Pages

ShareThis

Powered by Blogger.
 
Monday, March 12, 2012

ஓய்வூதியர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் போனஸ் வழங்கிட வேண்டும்

0 comments


புதுச்சேரி,மார்ச்-9
ஓய்வூதியர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் போனஸ் வழங்கிட வேண்டும் என்று புதுச்சேரி பென்ஷனர்கள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பென்ஷனர்கள் சங்கத்தின் முதல் ஈராண்டு மாநாடு அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் உள்ள தோழர் கே.மீனாட்சிசுந்தரம் நினைவரங்கத்தில் நடைபெற்றது.இம்மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் சி.எச்.பாலமோகனன் தலைமை தாங்கினார்.இனைசெயலாளர் ஆர்.கலியமூர்த்தி பிரதிநிதிகளை வரவேற்றார்.சங்கத்தின் ஈராண்டறிக்கையை சங்க செயலாளர் ஆர்.நடராஜன் தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பிரகாஷ் வாசித்தார்.மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின் முன்னாள் செயல் தலைவர் கே.ராகவேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஆனந்தராசன்,பொதுச்செயலாளர் புகழேந்தி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.
நுhற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்.நகராட்சி,கொம்யூன் பஞ்சாய்த்துகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு கிராஜூவிட்டி, கம்யூடேஷன் வழங்க வேண்டும்.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பென்ஷன் குறைத்தீர்ப்பு நாள் 6 மாதத்துக்கு ஒரு முறை புதுவை அரசின் துறைகள் நடத்த வேண்டும்.2006 ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற பென்ஷனர்களின் அடிப்படை ஓவ்வூதியத்தை மாற்றியமைக்க உத்தரவிட்ட மத்திய தீர்பாயத்தின் தீர்ப்பினை அமலாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com