புதுச்சேரி,பிப்-27
டெம்போ நாள் வாடகை உயர்வை கைவிடக்கோரி சிஐடியு சார்பில் திங்களன்று சுதேசி பஞ்சாலை எதிரில் ஒரு நாள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.இப்பிரச்சைனையில் புதுச்சேரி அரசு தலையிட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பங்கேற்று பேசினார்.சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,நிர்வாகிகள் ராஜாங்கம் ,குணசேகரன்,சிவக்குமார்,லிங்கேசன் வேலு,மதிவாணன்,சாமிநாதன் உள்ளிட்ட திரளான டெம்போ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி,பிப்-27
வேலைநிறுத்ததிற்கு ஆதரவாக மருந்துவிற்பனைபிரதிநிதிகள் புதுச்சேரியில் தெருமுனைப்பிரச்சாரம்.
குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10ஆயிரம் அறிவிக்ககோரி உள்ளிட்ட பத்து அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தை புதுச்சேரியில் வெற்றிபெறச்செய்யகோரி மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்திற்கு மருந்து விற்பனைபிரதிநிதிகள் சங்கத்தின் புதுச்சேரி கிளைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சிவக்கமார்,குணசேகரன்,கிளைசெயலாளர் சதிஸ்பாபு,சந்துரு,சுந்தரராஐன் உள்ளிட்டோர் பேசினார்கள்.தலைமை தபால் நிலையம்,சின்னமணிகூண்டு,நேருவீதி,முத்தியாள்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.