Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, October 16, 2013

கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,அக்.7-

கந்துவட்டிகாரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி ஆட்சியர் அலுவலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அநியாய வட்டி வசூல் செய்யும் கந்து வட்டி கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெத்துசெட்டிப்பேட்டை கொல்லிமேடு மைதானத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து கொடுக்க வேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தெசிய நெடுஞ்சாலையில் மதுபானகடைகள் அமைப்பதை புதுச்சேரியில் தடை செய்ய வேண்டும்.லாஸ்பேட்டை சென்பக விநாயகர் கோவில் எதிரில் நீண்ட காலமாக குடியிருக்கும் மக்களுக்கு இலவச மணைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்த்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரைநகரக்குழு செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள் கண்டன உரையாற்றினார்.பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன்,கமிட்டி உறுப்பினர்கள் குணசேகரன்,குப்புசாமி,பாஸ்கர்,சந்துரு,ஜெயலக்ஸ்மி,மற்றும் முருகதாஸ் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கந்துவட்டி கொடுமையால் தூக்கில் தொங்கும் அவல நிலை உள்ள மாதிரி காட்சியை பிரதிபலித்தனர்.
Read more...
Wednesday, October 2, 2013

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,அக்.2-

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மத்திய பல்கலைகழத்தில் முதலாம்ஆண்டு பயிலும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொள்ளை கொடுத்தும், கொலை மிரட்டல் விடுத்த சீனியர் மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாலியல் தடைச்சட்டத்தின் கீழ் புதுச்சேரி பல்கலைகழகத்தில் பாலியர் புகார் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.அன்டை மாநிலங்களில் உள்ளதை போல் புதுச்சேரியில் ராக்கிங் தடைச்சட்டம் இயற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் பிரதேசக் செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர் தா.முருகன் கண்டன உரையை துவக்கி வைத்து பேசினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச துணைத்தலைவர் சுமதி,கட்சியின் செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை மற்றும் பாதிக்கப்பட்ட பல்கலைகழக மாணவ மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
Read more...
Sunday, September 29, 2013

இடதுசாரிகளின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம்

0 comments

புதுச்சேரி,செப்.29-
இடதுசாரிகளின் மாற்றுப்பாதை விளக்க பிரச்சார நடைபயணம் பதுச்சேரியில் நடைபெற்றது.

நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.கல்வி சுகாரதாரத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும் என்பன9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும்,கடந்த 20ஆண்டுகளாக காங்கிரஸ் ,பாஜக கட்சிகள் கடைபிடிக்கப்பட்ட பொருளாதார கொள்கைக்கு மாற்று இடதுசாரிகட்சிகள் முன்வைத்துள்ள கொள்கைபிரகடத்தை  வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் துவங்கிய நடைபயணபிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சயின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் தா.முருகன் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர்கள்  ராஜாங்கம்,சுமதி,இடைகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன்,அழகர்ராஜ்,உள்ளிட்ட திரளானோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.முன்னதாக முத்தியால்பேட்டையல் துவங்கிய பிரச்சாரம் மணிகூண்டு,சின்னையாபுரம்,ஈஸ்வரன் கோவில்,காந்திவீதி,நேருவீதி ஆகிய பகுதிகளில் நடைபயணபிரச்சாரம் நடைபெற்றது.
Read more...

செவிலியர் நியமன தேர்வில் நடந்துள்ள முறைகேட்டை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,செப்.27- 




புதுச்சேரி ஜிப்மரில் காலியாக உள்ள 400க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜிப்மர் தன்னாட்சி மசோதாவில் உறுதியளித்துள்ளபடி பி,சி,டி பிரிவு காலி பணியிடங்களுக்கு புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும்.ஜிப்மரில் கட்டுமானப்பணி மற்றும் பணிநியமனம்,பதவிஉயர்வு ஆகியவற்றில் நடைபெற்றுள்ள முறைகேடு பற்றி பொதுப்பணித்துறை,சுகாதாரத்துறை மூலம் துறைச்சார்ந்த விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி ஜிப்மர் வாயில் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ்,தமிழ்ச்செல்வன்,முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மதிவாணன்,நடராஜன்,மணிபாலன் உள்ளிட்ட திரளனோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக செவிலியர் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கமிட்டனர்.
Read more...
Friday, September 20, 2013

ஜிப்மர் மருத்துவமனைக்கான செவிலியர்கள் தேர்வில் நடந்துள்ள மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக.

0 comments
ஜிப்மர் மருத்துவமனைக்கான செவிலியர்கள் தேர்வில் நடந்துள்ள மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக.

       காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாராளமயக் கொள்கையால் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ளது. புதிய புதிய ஊழல்களும், முறைகேடுகளும் தொடர்ந்து அணிவகுத்து நிற்கிறது. இந்த வரிசையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனை நிர்வாகத்தின் செவிலியர்கள் தேர்வில் நவீன மோசடியும் அணிவகுத்துள்ளது.

