Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, March 27, 2012

விலை வாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நடந்த மறியல் போராட்டத்தில் 800பேர் கைது

0 comments


புதுச்சேரி,மார்ச்-27

மத்திய மாநில அரசுகளின் விலை வாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நடந்த மறியல் போராட்டத்தில் 800பேர் கைது செய்யப்பட்டார்கள்.
தனேபுயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டணம்,பால் கட்டணத்தை குறைக்க வேண்டும்.100நாள் வேலை உறுதி திட்டத்தை துவக்க வேண்டும்.குடியிருக்கும் இடத்திற்கும்,கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச மணைப்பட்டா வழங்க வேண்டும்.விலைநிலங்கள் ரியல் எ°டேட்களாக மாற்றபடுவதை தடுக்க வேண்டும்.சுதேசி,பாரதி,ஏஎப்டி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நான்கு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நகரத்தையொட்டி சாரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சுகுமார்,பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,கே.முருகன்,வி.சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவானன்,சத்தியா,மற்றும் குணசேகரன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் கட்சி ஊழியர்கள் உட்பட திரளானோர் மறியலில் பங்கேற்று கைதானார்கள்.முன்னதாக பெரியார் சிலையில் இருந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கமிட்டவாறு ஊர்வலாமாக வந்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த மறியல் போராட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜி.ராமசாமி,மண்ணாடிபட்டு கொம்யூன் செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள்,ஆவணியப்பன்,சங்கர்,அன்புமணி,மணிபாலன் மற்றும் உலகநாதன்,சிவக்குமார்,பாபு உள்ளிட்ட திரளானோர் கைது செய்யப்பட்டார்கள்.

பாகூர்
பாகூர் தாலுக்கா அலுவலகம் முன்பு நடந்த மறியலில் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர்கள் முருகையன்,தமிழ்ச்செல்வன்,பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,மாரிமுத்து,மற்றும் ராமசாமி,கலியன்,ரத்தினவேல், உள்ளிட்ட திரளான பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

காரைக்கால்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,பகுதி செயலாளர் வின்சென்ட்,பிரதேசகுழு உறுப்பினர்கள் கலியபெருமாள்,ரவி,மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் இராமர்,தனிம் உள்ளிட்ட திரளானோர் கைது செய்யப்பட்டார்கள்.நான்கு மையங்களில் நடந்த இம்மறியல் போராட்டத்தில் 800 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டார்கள்.
Read more...
Friday, March 16, 2012

ஆறு மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை நீதி மன்றத்தில் சமர்பிக்க வேண்டும்

0 comments

புதுச்சேரி,மார்ச்-15
ஆறு மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை நீதி மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவு.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் காலம் 2011 ஜூலை 7 தேதியுடன் முடிவடைந்ததை யொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.உயர் நீதிமன்றம் 2012 ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் (6 மாதத்திற்குள்) தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்நிலையில் புதுச்சேரி அரசு மாநில தேர்தல் ஆணையரை நியமிக்காமலும் தேர்தலையும் நடத்தாமல் காலம் கடத்தி வந்தது.இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் படி காலகொடு முடியும் ஒரு வாரகாலத்திற்கு முன்பு பிப்ரவரி மாதம் புதுச்சேரி அரசு சார்பில் கால அவகாசம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் உடணடியாக மார்ச் 8 ஆம்தேதிக்குள் மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. மீண்டும மார்ச் 8ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் ஆஜாராண புதுசசேரி அரசு வழக்கறிஞர், ஆளுநர் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் தேர்தல் ஆணையரை நியமிக்க முடியவில்லை என்று கூறினார்.உடனே அடுத்த மார்ச்-15 க்கு விசாரணைக்கு வரும் போது ஆணையரை நியமித்ததிற்கான அரசின் ஆணையை இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டது. இந்நிலையில் வியாழன்று (மார்ச்-15) இவ்வழக்கு விசாரணையின் போது ஆஜாராண அரசு வழக்கறிஞர் மாநில தேர்தல் ஆணையர் உடிப்டரே நியமிக்கபட்டுள்ளார் என்று கூறியதுடன் அதற்கான அத்தாட்சியை தலைமை நீதிபதி இக்பால் முன்னிலையில் தாக்கல் செய்தும், தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கேட்டார்.அதன் படி சிபிஎம் செயலாளர் வெ.பெருமாள் சார்பில் ஆஜாராண வழக்கறிஞர் அ.ஸ்டாலின் மூன்று மாதத்திற்குள் புதுச்சேரி அரசு தேர்தலை நடத்த வேண்டும் என்று வாதிட்டார்.இருதரப்பு வாதத்தையும் விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் புதுச்சேரியில் 6 மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.தேர்தலை நடத்தி விட்டு அதற்கான முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்பிக்கவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
Read more...

