
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் புதுச்சேரி முழுவதும் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகரகமிட்டி சார்பில் நேருவீதியில் துவங்கிய தீக்கதிர் வளர்ச்சி நிதி வசூல் இயக்கத்திற்கு செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம் தலைமை தாங்கினார்.மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் வசூல் இயக்கத்தை துவக்கி வைத்தார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,கே.முருகன்,வி.சுமதி நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மதிவாணன்,ஆவணியப்பன்,கமிட்டி உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள்,கட்சியின் திரளான ஊழியர்கள் ,வெகுஜென இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் இவ்வியக்கத்தில் பங்கேற்றனர்.நேருவீதி,காந்திவீதி,பெரியமார்க்கெட்,பாரதிவீதி,அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் 6குழுக்களாக சென்று பொதுமக்களிடமும்,கடைவியாபாரிகளிடமும் வசூல் இயக்கம் நடைபெற்றது.

புதுச்சேரி,மார்ச்-13
இதேப்போல் காரைக்காலில் வட்டச்செயலாளர் வின்சென்ட்,பிரதேசக்குழு உறுப்பினர் என்.எம்.கலியபெருமாள் ஆகியோர் தலைமையில் 2குழுக்களும்,மண்ணாடிப்பட்டுடில் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,கொம்யூன் செயலாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவும்,பாகூரில் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் தமிச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் ஆகியோர் தலைமையில் ஒருகுழுவும்,வில்லினூரில் இடைகமிட்டி செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன் ஆகியோர் தலைமையில் ஒருகுழுவும் செவ்வாய்கிழமை (மார்ச்-13)மதியம் வரை வசூல் செய்தனர்.பின்னர் மாலையிலும் வசூல் இயக்கம் நடைபெற்றது.உழவர்கரை நகரபகுதியில் மாலை 4மணிக்கு துவங்கி இரவு வரை வசூல் இயக்கம் நடைபெற்றது.