       ஜிப்மர் மருத்துமனைக்காக 465 செவிலியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி, சென்னை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. 15996 பேர் தேர்வு எழுதினார்கள். 463 பேர் செவிலியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டவர்களில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து 100 பேரும், புதுச்சேரியில் (காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட) 33 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் திருவனந்தபுரம் மையத்தில் இருந்து மட்டும் 330 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

       மேலும் ஜிப்மர் epu;thf அலுவலர் உண்ணிக்கிருஷ்ணன் மேற்பார்வையில் நடந்த மையத்தில் இருந்து கணிசமானவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இந்த தேர்வில் விதிமுறைகளும், நடைமுறைகளும் மீறப்பட்டுள்ளது. தேர்வு நடத்திய அலுவலர்களும், ஜிப்மர் நிர்வாகமும் சேர்ந்து கூட்டாக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதற்கான, பலகோடி ரூபாய் பணம் கைமாறியுள்ளதற்கான வலுவான முகாந்திரம் உள்ளது. ஆகவே, செவிலியர் நியமன பணித்தேர்வு குறித்து உயர்மட்ட நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

       ஜிப்மர் தன்னாட்சி மசோதா 2006 சட்டமாக நிறைவேற்றுகிற போது நடைமுறையில் இருந்துவருகிற இலவச மருத்துவசேவை, இலவச மருத்துவக்கல்வி, புதுச்சேரி இளைஞர்களுக்கு B, C மற்றும் D பிரிவு பணியிடங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் ஆகியவை தொடரும் என நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அனைத்தையும் ஜிப்மர் நிர்வாகம் மறுத்துவருகிறது. இது புதுச்சேரி மாநில மக்களுக்கும், ஊழியர்களுக்கும் இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகமாகும்.

       ஆகவே, மத்திய அரசு இப்பிரச்சனையில் உடன் தலையிட்டு செவிலியர்கள் நியமனத் தேர்வில் நடந்துள்ள மிகப்பெரும் மோசடி கூட்டுச்சதி குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரையில் செவிலியர் பணிநியமனத்தை நிறுத்திitf;f வேண்டும் vd khu;f;rp];l; fl;rp Nfl;Lf;nfhs;fpd;wJ. மேலும் ஜிப்மரில் B, C மற்றும்  D பிரிவு காலிப் பணியிடங்களுக்கு புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை mspj;J epug;g வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  இக்கோரிக்கையை முன்வைத்து 27.09.2013ல் ஜிப்மர் மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்துப் பகுதி மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுகிறோம்.

                                                       ,tz;

                                                                                                                      nt.ngUkhs;
gpuNjr nrayhsu;


Read more...
Monday, September 16, 2013

மத்திய அரசின் முகவராக செயல்படுவதா? : புதுச்சேரி ஆளுநரை திரும்பப்பெற டி.கே.ரங்கராஜன் எம்பி வலியுறுத்தல்

0 comments
புதுச்சேரி,செப். 12-

மத்திய காங்கிரஸ் அர சின் முகவராக புதுச்சேரி துணை நிலை ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி புதுச்சேரியில் வியாழன்று (செப்.12) செய்தி யாளர்களுக்கு பேட்டியளிக் கையில் கூறியதாவது:-

ஓய்வூதியர்களுக்கு எதி ராகவே மத்திய அரசு புதிய ஓய்வூதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த மசோதாவை எதிர்த்து இடதுசாரி மற்றும் அதி முக எம்பிக்கள் மட்டுமே வாக்களித்தனர். ஆனால், பாஜக-வினர் மத்திய அர சுக்கு ஆதரவாகவே வாக் களித்தனர்.மத்திய ஆட்சியாளர் களின் தவறான தொழிற் கொள்கையால் காங்கிரஸ் ஆட்சி செய்யாத மாநிலங் கள் மட்டுமின்றி, புதுச்சேரி போன்று காங்கிரஸ் ஆட்சி பல்வேறு மாநிலங்களிலும் தொழில் நெருக்கடி ஏற்பட் டுள்ளது. இதனால் சமூக குற்றங்கள் அதிகரித்துள் ளன. காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்களிலும் சட்டம்-ஒழுங்கு சீர்கெட் டுள்ளது. முதல்வர் என். ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசின் செயல் பாட்டில் மார்க்சிஸ்ட் கட் சிக்கு கடும் அதிருப்தி உள்ளது.

எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சனையில் மாநிலங்களுக்கு தேவை யான சமூக முன்னேற்ற திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்று கொடுக்க வேண்டியது ஆளுநரின் செயலாகவே இருக்க வேண்டும். மாநில அந்தஸ்து, உள் ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளில் துணை நிலை ஆளு நர் வீரேந்திர கட்டாரிய ஈடுபட்டிருக்க வேண்டும். மேலும், தற்போது எழுந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்வ ரோடு பேசி தீர்க்க வேண்டும். ஆனால், பத்திரிகை யாளர்களிடம் கூறுவது பிரச்சனையை திசைதிருப் பவும், அதிகாரி களுக்கு ஊக் கமும் அளிக்கதான் பயன்படும்.
மத்திய அரசின் முகவராக செயல்படும் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை உடனே திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின்போது மாநில செயற்கு உறுப்பினர் என்.குணசேகரன், புதுவைப் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன், நிலவழகன் ஆகியோர் உட னிருந்தனர்.
Read more...
Thursday, September 5, 2013

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

0 comments
புதுச்சேரி,செப்-3
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு புதிய பொறுப்புகளை வழங்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழம் இந்திய பல்கலைக்கழகங்களில் முன்னணி கல்வி நிறுவனமாக இயங்கிவருகிறுது.புதுச்சேரி பல்கலைக்கழத்தில் 2002 நிர்வாக இயல்துறையில் பேராசிரியாக சேர்ந்த டாக்டர் அரிகரன் 2008ல் கல்வியாளர் பயிற்சி கல்லூரியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் வல்லுநர் குழுவின் உறுப்பினராக செயல்பட்டுள்ளார்.அப்போது சென்னையைச் சேர்ந்த ஜேஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி துவங்கிட முறைகேடான வழிகளில் அனுமதியளிக்க பரிந்துரை செய்துள்ளார்.அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் பல விதிமுறைகளை கடுமையாக மீறி அனுமதிவழங்ப்பட்டுள்ளது.அதற்கு மேற்படி பேராசிரியர் டாக்டர் அரிகரன் முககியப் பங்காற்றியுள்ளார்.இது குறித்து புகார் மீது விசாரணை மேற்கொண்ட மத்திய புலனாய்வுக்குழு டாக்டர் அரிகரன் மற்றும் சிலர் மீது கிரிமனல் வழக்கு பதிவு செய்துள்ளது.
டாக்டர் அரிகரன் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அனுமதி கோரியுள்ளது.முந்தைய துணைவேந்தர் தரினும்,தற்போதைய துணைவேந்தரக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் சந்திராகிருஷ்ணமூர்த்தி அவர்களும் அனுமதியளிக்கவில்லை.மாறாக பேராசிரியர் டாக்டர் அரிகரனுக்கு பல்கலைக்கழக வளர்ச்சிக் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை வழங்கி கவுரத்துள்ளது கண்டனத்திற்குறியதாகும்.ஊழல்,கிரிமினல் குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு புதிய பதவிகளை அளிப்பதன் மூலம் பல்கலைக்கழக துனைவேந்தரின் செயல்பாடு ஆழ்ந்த சந்தேகங்களை எழுப்புகிறது.
எனவே டாக்டர் அரிகரன் மீது சிபிஐ வழக்கு தொடர அனுமதி  வழங்கிடவும்,அவருக்கு அளித்த வளர்ச்சிக் கவுன்சில் டீன் பொறுப்பை ரத்துசெய்திட வேண்டும்.நிர்வாகத்திலும்,கல்வி வளாகத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்திட மாணவர் பேரவைத் தேர்தலை நடத்திடவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இப்பிரச்சனை மீது விரைவான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வாயில் முன்பு மக்களையும்,மாணவர்களையும் திரட்டி போராட்டத்தை நடத்தும் என எச்சரிக்கிறது.
இவ்வாறு பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
Read more...

‘‘சிரியா மீது கை வைக்காதே’’

0 comments


‘‘சிரியா மீது கை வைக்காதே’’

அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த தும் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். இறை யாண்மை கொண்ட நாடுகளின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்த முனையும் அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலக்குழுக்கள் வன்மையாக கண்டிக்கின்றன.

“பேரழிவு ஆயுதங்கள்” இருப்பதாகச் சொல்லி 2003 ஆம் ஆண்டு இராக் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னா பின்னப்படுத்தியது போன்ற முயற்சியை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொண்டுள்ளனர். அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளுமே சிரிய அரசாங்கத்தை எதிர்த்து கலகம் செய்பவர்களுக்கு ஆயுதம் மற்றும் பண உதவிகள் செய்து வருகின்றனர். சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியது என்ற குற்றச்சாட்டு இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை.

எனவே, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உத்தேசித்துள்ள சிரியா மீதான தாக்குதலை எதிர்த்து 05.09.2013 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அத்துமீறலைக் கண்டித்து குரலெழுப்ப வேண்டுமென அனைத்து ஜனநாயக சக்திகளையும் வேண்டுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் எதிர்ப்பு : சிரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்திற்கு எதி ராக நாடு முழுவதும் எதிர்ப்பியக்கத்தில் ஈடுபடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், ஆர்எஸ்பி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதுமுள்ள அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஜனநாயக சக்திகளும் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளன.
Read more...

