Pages

ShareThis

Powered by Blogger.
 
Friday, March 2, 2012

தானே புயலால் பாதிக்கப்டட விவசாயகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க கோரி

0 comments
புதுச்சேரி,பிப்-21
தானே புயலால் பாதிக்கப்டட விவசாயகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாகூரில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுச்சேரி அரசு அறிவித்த நிவாரணத்தொகையை பாரபட்சம் இல்லாமல் வழங்கவேண்டும்.விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் வழங்க வேண்டும்.வங்கியில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பாகூரில் விவசாய நிலங்களுக்கு மின்வினியோகம் செய்ய வேண்டும்.ஐ மாஸ் ஒலி விளக்குகளை எரிய செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பாகூர் மின்துறை அலுவலகம் எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள் ராமசாமி,அரிதாஸ்,கலியன்,காந்திமா,தேவராசு,செல்வராஜ்,சாம்பசிவம், சேகர்,குப்புசாமி உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

புதுச்சேரி,பிப்-21
ஆகில இந்திய பொதுவேலை நிறுத்ததில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்பு.
பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதது வருமாறு,
1971ல் முன்னால் பிரதமர் இந்திராகாந்தி பொதுத்துறைகளை தேசியமயமாக்கினார்.கடந்த 41 ஆண்டுகாளமாக ஏழை எளிய மக்களுக்கு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் சிறந்த சேவை செய்துவருவதோடு கோடி கணக்கான வருவாயை அரசுக்கு ஈட்டியுள்ளது.
இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதாவை கொண்டுவருகிறது.இந்திய மக்களின் சேமிப்பு கொள்ளை போகின்ற அபாயம் இதன் மூலம் உள்ளது.எனவே அரசின் இம்முடிவை எதிர்;த்து பிப்ரவரி 28ல் நடைபெறும் பொதுவேலைநிறுத்ததில்; பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றார்.பேட்டியின் போது சென்னை மன்டல பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரி,புதுச்சேரி மாவட்ட செயலாளர் பாலபாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

புதுச்சேரி,பிப்-21

பொதுவேலை நிறுத்தத்தில்; அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க முடிவு.
ஆனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு செயற்குழுகூட்டம் புதுச்சேரி வீரமாமுனிவர் அரசு பள்ளியில் நடைபெற்றது.ஆசிரியர் சங்கத்தின் கவுரவ தலைவரும்,சம்மேளன ஆலோசகரகருமான நா.சண்முகம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசயகுழு உறுப்பினர் இராச.ஜெயராமன் முன்னிலை வகித்தார்.சம்மேளன பொருப்பாளர்கள் கீதா,முருகவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினார்கள.திரளான ஆசிரியர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மாணங்கள் வருமாறு,
நாடு தழுவிய அளவில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28ல் நடைபெறும் பொதுவேலைநிறுத்ததில் புதுச்சேரியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,பயிற்சி பெற்ற பட்டதாரி மொழி ஆசிரியர்கள் ;சங்கம்,உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.மேலும் வேலைநிறுத்ததிற்கு ஆதரவாக பிப்-22ல் சட்டமன்றம்நோக்கி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் நடைபெறும் பேரணியில் அனைத்து ஆசிரியர்கள் பங்கேற்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com