. இதற்கு தமிழகமும் விதிவிலக் கல்ல. இத்தகைய கொடூரமான நிலை மைக்குக் காரணம் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் கொள்கைகளே என் பதை வாக்காளர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.

50 லட்சம் ஏக்கர் வாக்குறுதி என்ன ஆனது?

கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, அரசுக்குச் சொந்தமான 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை நிலமற்ற ஏழை களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் வழங்குவதாக உறுதியளித்தது திமுக. ஆனால், அரசு கணக்குப்படியே இதுவரை 2,11,356 ஏக்கர் மட்டுமே 1,76 ஆயிரம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட் டுள்ளது. இதிலும் ஏராளமான முறைகேடு கள், மோசடிகள் நடந்துள்ளதாக தெரிகி றது. மீதி நிலங்கள் எங்கே போயிற்று? இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம் இப்போது கலைஞருக்கே மறந்து போய்விட்டது என்பதை மறுக்க முடி யுமா? காவேரிராஜபுரம் போன்று எத்த னையோ இடங்களில் அரசியல் செல் வாக்குள்ளவர்கள், உயர்பதவியில் உள்ள வர்கள், கல்வி நிறுவன அதிபர்களால் லட் சக்கணக்கான ஏக்கர் அரசுக்குச் சொந்த மான நிலங்கள் வளைத்துப் போடப்பட் டுள்ளன. இத்தகைய நிலங்களை மீட்டு, நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, கட்டி இருக்கிற கோவணத்தை யும் களவாடுவதைப் போல, விவசாயி களுக்கு சொந்தமான நிலங்களை அவர்க ளுக்குத் தெரியாமலேயே மோசடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, கொடுமை திமுக ஆட்சியில் நடந்தது. தாழ்த்தப் பட்ட மக்களுக்கென்று வெள்ளையர் ஆட் சிக்காலத்தில் வழங்கப்பட்ட பல லட்சம் ஏக்கர் பஞ்சமிநிலம் அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டதை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் இருந்தும் மிச்ச நிலம் எதுவும் எடுத்து விநியோகிக்கப்பட வில்லை. மாறாக, நிலக்குவியல் நடை பெற்று வருகிறது. நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக உச்சவரம்புச் சட்டத்தை திருத்தி நிலச்சீர்திருத்தத்தை சீரழித்தது திமுக அரசு. இப்படி நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது என்று ஆணித்தரமாக குறிப்பிட விரும்புகிறோம். பஞ்சமி நிலத்தை மீட்கவும், நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கிடைக்கவும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத் தில் உறுதியான குரல் கொடுக்கும்.

நிறைவேறாத கனவாக

கருகி விடுமோ?

காணி நிலமும்-கனவு இல்லமும் வாழ்நாளில் நிறைவேறாத கனவாகவே கருகிவிடுமோ? என்ற அச்சத்தில் லட்சக் கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர் . தமிழகத்தில் சுமார் 25 லட்சம் குடும்பங்கள் சொந்த வீட்டு மனை இல்லா மல் பல்வேறு வகையான புறம்போக்கு களிலும், வாடகை குடியிருப்புகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்களின் அடிப்படை தேவையான ‘வசிப்பிடம்’ என்ற அதிமுக்கிய பிரச்சனையைத் தீர்ப்ப தற்கு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? மாறாக, சென்னை நகரை அழகு படுத்து கிறோம் என்ற பெயரிலும், நீர்நிலை ஆக் கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரிலும் ஏழை-எளிய மக்களை தங்கள் குடியிருப்புகளிலிருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கையில்தான் வேகம் காட்டியது திமுக அரசு. அரசின் இந்த அராஜகத்தை எதிர்த்துப் போராடி மக்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

வறுமையில் உள்ள கிராமப்புற மக்க ளுக்கு குறைந்தபட்ச வேலை வாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் 100 நாள் வேலை உத்தர வாதச் சட்டம். 2004-ஆம் ஆண்டு இடது சாரிகளின் ஆதரவுடன் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்ப்பந் தத்தால் கொண்டு வரப்பட்டதே இத்திட் டம். கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஓரளவு நிவாரணம் அளிக்கக்கூடிய இத்திட்டத் தை திமுக அரசு சீர்குலைத்து வருகிறது. கூலியை குறைப்பது, மோசடியாக பணத் தை கையாடல் செய்வது, 100 நாள் வேலை தர மறுப்பது என பல சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டது. சட்டக் கூலியை கேட்டதற்காக விழுப்புரம் மாவட்டம் ரெட்டணையில் விவசாயத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொடுமையான காயங்க ளுக்கு உட்படுத்தியது திமுக அரசு.