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

0 comments
புதுச்சேரி,செப்-5

புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாள்தோறும் ஆயிரக்கனக்கான மக்கள் வருகைதரும் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொதுமருத்துவமனையில் மருந்து பற்றாக்குறையை போக்க வேண்டும்.சிடி ஸ்கேன் உள்ளிடட மருத்துவ கருவிகளை உரிய முறையில் பராமரிப்பு செய்ய வேண்டும்.செயற்கை சுவாச கருவிகளை உடனே வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.24மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்.முன்னதாக செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவாணன்,கமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மது,சிவக்குமார்,மணவாளன்,அழகர்ராஜ் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக காந்திவீதி,நேருவீதி சந்திப்பில் இருந்து ஊர்வளமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read more...
Monday, August 19, 2013

இலாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தை சிறுவர் விளையாட்டு மைதானமாக அமைத்து கொடுக்க கோ

0 comments
புதுச்சேரி,ஆக-18
இலாஸ்பேட்டை கொல்லிமேடு மைதானத்தை சிறுவர் விளையாட்டு மைதானமாக அமைத்து கொடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

புதுச்சேரி இலாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பெத்திசெட்டிப்பேட்டையில் உள்ள கொல்லிமேடு மைதானத்தை  போலியாக பத்திரம் செய்து  சில தனிநபர்கள் பிளாட் போட முயற்சிப்பதை கண்டித்தும்,அவ்விடத்தை புதுச்சேரி அரசு கையகப்படுத்தி சிறுவர் விளையாட்டு பூங்காவாகவும்,விளையாட்டு மைதானமாகவும் அமைத்து தரக்கோரி இப்போராட்டம் நடைப்பெற்றது.
பெத்திசெட்டிப்பேட்டையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச்செயலாளர் முருகதாஸ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் முருகன்,ராஜாங்கம்,உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை,சிஐடியு உடல் உழைப்போர் சங்கத்தின் நிர்வாகிகள் ராமசாமி,குமார்,டிஒய்எப்ஜ பிரதேச தலைவர் சரவணன்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து மற்றும் குணசேகரன்,பாஸ்கர்,செல்வம்  உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள் இப்போராட்டத்தில் திரளான வாலிபர்கள்,அப்பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.
Read more...
Friday, July 19, 2013

மின்சார கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி

0 comments
புதுச்சேரி,ஜுலை-19
மின்சார கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி வாயில் கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

300கோடிக்கு மேல் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.பொதுவினியோக முறையை சீர்குலைக்கும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடி திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.கிராமப்புற 100 நாள் வேலை திட்டத்தை  100சதவீதம் முறையாக அமல்படுத்த வேண்டும்.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.நடைபெறும் சட்டமன்றக்கூட்டத்தில் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னூரிமை கொடுத்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டமன்றம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் சுமதி,ராஜாங்கங்,நிலவழகன்,கலிவரதன்,ராமசாமி,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.முன்னதாக பழைய பேரூந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்தனர்.
Read more...
Wednesday, July 10, 2013

இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-9
இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரியில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் மர்மமான முறையில் இறந்துள்ளதை கண்டித்தும் இவ்வழக்கை சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சுப்பையா சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி துணை தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,முன்னணியின் செயலாளர் ராமசாமி,மாதர் சங்க நிர்வாகி சுமதி,ஆசிரியர் சங்க தலைவர் ஜெயராமன்,அருந்ததியினர் அமைப்பின் தலைவர் தவமணி,அரசு ஊழியர் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன்,நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக தமிழக அரசு இளவரசனின் மரணம் குறித்து சிபிஐ க்கு மாற்றக்கோரி முழக்க மிட்டனர்.

Read more...
Tuesday, July 9, 2013

என்.எல்.சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-5
என்.எல்.சி  தொழிலாளர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

என்.எல்.சியின் 5சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி வணிகவரித்துறை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,எல்.கலிவரதன்,ராஜாங்கம்,ராமசாமி,சுமதி,ராமச்சந்திரன்,கே.முருகன்,மற்றும் இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,தமிழ்செல்வன்,முருகையன்,சரவணன்,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டனர்.
Read more...
Monday, July 1, 2013

சாதி மறுப்பு திருமணம் செய்த காதல்கஜோடியிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