மானைப்பட்டா வழங்ககோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம்

0 comments

புதுச்சேரி,மார்ச்-15
மானைப்பட்டா வழங்ககோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியாள்பேட்டை அடுத்து சோலைநகரில் உள்ள கசாப்புகாரன்தோப்பில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேல் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில் இம்மக்களுக்கு மாற்று இடம் கொடுக்கிறோம் என்று கூறி சட்டமன்ற உறுப்பினர் நந்தா சரவணன் முன்னிலையில் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் சபாநாயகர் பழனிவேல்ராஜாவின் மகன் சவுரிராஜன் என்பவர் காலிசெய்துள்ளார்.இதற்கு குடியிருந்த ஒருசில குடும்பங்களை தவிர மற்றவர்கள் காலிசெய்ய மருத்துள்ளனர்.இந்நிலையில் ரவுடிகளை வைத்து குடியிருந்த வீடுகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.மேலும் குடியிருந்த மக்களுக்கு இதுநாள்வரை மாற்று இடமும் வழங்கபடாதததை கண்டித்தும் குடியிருந்த மக்களுக்கே உடனடியாக மணைப்பட்டா வழங்ககோரி இப்போராட்டம் நடைபெற்றது.


சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் முத்தியாள்பேட்டை கிளை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் உண்ணாவிரத்தை துவக்கிவைத்து பேசினார்.செயற்குழு உறுபபினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,சுமதி,ராமச்சந்திரன், நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் ஆகியோர் உரையாற்றினார்கள்.இறுதியாக மாலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து கட்சியின் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் பேசினார்.ஒருநாள் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களோடு வாலிபர் சங்க நிர்வாகிகள் சந்துரு,பா°கர்,விஜிய்,அழகப்பன்,அன்துhவன் ஆகியோரும் பங்கேற்றனர்.
Read more...
Wednesday, March 14, 2012

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல் இயக்கம்

0 comments

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் புதுச்சேரி முழுவதும் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகரகமிட்டி சார்பில் நேருவீதியில் துவங்கிய தீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல் இயக்கத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் வசூல் இயக்கத்தை துவக்கி வைத்தார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,கே.முருகன்,வி.சுமதி நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மதிவாணன்,ஆவணியப்பன்,கமிட்டி உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள்,கட்சியின் திரளான ஊழியர்கள் ,வெகுஜென இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் இவ்வியக்கத்தில் பங்கேற்றனர்.நேருவீதி,காந்திவீதி,பெரியமார்க்கெட்,பாரதிவீதி,அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் 6குழுக்களாக சென்று பொதுமக்களிடமும்,கடைவியாபாரிகளிடமும் வசூல் இயக்கம் நடைபெற்றது.
புதுச்சேரி,மார்ச்-13
இதேப்போல் காரைக்காலில் வட்டச்செயலாளர் வின்சென்ட்,பிரதேசக்குழு உறுப்பினர் என்.எம்.கலியபெருமாள் ஆகியோர் தலைமையில் 2குழுக்களும்,மண்ணாடிப்பட்டுடில் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,கொம்யூன் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும்,பாகூரில் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் தமிச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் ஆகியோர் தலைமையில் ஒருகுழுவும்,வில்லினூரில் இடைகமிட்டி செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன் ஆகியோர் தலைமையில் ஒருகுழுவும் செவ்வாய்கிழமை (மார்ச்-13)மதியம் வரை வசூல் செய்தனர்.பின்னர் மாலையிலும் வசூல் இயக்கம் நடைபெற்றது.உழவர்கரை நகரபகுதியில் மாலை 4மணிக்கு துவங்கி இரவு வரை வசூல் இயக்கம் நடைபெற்றது.
Read more...
Monday, March 12, 2012

