
புதுச்சேரி,மார்ச்-1
மாநில தேர்தல் ஆனையரை ஒரவாரத்திற்குள் நியமிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதுச்சேரி அரசுக்கு உத்தரவு.
புதுச்சேரி உள்ளாட்சி பிரதிநிதிகளின் காலம் கடந்த ஆண்டு 2011 ஜுலை 13 ஆம்தேதியுடன் முடிவடைந்தது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் 29.7.2011 ல்சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடுத்தார்.அதன்பேரில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஸ்டாலின் ஆஜாரானார்.மாநில தேர்தல் ஆனையரை நியமிக்க வேண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் காலஅவகாசம் கேட்கபட்டது.புதுச்சேரி அரசின் கோரிக்கை ஏற்று 6 மாதத்திற்குள் (22.2.2012) உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் காலகெடு முடிய இரண்டு தினங்களுக்கு முன்பு இக்கால அவகாசத்தை நீடிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை வியாழனன்று (மார்ச்-1)உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதி உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேர்தல் ஆனையரைகூட இது நாள்வரை நியமிக்காதது ஏன் என்று புதுச்சேரி அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்?பிறகு ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆனையரை நியமித்து விட்டு அதற்கான ஆனையை அடுத்த வாரத்திற்கு வரும் விசாரணையின்போது சமர்பிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அஸ்டாலின் ஆஜார் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.புதுச்சேரி,மார்ச்-1
புதுச்சேரி மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றுவதை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேசக்குழு கூட்டம் பிரதேச தலைவர் நிலவழகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர் பத்மநாபன்,பொருளாளர் நாகப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,மத்திய அரசின் மின்சார ஒழுங்குமுறை மசோதா 2003 அடிப்படையில் அரசின் மன்துறையை கார்ப்பரேஷனாக மாற்றும் முயற்சியை புதுச்சேரி அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றினால் மின்கட்டணம் கடுமையாக உயரும்.விவசாயிகளுக்கு வழங்கம் இலவச மின்சாரம் கைவிடப்படும்.இதனால் அடிப்படை உணவு உற்பத்தி செய்வதில் விவசாயிகள் கூடுதலான நஷ்டமடைவார்கள்.ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ஒரு விளக்கு வசதியும் கைவிடப்படும்.மேலும் ஊழியர்களின் பென்சன் கேள்விக்குறியாக்கப்படும்.எனவே புதுச்சேரி மின்துறையை கார்ப்பரேஷனாக மாற்றும் முயற்சியை முற்றிலுமாக கைவிட வேண்டும் என கேட்டுகொள்வதோடு மார்ச் மாதம் 3வது வாரத்தில் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.மேலும் தண்ணீரை மத்திய அரசு சேவை என்று பார்க்காமல் விற்பனை பொருளாக மாற்ற முயற்சிக்கிறது.எனவே இதனை எதிர்த்து அனைத்து பகுதி மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கருத்தரங்கம் நடத்துவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.