0 comments
புதுச்சேரி,ஜுலை-1
சாதி மறுப்பு திருமணம் செய்த காதல்கஜோடியிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி வீமகவுன்டம்பாளைய ஓடைத்தெருவை  சேர்ந்தவர் கே.சண்முகம் இவரது மகன் விஜயகுமார் (வயது 31).அதே தெருவை சேர்ந்த எ.சவரிமுத்துவின் மகள் ஆரோக்கியமேரி (வயது 25) ஆகியோர் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விஜயகுமாரும்-ஆரோக்கியமேரியும் கடலூரில் பதிவு திருமணம் செய்துள்ளனர்.ஆரோக்கிய மேரி தலித் கிருத்துவ பிரிவை சேர்ந்தவர் என்பதாலும், வன்னியர் சமுகத்தை சேர்ந்த சண்முகம் குடும்பத்தில் இத்திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,சண்முகத்தை அடித்து  கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல்ஜோடி தஞ்சமடைந்த னர்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாளிடம் நடந்த சம்பவத்தை கூறியதுடன் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு கொண்டனர்.உடனே சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் புதுச்சேரி காவல்துறை  முதுநிலை கண்கானிப்பாளர் பர்வே°அகமதுவை சந்தித்து புகார் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரி காதல்ஜோடியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு டிநகர் காவல்நிலைய உயர் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார்.

Read more...

புதுச்சேரி அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கலந்து கொண்டு பேசினார்.இக்கூட்டத்தல் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மக்கள் விரோத காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு என்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது.ஆனால் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு செயல்படவில்லை.வீடுகட்டும் மானியம்,சென்டாக் கல்வி உதவி,இலவச அரிசி,ரொட்டிபால்திட்டம்……... போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை.தேர்தல்கால வாக்குறுதிகளும் அறிவிப்போடு நிர்கிறது.இரண்டு மடங்கு மின்கட்டண உயர்வு,பால்விலை உயர்வு,மதிப்புக்கூட்டிய வரி என மக்கள் மீது விலை உயர்வு ,வரிஉயர்வு திணிக்கப்படுகிறது.மொத்தத்தில் மத்திய காங்கிரஸ் அரசு புதுச்சேரி மாநிலத்திற்கு உரிய நிதி வழங்குவதில் செய்யும் வஞ்சகமும்,மாநில அரசின் தவறான அனுகுமுறையும் மாநில மக்களை படுமோசமாக பாதித்து வருகிறது.

2013-2014 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில அரசு மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, சமூகப் பொருளாதாரத்தை உயர்த்திட வளர்ச்சித்திட்டங்களுக்கு மாநில அரசு முனனூரிமை அளித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயற்குழு வலியுறுத்துகிறது.விளைநிலங்கள் பயன்பாட்டு சட்டம்  இயற்றி விளை நிலங்களை பாதுகாத்து, விவசாயத்தையும்,தொழில் வளர்ச்சிக்கு முன்னூரிமை அளித்திட வேண்டும்.கிராமப்புற வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதோடு நகர்புற ஏழைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவது,பொதுவினியோக திட்டத்தை வலுப்படுத்துவது வீடில்லாத ஏழைகளுக்கு இலவச மணைப்பட்டா,வீடுகட்டும் மானியம் சென்டாக் கல்வி உதவி நிதி,மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டுகளாக தர வேண்டிய இலவச அரிசி உள்ளிட்ட நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை,அடிப்படை வசதியின்மை உள்ளிட்ட குறைபாடுகளுக்கு இடையில்  10,12ம் வகுப்பு  மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிகளுக்கு  வரும் பட்ஜெட்டில் கூடுதல் நிதி  ஒதுக்கிடு செய்திட  வேண்டும்.

அரசு பொது மருத்துவனையில் இயற்கை சுவாசக் கருவிகள் பலது செயலற்ற நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்படவில்லை. தேவையான உப கரணங்கள்,படுக்கைகள் இல்லை.அரசுப் பொது மருத்துவமனை,மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவனைகளையும் மேம்படுத்தி அனைவருக்கும்  மருத்துவ சிகிச்சையை உறுதிபடுத்திட தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.ஆகவே மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் பாதுகாத்திட,சமூக பொருளாதாரம் உயர்ந்திட வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னூரிமை அளித்திட மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Read more...

பால்டெக்னிக் மாணவர்களுக்கான சென்டாக் இடஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ளபடி நுழைவுத் தேர்வை தொடர்ந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,ஜுலை-1
பால்டெக்னிக் மாணவர்களுக்கான சென்டாக் இடஒதுக்கீட்டில் நடைமுறையில் உள்ளபடி நுழைவுத் தேர்வை தொடர்ந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு,

பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கு ஒவ்வொரு துறையிலும் 12இடங்கள் சேர்க்கப்படுகின்றன.அந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.இதனால் தகுதியும்,திறமையும் உள்ள அரசு பாலிடெக்னிக் மாணவர்கள் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் போட்டிபோட்டு பெரும் பகுதி இடங்களை கைப்பற்றி பயின்று  வருகின்றனர்.தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.இந்நிலையில் மாநில அரசு நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிற நுழைவத்தேர்வை ரத்து செய்து நடப்பு கல்வியாண்டு முதல் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் அன்று அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சேபிக்கிறது.
மத்திய காங்கிரஸ் அரசு ரிலையன்ஸ் நிறுவனம் கொழுப்பதற்கு எரிவாயு விலையை இரண்டு மடங்காக உய்ர்த்தியதைப்போல புதுச்சேரி என்.ஆர்.காங்கிர° அரசு தனியார் பாலிடெக்னிக் நிறுவனங்களின் இலாபத்திற்கு  வழிவகுக்கும் வகையில்  நுழைவுத்தேர்வை ரத்து செய்தது ஏற்க முடியாது.இத்தயை தவறான முடிவை அரசு எடுத்ததிற்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டது.என்று புதிராக உள்ளது.ஆகவே,மாநில முதல்வர் உடனடியாக தலையிட்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் திறன்,பெற்றோர்களின்  கல்வி மற்றும் பணம் செலுத்தும் தகுதியை அடிப்படையாகக்  கொண்டு சேர்க்கப்படுகிறர்கள்.சில தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க +2 வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 11-ம் வகுப்பிலேயே துவங்குகின்றன.இதனால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சென்டாக் இட ஒதுக்கீட்டில் பெரும்பகுதி இடங்களை பிடிக்கின்றார்கள்.அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ,அடிப்படை வசதியின்மை,குடும்பத்தின் வறுமை நிலையிலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றாலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சென்டாக் இடஒதுக்கீட்டில்  உயர்கல்வி வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளன.ஆகவே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சென்டாக்கில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்னுக்கு வந்துள்ளன.
மேலும் தனியார் பாலிடெக்னிக் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசின்முடிவை மாற்றியதின் மூலம் யார் யார் எத்தகைய ஆதாயம் அடைந்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் மாநில அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதும்,மறுபுறத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு முடிவுக்கு கட்டுப்பட மறுக்கிறது எனறு பேசுவதும் மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையாகும்.ஆகவே மாநில அரசு கல்வி முறையில்  மாற்றத்தையும்,தனியார் கல்வி நிறுவனங்களின் மீது  சமூக கட்டுப்பாட்டை  ஏற்படுத்தவும்,மாநில அரசு முன்வர வேண்டும்.
மேலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான 2ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரி  மாணவர் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு நடைமுறையை தொடர வேண்டும் என மார்க்சி°ட் கட்சி வலியுறுத்துகிறது.
Read more...
Friday, June 28, 2013

சட்டமன்றம் உள்ள போது சட்டம் இயற்ற உரிமையில்லை

0 comments


புதுச்சேரி,ஜுன்-24
சட்டமன்றம் உள்ள போது சட்டம் இயற்ற உரிமையில்லை என்ற ஜனநாயக பற்றாக்குறையை மார்க்சிஸ்ட்  கட்சி ஏற்றுகொள்ளாது என்று சிபிஎம்  தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் பேசினார்.

இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேசக்திற்கு மாநில அந்தஸ்து கோரி கருத்தரங்கம் வடமுகத்து செட்டியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.இக்கருத்தரங்கத்திற்கு புதுச்சேரி தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார்.அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தலைவர் சி.எச்.பாலமோகனன் அணைவரையும் வரவேற்று பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
புதுச்சேரி மாநில வருவாய் 60சதவீதத்திற்கும் மேல் உள்ள போது மாநில அந்தஸ்து என்பது தொடர்ந்து மறுக்கபடுகிறது.மாநில அந்தஸ்து பெருவதற்கான போராட்டத்தில் மற்ற மாநிலத்தவர்களையும் இணைத்து போராட வேண்டும் என்றார்.அத்தகைய போராட்டத்தை  மார்க்சிஸ்ட் கட்சி  முன்னெடுத்து செல்லும்.

புதுச்சேரி மாநிலத்தில் விவசாய உற்பத்தி  என்பது குறைந்துள்ளது.விவசாய நிலங்கள் வணிகமயமாக்கப்பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசு மேற்கு வங்கத்தில் நிலபயண்பாடுகுறித்து சட்டம் இயற்றி பாதுகாத்தது.அதில் தொழில்வளர்ச்சிக்கு நிலபயண்பாடு வரும்போது முன்னூரிமை அளிப்பது என்ற திட்டம்   வகுக்கப்பட்டது.அத்தகைய நிலையில் சட்டமன்றம் உரிமையை பெற்றுள்ள புதுச்சேரியில் சட்டம் இயற்ற உரிமையில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சி அத்தகைய ஜனநாயக பற்றாக்குறையை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்று கொள்ளாது.எவேதான் கட்சியின் தமிழ்மாநிலக்குழு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறது என்றார்.மாநில அந்தஸ்து கோரிக்கையை அணைத்து கட்சியின் கோரிக்கையாக கொண்டு செல்ல வேண்டும்.