ஓய்வூதியர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் போனஸ் வழங்கிட வேண்டும்

0 comments


புதுச்சேரி,மார்ச்-9
ஓய்வூதியர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் போனஸ் வழங்கிட வேண்டும் என்று புதுச்சேரி பென்ஷனர்கள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கத்தின் முதல் ஈராண்டு மாநாடு அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் உள்ள தோழர் கே.மீனாட்சிசுந்தரம் நினைவரங்கத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் சி.எச்.பாலமோகனன் தலைமை தாங்கினார்.இனைசெயலாளர் ஆர்.கலியமூர்த்தி பிரதிநிதிகளை வரவேற்றார்.சங்கத்தின் ஈராண்டறிக்கையை சங்க செயலாளர் ஆர்.நடராஜன் தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பிரகாஷ் வாசித்தார்.மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் முன்னாள் செயல் தலைவர் கே.ராகவேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராசன்,பொதுச்செயலாளர் புகழேந்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.
நுhற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்.நகராட்சி,கொம்யூன் பஞ்சாய்த்துகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜூவிட்டி, கம்யூடேஷன் வழங்க வேண்டும்.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பென்ஷன் குறைத்தீர்ப்பு நாள் 6 மாதத்துக்கு ஒரு முறை புதுவை அரசின் துறைகள் நடத்த வேண்டும்.2006 ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற பென்ஷனர்களின் அடிப்படை ஓவ்வூதியத்தை மாற்றியமைக்க உத்தரவிட்ட மத்திய தீர்பாயத்தின் தீர்ப்பினை அமலாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
Read more...

மருத்துவ கல்லுhரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்

0 comments

புதுச்சேரி,மார்ச்-6
மருத்துவ கல்லுhரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
முhர்க்சி°ட் கட்சியின் பிரதேச செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் நiபெற்றது.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுhரியில் வேலைவாய்ப்பகம் மூலம் பணிக்கு அமர்த்தப்பட்ட 137 ஊழியர்களை அரசு நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது கண்டனத்திற்குரியதாகும்.பணிநீக்கம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லுhரியின் ஊழியர்களையும் மீண்டும் பணியில் அமர்த்திட வேண்டும்.அதேப்போல் கடந்த காங்கிர° ஆட்சி காலத்தில் 4ஆயிரம் பேர்களை அரசுத்துறை,தன்னாட்சி,கூட்டுறவு நிறுவனங்களில் முறைகேடான முறையில் பணியில் திணிக்கப்பட்டார்கள்.தற்போது உள்ள என்.ஆர் காங்கிர° ஆட்சியில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி இந்த 4 ஆயிரம் ஊழியர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.ஆனால் பான்லே,அரசு பல் மருத்துவக்கல்லுhரி,பிப்டிக்,அரசு வேளான் பண்ணை என பல அரசு சார்பு நிறுவணங்களில் கொள்ளைப்புற வழியாக மீண்டும் பணித்திணிப்பை தற்போதைய என்.ஆர் அரசு செய்து வருவது கவலை அளிப்பதாகும்.ஏற்கனவே பணி செய்து வரும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கபடவில்லை.எனவே தான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அதே நிலைமை தான் என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்கிறது.
புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பகம் மூலம் பணிக்கு அமர்த்தவும்,சட்டக்கூலியை வழங்கவும்,தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஓதுக்கீடு வழங்கவும் முன் வரவேண்டும் என மார்க்சி°ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read more...