ஆதிவாசி மக்களை வஞ்சித்த அரசு

ஆதிவாசி மக்களின் நில உரிமையை யும், வன உரிமையையும் பாதுகாக்கும் விதத்தில் இடதுசாரிகளின் இடைவிடாத வற்புறுத்தலால் கொண்டு வரப்பட்டது வன உரிமைச்சட்டம் 2006. இச்சட்டத் தை தமிழ்நாட்டில் அமல்படுத்தாமல் ஆதிவாசி மக்களுக்கு பெரும் பாதிப்பை இழைத்துள்ளது திமுக அரசு. மேலும், மலைப்பகுதிகளில் மட்டும் பட்டா வழங்க தடை விதித்து உத்தரவு போட்ட ஒரே அரசாங்கம் திமுக என்பதை ஆதிவாசி மக்கள் ஒருநாளும் மறக்கக் கூடாது.

விவசாயிகளும் - விவசாயமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையல்ல. உரம், விதை, பூச்சி மருந்து போன்ற வேளாண் இடுபொருட்களின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து கொண்டே உள்ளது. கடந்தாண்டு உரத்திற்கான மானியம் வெட்டப்பட்டு உரத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இது காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு விவசாயிகளுக்கு இழைத்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.

மின்வெட்டால் அழிந்த பயிர்

மின்வெட்டு காரணமாக விவசாயப் பயிர்கள் அழிந்து கொண்டுள்ளன. எப் போது மின்சாரம் வருமென விவசாயிகள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. விவசா யத்திற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க அரசு எந்த முயற்சியும் எடுக்க வில்லை. விவசாயிகள் மின் இணைப்பு கோரி 20 ஆண்டுகளுக்கு மேலாக காத் திருக்கிறார்கள். மின்இணைப்பு வழங்கு வதாக முதல்வர் சொன்னது ஏமாற்று நாடகமாகவே முடிந்து விட்டது.

விவசாயிகளுக்கு ஒரே ஒருமுறை மட்டும் கடனைத் தள்ளுபடி செய்த திமுக அரசு முதலாளிகளுக்கு ஏராளமான சலுகைகளை ஆண்டுதோறும் அளித்து வருகிறது. பொதுத்துறை மற்றும் கூட்டு றவு வங்கிகள் ஏழை, சிறு விவசாயிக ளுக்கு கடன் வழங்க மறுத்து வருகிறது. இதனால், கந்து வட்டிக்கு கடனை வாங்கி மீள முடியாத கடன் வலையில் விவசாயி கள் சிக்கித் தவிக்கின்றனர்.

விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வேண்டுமெனக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராடிய விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசக் கூட மறுத்தது திமுக அரசு என்பதை விவசாயி கள் மறந்து விடக்கூடாது.

அச்சுறுத்தும் உணவுப்பஞ்சம்

இந்தச் சூழ்நிலையில், விவசாயம் செய்து சாவதைவிட, நிலத்தைவிற்று பிழைத்துக் கொள்வது நல்லது என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ள னர். தமிழ்நாட்டில், ஆண்டுதோறும் 1.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வேளாண் மை அல்லாத வேறு பணிகளுக்கு மாற்றப்படுகிறது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதார மான நிலம் அவர்களிடமிருந்து பறி போய்க் கொண்டுள்ளது. சிறப்புப் பொரு ளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், வளர்ச்சித் திட்டங் கள், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நஞ்சை நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாற்றப்படுகின்றன. லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ள தமிழகத்தில் நல்ல விளை நிலங்களை நாசமாக்கலாமா?

இதன் விளைவாக, உணவு உற்பத்தி குறைந்து, உணவு தானிய பற்றாக்குறை மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக் கிறது. உணவுத்தட்டுப்பாடு நம்மை அச் சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு திமுக அரசின் அணுகுமுறைகளே கார ணம். “வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” என் றான் மகாகவி பாரதி. பாரதியின் கனவு நன வாக வேண்டுமென்றால், உணவு உற்பத் தியை பெருக்குவதும், அதை வாங்கிப் பயன்படுத்தும் அளவுக்கு மக்களின் வாங் கும் சக்தியை அதிகப்படுத்தவும் வேண் டும். மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு இத்தகைய தொலைநோக்குப் பார்வை யில்லை. நாட்டின் உணவுக் கிடங்குக ளில் 178 லட்சம் டன் உணவு தானியம் கெட்டுப்போனது நாடறியும். உச்சநீதிமன் றம் தலையிட்டு, வீணாகப் போகும் உணவு தானியத்தை ஏழைகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், பிரதமர் மன்மோகன் சிங்கோ, இதுபோன்ற கொள்கை விஷயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று கூறியதைக் கேட்டு ஏழைகள் வயிறு எரிந்ததை மறக் கக்கூடாது. 50 சதவீதம் மக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில், தானியங்கள் வீணாகி மண்ணோடு மக்கி னாலும் பரவாயில்லை- அதை ஏழைக ளுக்கு விநியோகிக்கக் முடியாது என்ற அளவுக்கு கொடூர மனம் படைத்த காங்கிர சுக்கு வாக்களிக்க முடியுமா? என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
Read more...
Saturday, April 2, 2011

பிரச்சாரம் இயக்கம்

0 comments



Read more...

