புதுச்சேரி,பிப்-28புதுச்சேரியில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.தொழிற்சங்க உரிமையை நிலை நாட்ட வேண்டும்.மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் நிர்னையம் செய்ய வேண்டும்.அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய மசோதாவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தம் சிஐடியு,ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மறியல்
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,ஏஐடியுசி மாநில தலைவர் ஆர்.விசுவநாதன்,ஏஐசிசிடியு தலைவர் பாலசுப்புரமணியம் ,பிஎம்எ° தலைவர் ராமச்சந்திரன் ,எல்பிஎப் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உள்ளிட்ட 40பெண்கள் உட்பட 191பேர் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக பாலாஜி திரையரங்கத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கைது ஆனார்கள். வில்லியனூரில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் சிஐடியு,ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 160பேர் கைது செய்யப்பட்டனர். இதேப்போல் அரியாங்குப்பம், திருபுவனை,கன்னியகோவில்,ஏம்பலம்,மேட்டுபாளைம்,சேதாராப்பட்டு,தட்டாஞ்சாவடி உள்ளிட்ட ஒன்பது மையங்களில் நடந்த மறியல் போரட்டத்தில் சிஐடியு,ஏஐடியுசி சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி அரசு ஊழியர்கள் தர்ணா
புதுச்சேரி தலைமை செயலகம்,சட்டபேரவை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவாக இருந்ததால் அரசு பணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஆனந்தராசன் தலைமையில் தாபால் நிலையம் எதிரே நடந்த தர்ணா போராட்டத்தில் சம்மேளன கவுரதலைவர் பாலமோகனன், உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்,அங்கன்வாடி ஊழியர்கள்,உள்ளாட்சி,தன்னாட்சி,கூட்டுறவுதுறை ஊழியர்கள் வேலையை புறகனித்து தர்ணா போராட்டத்தில் பங்கேற்றனர்.இதேப்போல் மின்துறைதுறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.ராமசாமி தலைமையில் உப்பளத்தில் உள்ள மின்துறை எதிரே அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.அரசின் பிஆர்டிசி பேரூந்துகள் இயக்கபடவில்லை.இதேப்போல் புதுச்சேரி அரசு மருத்துவமனை ஊழியர்களும்,மத்திய அரசின் சுகாதாரகட்டுபாட்டில் இயங்கும் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை ஆதரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎ°என்எல்,வங்கி ,எல்ஐசி சேவை பாதிப்பு
புதுச்சேரி பிஎ°என்எல் ஊழியர்கள் தங்கள் பணியை புறக்கனித்து ரங்கப்பிள்ளைவீதியில் உள்ள தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பிஎ°என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சியப்பன்,செயலாளர் சங்கரன்,என்எப்டிஈ சங்க தலைவர் மகேஷ்வரன்,செயலாளர் காமராஜ்,ஏடிஎம் தலைவர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.இதனால் பிஎ°என்எல் சேவை முற்றிலும் தடைப்பட்டது.இதேப்போல் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி முகவர்கள் சங்கம்( லிகாய் ) மாநிலக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின், கல்விகுழு தலைவர் ராம்ஜி,தலைவர் அன்பரசிஜூலியட்,செயலாளர் பு°பராஜ், உள்ளிட்ட திரளான ஊழியர்கள்,முகவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.இதேப்போல் நான்கு பொது இன்சூரன்° நிறுவனங்கள், ,தாபல், அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.வங்கிசேவைகளும் பாதிக்கப்பட்டது.டெம்போ,ஆட்டோ ஒட்டுநர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.