கசாப்புகாரன் தோப்பில் குடியிருந்த மக்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டும்

0 comments

புதுச்சேரி,மார்ச்-6
கசாப்புகாரன் தோப்பில் குடியிருந்த மக்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியாள்பேட்டை அடுத்து சோலைநகரில் உள்ள கசாப்புகாரன் தோப்பில் கடந்த 10வருடங்களாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை வீடுகளை கட்டி வாழ்ந்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு மர்மான முறையில் இந்த குடிசைள் தீயில் எரிந்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மனைப்பட்டா வாங்கி தருகிறேன் என்று உறுதியளித்துள்ளார்.ஆனால் இதுநாள்வரை மணைப்பட்டா வாங்கி கொடுக்கவில்லை.இந்நிலையில் இவ்விடத்தை சொந்தம் கொண்டாடும் தனி நபர் இவ்விடத்தில் குடியிருக்கும் மக்களை காலிசெய்ய அடியாட்களை வைத்து மிரட்டுவதாக தெரிகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,முத்தியாள்பேட்டை கிளை செயலாளர் சரவணன் ஆகியோர் மாவட்ட உதவி ஆட்சியர் வின்சென்ட்ராயரை சந்தித்து மனு அளித்தனர்.மேலும் கசாப்புகாரன் தோப்பில் குடியிருக்கும் மக்களுக்கே மனைப்பட்டா வழங்க வேண்டும்.அது வரை அவ்விடத்தை யாரும் விற்கவே,வாங்கவே அனுமதியளிக்ககூடாது என்று வலியுறுத்தினர்.மனுவை பெற்று கொண்ட உதவி ஆட்சியர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Read more...

ராஜீவ்காந்தி நகர் குடியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

0 comments

புதுச்சேரி,மார்ச்-5
ராஜீவ்காந்தி நகர் குடியிருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் காமராஜர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜீவ்காந்தி நகரில் மூன்று ஏக்கர் நிலத்தில் 70 மணைகள் பிரிக்கப்பட்டு பத்திரங்களோடு விற்பனை செய்யப்பட்டது.மனைகளை வாங்கிய குடும்பங்கள் கடந்த 1990 ஆம் ஆண்டிலிருந்து அவ்விடத்தில் கல்வீடுகளை கட்டி குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில் கருவடிக்குப்பத்தில் உள்ள கருமுத்துமாரியம்மன் அரங்காவலர் குழுவினர் ராஜீவ்காந்திநகரில் குடியிருப்பவர்களிடம் இவ்விடம் கோவிலுக்கு சொந்தமானது என்று கூறி குடியிருப்பவர்களிடம் தலா ரூ.6லட்சம் கேட்டுள்ளனர்.இதற்கு அப்பகுயில் குடியிருக்கும் மக்கள் சம்மதிக்காத நிலையில் கடந்த மார்ச்-5 ஆம்தேதி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் ராஜீவ்காந்தி நகரில் உள்ள காலி மனைகளில் உள்ள காம்பவுன்டு சுவர்களை இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர்.மேலும் குடியிருக்கும் மக்களிடம் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டி சென்றுள்ளனர்.

ஆட்சியர் அலுவலம் முற்றுகை
இந்நிலையில் பாதிக்கபட்ட ராஜீவ்காந்தி நகர் குடியிருக்கும் மக்கள் தங்களது குடும்பத்தோடு திங்களன்று (மார்ச்-5) சாரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மார்க்சி°ட் கட்சியின் தலைமையில் முற்றுகையிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட கட்சி தலைவர்கள் மற்றும் குடியிருக்கும் மக்களிடம் மாவட்ட துணை ஆட்சியர் வின்சென்ட்ராயர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.இச்சந்திப்பில் மார்க்சி°ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,உழவர்கரை நகர செயலாளர் எ°.லெனின்துரை,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் மற்றும் எதிர்கட்சி தலைவர் வைத்தியலிங்கம்,சிபிஜ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.வீட்டு காம்பவுண்டு சுவர்களை இடித்த சமூக விரோதிகள் மற்றும் மோசடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கருமுத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என மாவட்ட துணை ஆட்சியரிடம் தலைவர்கள் வலியுறுத்தினர்.இன்னும் ஒரு வாரத்தில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை ஆட்சியர் உறுதி அளித்தார்.அதனை தொடர்ந்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.மேலும் குடியிருப்பதற்கான ஆவனங்களும் ஒப்படைக்கப்பட்டது.
Read more...
Friday, March 2, 2012

