Pages

ShareThis

Powered by Blogger.
 
Tuesday, March 27, 2012

விலை வாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நடந்த மறியல் போராட்டத்தில் 800பேர் கைது

0 comments


புதுச்சேரி,மார்ச்-27

மத்திய மாநில அரசுகளின் விலை வாசி உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நடந்த மறியல் போராட்டத்தில் 800பேர் கைது செய்யப்பட்டார்கள்.
தனேபுயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும்.புதுச்சேரி அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டணம்,பால் கட்டணத்தை குறைக்க வேண்டும்.100நாள் வேலை உறுதி திட்டத்தை துவக்க வேண்டும்.குடியிருக்கும் இடத்திற்கும்,கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு இலவச மணைப்பட்டா வழங்க வேண்டும்.விலைநிலங்கள் ரியல் எ°டேட்களாக மாற்றபடுவதை தடுக்க வேண்டும்.சுதேசி,பாரதி,ஏஎப்டி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நான்கு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நகரத்தையொட்டி சாரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சுகுமார்,பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,கே.முருகன்,வி.சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவானன்,சத்தியா,மற்றும் குணசேகரன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் கட்சி ஊழியர்கள் உட்பட திரளானோர் மறியலில் பங்கேற்று கைதானார்கள்.முன்னதாக பெரியார் சிலையில் இருந்து மத்திய மாநில அரசுகளை எதிர்த்து முழக்கமிட்டவாறு ஊர்வலாமாக வந்தனர்.

வில்லியனூர்

வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடந்த மறியல் போராட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஜி.ராமசாமி,மண்ணாடிபட்டு கொம்யூன் செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள்,ஆவணியப்பன்,சங்கர்,அன்புமணி,மணிபாலன் மற்றும் உலகநாதன்,சிவக்குமார்,பாபு உள்ளிட்ட திரளானோர் கைது செய்யப்பட்டார்கள்.

பாகூர்
பாகூர் தாலுக்கா அலுவலகம் முன்பு நடந்த மறியலில் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர்கள் முருகையன்,தமிழ்ச்செல்வன்,பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,மாரிமுத்து,மற்றும் ராமசாமி,கலியன்,ரத்தினவேல், உள்ளிட்ட திரளான பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

காரைக்கால்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,பகுதி செயலாளர் வின்சென்ட்,பிரதேசகுழு உறுப்பினர்கள் கலியபெருமாள்,ரவி,மற்றும் பகுதிக்குழு உறுப்பினர்கள் இராமர்,தனிம் உள்ளிட்ட திரளானோர் கைது செய்யப்பட்டார்கள்.நான்கு மையங்களில் நடந்த இம்மறியல் போராட்டத்தில் 800 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டார்கள்.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com