புதிய பொருளாதார கொள்கை அமல்படுத்திய 1991 ஆம் ஆண்டில் இருந்து 2012 வரை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகையாக மத்திய அரசு 21லட்சம் வழங்கியுள்ளது.ஆனால் மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி அரசு பெற்ற 4671 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய காங்கிரஸ் அரசு தயங்குகிறது என்றால் யார் நலன்களுக்கு ஆட்சி செய்யபடுகிறது என்ற கேள்வி எழுகிறது.மத்திய அரசு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கும் போது அரசியலை வைத்து நிதி ஒதுக்கீடு செய்படுகிறது என்றார்.

என்.குணசேகரன்
சமூக ஆய்வாளரும் சிபிஎம் தமழ்மாநில செயற்குழு உறுப்பினருமான என்.குணசேகரன் பேசுகையில், மத்தியில் ஆட்சி செய்பர்களின் கையிலேயே அணைத்து அதிகாரங்களும் இருக்கவேண்டும் என்பது கூட்டாட்சிக்கு விரோதமான செயல்.விடுதலை அடைந்து மொழிவாழி மாநிலங்கள் அமைக்கபட்டதற்கு காரணமானவர்கள் கம்யூனிஸ்டுகள்.எனவே தான்  மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் மேற்குவங்க முன்னால் முதல்வர் ஜோதிபாசு தலைமையில் மாநில முதல்வர்கள் கூட்டம் என்பது அப்போது நடைபெற்றது.தற்போது ஒரிசா,தமிழகம்,பீகார் போன்ற மாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களுக்கு நிதி ஓதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக கூறும் நிலையை பார்க்கிறோம்.எனவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெரும் போராட்டத்தில் மக்களை திரட்டி போராட வேண்டும் என்றார்.

பேராசிரியர் மு.இராமதாசு,

புதுச்சேரி  பல்கலைகழக இயக்குநரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான போராசிரியர் மு.இராமதாசு பேசுகையில்,
2005ஆண்டு புதுச்சேரிக்கு வந்த பாராளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கொடுக்கலாம் என்று பரிந்துறைத்தது.மேலும் இன்னும் 5அல்லது 10ஆண்டுகளில் மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நிலைகுழு சிபாரிசு செய்தது.யூனியன் பிரதேச அந்தஸ்துபடி புதுச்சேரிக்கு கடந்த காலங்களில் 90சதவீத நிதி என்பது மாணியமாக வழங்கப்பட்டது.அப்போதே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.தற்போது 90சதவீத மாணியம் என்பது குறைக்கப்பட்டு 30சதவீதம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.சட்டமன்றம் இருந்தும் சட்டம் இயற்றுவதற்கோ அல்லது நமக்கான திட்டங்களை நாமே நிறைவேற்றி கொள்ள அதிகாரம் இல்லாதாது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக உள்ளது என்றார்.எனவே மாநில அந்தஸ்து பெருவது காலத்தின் கட்டாயம் என்றார்.பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட உதவி தலைவர் என்.கொளஞ்சியப்பன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.
Read more...

மின் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

0 comments
புதுச்சேரி,ஜுன்-20
மின் கட்டண உயர்வை திரும்பபெறக்கோரி ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதுச்சேரியில் ரூ.300கோடிக்கு மேல் மின்சார கட்டண உயர்விற்கு பரிந்துறையித்துள்ள மாநில அரசை கண்டித்தும்.உயர்த்திய கட்டணத்தை திரும்பபெற வேண்டும்.கோடிக்கணக்கில் பாக்கி வைத்துள்ள நிறுவனங்களிடம் மின் கட்டண பாக்கி வசூல் செய்ய வேண்டும்.முதியோர்களை வங்கிக்கு அலைகழிக்கபடும் உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடித்திட்டத்தை உடனே கைவிட கோரி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவலம் அருகில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,கலிவரதன்,கே.முருகன்,ராமச்சந்திரன்,ராமசாமி இடைகமிட்டி செயலாளர்கள்

லெனின்துரை,பிரபுராஜ்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன் உள்ளிட்ட பிரதேசகுழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலையிலிருந்து  24பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Read more...

எல்எல்சி நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் கூறினார்.

0 comments
புதுச்சேரி,ஜுன்-23
எல்எல்சி நிறுவனத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் முன்னிற்கும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் கூறினார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் ஜி.இராமக்கிருஷ்ணன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது,நெய்வேலி நிறுவனத்தின் 5சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதை ஒரு போதும் ஏற்று கொள்ளமுடியாது.மத்திய அரசு கடந்த காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிசலுகையாக ரூ.5லட்சத்து 70ஆயிரம் கோடி வரிசலுகையாக வழங்கியுள்ளது.