மாநில தேர்தல் ஆனையரை ஒரவாரத்திற்குள் நியமிக்க வேண்டும்

0 comments


புதுச்சேரி,மார்ச்-1
மாநில தேர்தல் ஆனையரை ஒரவாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவு.
புதுச்சேரி உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலம் கடந்த ஆண்டு 2011 ஜுலை 13 ஆம்தேதியுடன் முடிவடைந்தது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் 29.7.2011 ல்சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடுத்தார்.அதன்பேரில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஸ்டாலின் ஆஜாரானார்.மாநில தேர்தல் ஆனையரை நியமிக்க வேண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கபட்டது.புதுச்சேரி அரசின் கோரிக்கை ஏற்று 6 மாதத்திற்குள் (22.2.2012) உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் காலகெடு முடிய இரண்டு தினங்களுக்கு முன்பு இக்கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை வியாழனன்று (மார்ச்-1)உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேர்தல் ஆனையரைகூட இது நாள்வரை நியமிக்காதது ஏன் என்று புதுச்சேரி அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்?பிறகு ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆனையரை நியமித்து விட்டு அதற்கான ஆனையை அடுத்த வாரத்திற்கு வரும் விசாரணையின்போது சமர்பிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஸ்டாலின் ஆஜார் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


புதுச்சேரி,மார்ச்-1
புதுச்சேரி மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றுவதை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக்குழு கூட்டம் பிரதேச தலைவர் நிலவழகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் பத்மநாபன்,பொருளாளர் நாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை மசோதா 2003 அடிப்படையில் அரசின் மன்துறையை கார்ப்பரேஷனாக மாற்றும் முயற்சியை புதுச்சேரி அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றினால் மின்கட்டணம் கடுமையாக உயரும்.விவசாயிகளுக்கு வழங்கம் இலவச மின்சாரம் கைவிடப்படும்.இதனால் அடிப்படை உணவு உற்பத்தி செய்வதில் விவசாயிகள் கூடுதலான நஷ்டமடைவார்கள்.ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ஒரு விளக்கு வசதியும் கைவிடப்படும்.மேலும் ஊழியர்களின் பென்சன் கேள்விக்குறியாக்கப்படும்.எனவே புதுச்சேரி மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண்டும் என கேட்டுகொள்வதோடு மார்ச் மாதம் 3வது வாரத்தில் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.மேலும் தண்ணீரை மத்திய அரசு சேவை என்று பார்க்காமல் விற்பனை பொருளாக மாற்ற முயற்சிக்கிறது.எனவே இதனை எதிர்த்து அனைத்து பகுதி மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கருத்தரங்கம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read more...

புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தனியார்பள்ளி ஆசிரியர்கள் கைது

0 comments

புதுச்சேரி,பிப்-29
புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட தனியார்பள்ளி ஆசிரியர்கள் கைது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல ஆண்டுகளாக சொற்ப ஊதியம் பெற்று பணி செய்து வரும் தனியார்பள்ளி ஆசிரியர்களுக்கு உருவாக்கப்பட்ட பதவிகளுக்கான அரசு ஆணை என்.86 யை உடனே அமல்படுத்த வேண்டும்.கல்வித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.அரசு ஆசிரியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளையும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் வின்சென்ட் ராஜ் தலைமை தாங்கினார்.பொதுசெயலாளர் கிரிஸ்டோபர்,அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகனன்,தலைவர் ஆனந்தராஜ்,ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் சண்முகம்,தலைவர் வ°சலா,நிர்வாகி சுமதி உள்ளிட்டோர் கல்வித்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 98 ஆசிரியர்களை போலிஸார் கைது செய்தனர்.