வேட்பாளர் பாலமோகனனுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பு ஏற்ப்பட்டுள்ளது

0 comments

புதுச்சேரி மார்ச் 29
புதுச்சேரி இலாஸ்பேட் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் வேட்பாளர் பாலமோகனனுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.லாஸ்பேட் தொகுதியில் போட்டியிடும் அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் சி.எச்.பாலமோகனன் செவ்வாயன்று உழவர் சந்தையில் இருந்து வாக்கு சேகரிப்பு பணியை துவங்கினார்.
40 ஆண்டுகாளமாக அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாலமோகனன் பொது மக்களின் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து போராடி வந்துள்ளார்.லா°பேட் தொகுதியில் கனிசமான அரசு ஊழியர்கள், நெசவாளர்கள்,முறைசாரா தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது.இம்மக்களிடம் எளிமையாக பழக கூடியவராக திகழுந்து வருபவர் பாலமோகனன்.
வாக்குகள் சேகரிப்பு
நெருப்புக்குழி ,நேருவில் நகர் ,காமன் கோவில் வீதி,சுப்பரமணியர் கோவில் வீதி ,லாஸ்பேட் மேயின் ரோடு ஆகிய பகுதிகளின் மக்களை சந்தித்து பாலமோகனன் வாக்கு சேகரித்தார்.அப்போது பாலமோகனனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்ப்பு கானப்பட்டது.மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,ராமச்சந்திரன்,உழவர்கரை- நகர கமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,சீனுவாசன், பிரதேசக்குழு உறுப்பினர்கள்,மாணவர் ,வாலிபர் சங்கங்களின் நிர்வாகிகளோடு திரளாக சென்று பாலமோகனன் வாக்குகளை சேகரித்தார்.
Read more...

கட்சி தனித்து போட்டியிடுகிறது

0 comments
புதுச்சேரி மார்ச் 27
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேசக்குழுக்கூட்டம் கட்சியின் செயற்க்குழு உறுப்பினர் எல்.கலிவரதன் தலைமையில் அஜி°நகரில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாக நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன், செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,முருகன்,ராமச்சந்திரன்,உலகநாதன்,உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மார்ச்சி°ட் கம்யூனி°ட் கட்சி மாஹே நீங்களாக போட்டியிடக்கூடிய திருபுவனை(தனி) ,இலா°பேட்,பாகூர் ஆகிய *மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதற்க்கு அதிமுக தலைமையோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. முழுமையான பேச்சு வார்த்தை நடைபெறாமாள் மாஹே தொகுதி மட்டும் என்று அதிமுக அறிவித்துள்ளதை பிரதேசக்குழு ஏற்கவில்லை.
இப்பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்படாததால் இம்மூன்று தொகுதிகளிலும் மார்ச்சி°ட் கட்சி தனித்து போட்டியிடுவதென்று முடிவு செய்யப்பட்டது .மேலும் கட்சியின் மாநிலக்குழு வழி காட்டுதலின் படி புதுச்சேரியில் திமுக-காங்கிர° கூட்டணியை வீழ்த்துவது.மார்ச்சி°ட் கட்சி போட்டியிடக்கூடிய தொகுதிகளை தவிர்த்து மற்றதொகுகிகளில் அதிமுக-எண் ஆர் காங்கிர° கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. என்று கட்சியின் பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
Read more...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது

0 comments

புதுச்சேரி மார்ச் 27
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக்குழுக்கூட்டம் கட்சியின் செயற்க்குழு உறுப்பினர் எல்.கலிவரதன் தலைமையில் அஜிஸ்நகரில் ஞாயிற்றுக்கிழமை அவசரமாக நடைப்பெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,மாநிலக்குழு உறுப்பினர் தா.முருகன், செயற்க்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,முருகன்,ராமச்சந்திரன்,உலகநாதன்,உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு,
புதுச்சேரி சட்டமன்றத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாஹே நீங்களாக போட்டியிடக்கூடிய திருபுவனை(தனி) ,இலாஸ்பேட்,பாகூர் ஆகிய *மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதற்க்கு அதிமுக தலைமையோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. முழுமையான பேச்சு வார்த்தை நடைபெறாமாள் மாஹே தொகுதி மட்டும் என்று அதிமுக அறிவித்துள்ளதை பிரதேசக்குழு ஏற்கவில்லை.
இப்பேச்சு வார்தையில் உடன்பாடு ஏற்படாததால் இம்மூன்று தொகுதிகளிலும் மார்ச்சிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுவதென்று முடிவு செய்யப்பட்டது .மேலும் கட்சியின் மாநிலக்குழு வழி காட்டுதலின் படி புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவது.மார்ச்சிஸ்ட் கட்சி போட்டியிடக்கூடிய தொகுதிகளை தவிர்த்து மற்றதொகுகிகளில் அதிமுக-எண் ஆர் காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. என்று கட்சியின் பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com