Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, March 2, 2012

உயர்த்திய வாடகையை திரும்பபெறக்கோரி டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments

புதுச்சேரி,பிப்-24
உயர்த்திய வாடகையை திரும்பபெறக்கோரி டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி பேரூந்து நிலையத்திலிருந்து நுhற்றுக்கும் மேற்பட்ட டெம்போக்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு டெம்போ வாடகை ரூ.700 மட்டும் ஒட்டுநர்களிடம் வசூலிக்கபட்டு வந்தது.இந்நிலையில் டெம்போ உரிமையாளர்கள் திடிரென்று நாள் வாடகை ரூ.700 லிருந்து ரூ.1100 ஆக உயர்த்தப்பட்டது. இந்த வாடகை உயர்வால் டெம்போ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கபட்டனர்.எனவே உரிமையாளர்கள்,காவல்துறை அதிகாரிகள்,சிஐடியு நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் முடிவு செய்தபடி நாள் வாடகையை ரூ.850 யை உரிமையாளர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு டெம்போ ஓட்டுநர்கள் சங்கத்தின் சிஐடியு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,லிங்கேசன்வேலு ,மதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். டெம்போ சங்க செயலாளர் ரமேஷ்,ராnஐந்திரன்,சுந்தரராஜ் உள்ளிட்ட திரளான ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.முன்னதாக பாரதி பஞ்சாலையில் இருந்து முதலியார்பேட்டை வழியாக ஊர்வளமாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com