புதுச்சேரி,பிப்-29
காலாமானார்.
மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி அரியாங்குப்பம் கிளை செயலாளர் துரைமுருகனின் தந்தை என்.துரைக்கண்ணு ( வயது 65) காலாமானர்.சிறிது காலம் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் தங்கியபடி சிகிச்சை பெற்று வந்தார்.காக்கயாந்தோப்பு வீட்டில் வைக்கப்பட்டிருந்த துரைக்கண்ணு உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு,கமிட்டி உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
Read more...

புதுச்சேரியில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது. விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.தொழிற்சங்க உரிமையை

0 comments
புதுச்சேரி,பிப்-28
புதுச்சேரியில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.தொழிற்சங்க உரிமையை நிலை நாட்ட வேண்டும்.மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் நிர்னையம் செய்ய வேண்டும்.அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தம் சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
மறியல்
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஐடியுசி மாநில தலைவர் ஆர்.விசுவநாதன்,ஏஐசிசிடியு தலைவர் பாலசுப்புரமணியம் ,பிஎம்எ° தலைவர் ராமச்சந்திரன் ,எல்பிஎப் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உள்ளிட்ட 40பெண்கள் உட்பட 191பேர் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக பாலாஜி திரையரங்கத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கைது ஆனார்கள். வில்லியனூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் சிஐடியு,ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 160பேர் கைது செய்யப்பட்டனர். இதேப்போல் அரியாங்குப்பம், திருபுவனை,கன்னியகோவில்,ஏம்பலம்,மேட்டுபாளைம்,சேதாராப்பட்டு,தட்டாஞ்சாவடி உள்ளிட்ட ஒன்பது மையங்களில் நடந்த மறியல் போரட்டத்தில் சிஐடியு,ஏஐடியுசி சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி அரசு ஊழியர்கள் தர்ணா
புதுச்சேரி தலைமை செயலகம்,சட்டபேரவை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவாக இருந்ததால் அரசு பணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசன் தலைமையில் தாபால் நிலையம் எதிரே நடந்த தர்ணா போராட்டத்தில் சம்மேளன கவுரதலைவர் பாலமோகனன், உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,அங்கன்வாடி ஊழியர்கள்,உள்ளாட்சி,தன்னாட்சி,கூட்டுறவுதுறை ஊழியர்கள் வேலையை புறகனித்து தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.இதேப்போல் மின்துறைதுறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.ராமசாமி தலைமையில் உப்பளத்தில் உள்ள மின்துறை எதிரே அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.அரசின் பிஆர்டிசி பேரூந்துகள் இயக்கபடவில்லை.இதேப்போல் புதுச்சேரி அரசு மருத்துவமனை ஊழியர்களும்,மத்திய அரசின் சுகாதாரகட்டுபாட்டில் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎ°என்எல்,வங்கி ,எல்ஐசி சேவை பாதிப்பு
புதுச்சேரி பிஎ°என்எல் ஊழியர்கள் தங்கள் பணியை புறக்கனித்து ரங்கப்பிள்ளைவீதியில் உள்ள தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பிஎ°என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன்,செயலாளர் சங்கரன்,என்எப்டிஈ சங்க தலைவர் மகேஷ்வரன்,செயலாளர் காமராஜ்,ஏடிஎம் தலைவர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.இதனால் பிஎ°என்எல் சேவை முற்றிலும் தடைப்பட்டது.இதேப்போல் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி முகவர்கள் சங்கம்( லிகாய் ) மாநிலக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின், கல்விகுழு தலைவர் ராம்ஜி,தலைவர் அன்பரசிஜூலியட்,செயலாளர் பு°பராஜ், உள்ளிட்ட திரளான ஊழியர்கள்,முகவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.இதேப்போல் நான்கு பொது இன்சூரன்° நிறுவனங்கள், ,தாபல், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.வங்கிசேவைகளும் பாதிக்கப்பட்டது.டெம்போ,ஆட்டோ ஒட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read more...

டெம்போ நாள் வாடகை உயர்வை கைவிடக்கோரி

0 comments

புதுச்சேரி,பிப்-27
டெம்போ நாள் வாடகை உயர்வை கைவிடக்கோரி சிஐடியு சார்பில் திங்களன்று சுதேசி பஞ்சாலை எதிரில் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.இப்பிரச்சைனையில் புதுச்சேரி அரசு தலையிட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பங்கேற்று பேசினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம் ,குணசேகரன்,சிவக்குமார்,லிங்கேசன் வேலு,மதிவாணன்,சாமிநாதன் உள்ளிட்ட திரளான டெம்போ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.


புதுச்சேரி,பிப்-27
வேலைநிறுத்ததிற்கு ஆதரவாக மருந்துவிற்பனைபிரதிநிதிகள் புதுச்சேரியில் தெருமுனைப்பிரச்சாரம்.
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10ஆயிரம் அறிவிக்ககோரி உள்ளிட்ட பத்து அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தை புதுச்சேரியில் வெற்றிபெறச்செய்யகோரி மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்திற்கு மருந்து விற்பனைபிரதிநிதிகள் சங்கத்தின் புதுச்சேரி கிளைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சிவக்கமார்,குணசேகரன்,கிளைசெயலாளர் சதிஸ்பாபு,சந்துரு,சுந்தரராஐன் உள்ளிட்டோர் பேசினார்கள்.தலைமை தபால் நிலையம்,சின்னமணிகூண்டு,நேருவீதி,முத்தியாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
Read more...

உயர்த்திய வாடகையை திரும்பபெறக்கோரி டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments

புதுச்சேரி,பிப்-24
உயர்த்திய வாடகையை திரும்பபெறக்கோரி டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பேரூந்து நிலையத்திலிருந்து நுhற்றுக்கும் மேற்பட்ட டெம்போக்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு டெம்போ வாடகை ரூ.700 மட்டும் ஒட்டுநர்களிடம் வசூலிக்கபட்டு வந்தது.இந்நிலையில் டெம்போ உரிமையாளர்கள் திடிரென்று நாள் வாடகை ரூ.700 லிருந்து ரூ.1100 ஆக உயர்த்தப்பட்டது. இந்த வாடகை உயர்வால் டெம்போ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கபட்டனர்.எனவே உரிமையாளர்கள்,காவல்துறை அதிகாரிகள்,சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்தபடி நாள் வாடகையை ரூ.850 யை உரிமையாளர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு டெம்போ ஓட்டுநர்கள் சங்கத்தின் சிஐடியு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,லிங்கேசன்வேலு ,மதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். டெம்போ சங்க செயலாளர் ரமேஷ்,ராnஐந்திரன்,சுந்தரராஜ் உள்ளிட்ட திரளான ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.முன்னதாக பாரதி பஞ்சாலையில் இருந்து முதலியார்பேட்டை வழியாக ஊர்வளமாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read more...

பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெற ஆய்த்த பேரணி அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுச்சேரியில் நடையபெற்றது

0 comments

புதுச்சேரி,பிப்-23
பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பிப்ரவரி 28 ல் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தை வெற்றி பெற ஆய்த்த பேரணி அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் புதுச்சேரியில் நடையபெற்றது.
புதிய பென்சன் திட்ட மசோதாவை கைவிட வேண்டும்.அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் துவங்கிய பேரணிக்கு அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராசன் தலைமை தாங்கினார்.சம்மேளன கவுரதலைவர் பாலமோகனன்,பொதுச்செயலாளர் புகழேந்தி,ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள்,சம்மேளன நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசாலை,நேருவீதியை கடந்து தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read more...

மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மற்றம் பொறியாளர்கள் சார்பில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments

புதுச்சேரி,பிப்-22
மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் மற்றம் பொறியாளர்கள் சார்பில் புதுச்சேரி சட்டமன்றம் முன்பு பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் கீழ் இயங்கும் மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றினால் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து விடுபட்டு மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரம்,மானியத்துடன் கிடைப்பது கேள்விகுறியாகும்.மேலும் நீண்ட மணிநேரம் மின்தடையும் ஏற்படும்.மேலும் இலவச மின்சாரம் தடைபட்டு கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவே புதுச்சேரி அரசின் மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஊழியர்கள்,பொறியாளர்கள் சார்பில்; இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மின்துறை எதிரில் இருந்து துவங்கிய இப்போராட்டத்திற்கு மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.பொதுசெயலாளர் இராமசாமி,பொருளாளர் தனிகாசலம் சிஐடியூ நிர்வாகிகள் நாராயணன்,ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான ஊழியர்கள்; பொறியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.அண்ணாசாலை,நேருவீதியை கடந்து சட்டமன்றம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது.பின்னர் மின்சாரதுறை அமைச்சர் தியாகராஜனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
Read more...

தானே புயலால் பாதிக்கப்டட விவசாயகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க கோரி

0 comments
புதுச்சேரி,பிப்-21
தானே புயலால் பாதிக்கப்டட விவசாயகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாகூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவித்த நிவாரணத்தொகையை பாரபட்சம் இல்லாமல் வழங்கவேண்டும்.விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பாகூரில் விவசாய நிலங்களுக்கு மின்வினியோகம் செய்ய வேண்டும்.ஐ மாஸ் ஒலி விளக்குகளை எரிய செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பாகூர் மின்துறை அலுவலகம் எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள் ராமசாமி,அரிதாஸ்,கலியன்,காந்திமா,தேவராசு,செல்வராஜ்,சாம்பசிவம், சேகர்,குப்புசாமி உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதுச்சேரி,பிப்-21
ஆகில இந்திய பொதுவேலை நிறுத்ததில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்பு.
பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதது வருமாறு,
1971ல் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி பொதுத்துறைகளை தேசியமயமாக்கினார்.கடந்த 41 ஆண்டுகாளமாக ஏழை எளிய மக்களுக்கு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் சிறந்த சேவை செய்துவருவதோடு கோடி கணக்கான வருவாயை அரசுக்கு ஈட்டியுள்ளது.
இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை கொண்டுவருகிறது.இந்திய மக்களின் சேமிப்பு கொள்ளை போகின்ற அபாயம் இதன் மூலம் உள்ளது.எனவே அரசின் இம்முடிவை எதிர்;த்து பிப்ரவரி 28ல் நடைபெறும் பொதுவேலைநிறுத்ததில்; பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றார்.பேட்டியின் போது சென்னை மன்டல பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரி,புதுச்சேரி மாவட்ட செயலாளர் பாலபாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரி,பிப்-21

பொதுவேலை நிறுத்தத்தில்; அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க முடிவு.
ஆனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு செயற்குழுகூட்டம் புதுச்சேரி வீரமாமுனிவர் அரசு பள்ளியில் நடைபெற்றது.ஆசிரியர் சங்கத்தின் கவுரவ தலைவரும்,சம்மேளன ஆலோசகரகருமான நா.சண்முகம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசயகுழு உறுப்பினர் இராச.ஜெயராமன் முன்னிலை வகித்தார்.சம்மேளன பொருப்பாளர்கள் கீதா,முருகவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினார்கள.திரளான ஆசிரியர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள் வருமாறு,
நாடு தழுவிய அளவில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28ல் நடைபெறும் பொதுவேலைநிறுத்ததில் புதுச்சேரியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,பயிற்சி பெற்ற பட்டதாரி மொழி ஆசிரியர்கள் ;சங்கம்,உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.மேலும் வேலைநிறுத்ததிற்கு ஆதரவாக பிப்-22ல் சட்டமன்றம்நோக்கி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் நடைபெறும் பேரணியில் அனைத்து ஆசிரியர்கள் பங்கேற்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com