ஆனால் இன்றைக்கு எல்எல்சி நிறுவனத்தின் 5சதவீத பங்குகளை விற்பதின் மூலம் ரூ.440 கோடி ஈட்டபடும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.பல ஆயிரம் கோடி லாபத்தில் இயங்கும் நிறுவனத்தின் பொதுத்துறை பங்குகளை தனியார் நிறுவனங்கள் வாங்கினால் அதன் ஷேர் மதிப்பு கூடும் போது பொதுத்துறை நிறுவனத்தையே வாங்கும் நிலை ஏற்படும்.பங்கு விற்பனையை நியாயப்படுத்தி கூறும் அமைச்சர் நாராயணசாமி கூற்றை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்று கொள்ளமுடியாது.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நிலையை மத்திய அரசு எடுத்தபோது பலதரப்பட்டவர்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.தற்போது எல்எல்சி தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்தகைய போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும் துணைநிற்கும்.

உங்கள் பணம் உங்கள் கையில் என்ற திட்டம் பொதுவினியோக திட்டத்தை சீர்குலைக்கும் திட்டம்.அணைவருக்கும் உணவை உத்தரவாதபடுத்தும் சட்டம் கொண்டு வரும் வேலையில் நேரடி பணப்பட்டுவாட திட்டம் என்பது எழை எளிய மக்களை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.எனவே புதுச்சேரி அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.அதேப்போல் மின்சாரகட்டணத்தை புதுச்சேரி அரசு உயர்த்தியிருப்பதை புதுச்சேரி அரசு திரும்ப பெற வேண்டும்.


கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இராமக்கிருஷ்ணன் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி கழிநீர்  அடைப்பை  சரிசெய்வதற்கு இயந்திரங்களை கொண்டு தான் சரிசெய்ய வேண்டும் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்,புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியயோர் உடன் இருந்தனர்.
Read more...
Monday, June 17, 2013

புதுச்சேரி,ஜுன்-16 மின்கட்டண உயர்வை திருப்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,ஜுன்-16 மின்கட்டண உயர்வை திருப்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி முழுவதும் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மின்துறையின் சார்பில் ரூ.300கோடிக்குமேல் மின்கட்டண உயர்வை மக்கள் மீது சுமத்தியுள்ளது.எனவே 100சதவீத மின்கட்டண உயர்வை புதுச்சேரி அரசு திரும்பப்பெற வேண்டும்.மக்களின் வாழ்வுரிமையை பரிக்கும் திட்டமான உங்கள் கையில் உங்கள் பணம் என்ற மோசடித்திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜுன் 20ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்தை விளக்கி இத்தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. புதுசசேரி முதலியார் பேட்டையில் துவங்கிய வேன் பிரச்சார தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர்கள் முருகன்,ராஜாங்கம்,நிலவழகன்,கலிவரதன்,ராமச்சந்திரன்,சுமதி இடைகமிட்டி செயலாளர்கள் லெனின்துரை,பிரபுராஜ் பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.நேருவீதி காந்திவீதி சந்திப்பு,முத்தியால்பேட்டை,கருவடிக்குப்பம்,இலாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இத்தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது.
Read more...
Tuesday, June 11, 2013

தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி

0 comments
புதுச்சேரி,ஜுன்-11
தனியார் பள்ளி கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் இருந்த அமல்படுத்த வேண்டும்.தனியார் பள்ளி,கல்லூரிகளின் கட்டாய நன்கொடை,கல்வி கட்டணங்களை முறைபடுத்த சட்டம் இயற்ற வேண்டும்.சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை  நடப்பு கல்வியாண்டின் துவக்கித்திலேயே வழங்க வேண்டும்.ஏற்கனவே வழங்கபட வேண்டிய மாணவர்களுக்கும் பாக்கித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.தனியார் பொறியியற்,மருத்துவக்கல்லூரிகளில் அரசின் 50சதவீத இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி கல்வித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராமசாமி,சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,தமிழ்ச்செல்வன்,சரவணன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் ,திரளான பொதுமக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்
Read more...
Monday, June 3, 2013

அரசுதுறைகளில் ஊழல் முறைகேடுகளை கட்டுபடுத்த மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

0 comments
புதுச்சேரி,மே-30

அரசுதுறைகளில் ஊழல் முறைகேடுகளை கட்டுபடுத்த மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு,
புதுச்சேரி மாநிலத்தில் வெளிப்படையான நிர்வாகம் விரைவானசேவை ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கத்திற்காக மக்கள் தொடர்புடைய முக்கியத்துறையில் மக்களின் குறைகேட்பு  திறந்த வெளி விவாதக் கூட்டங்களை நடத்திட அரசாணை என்.1 தேதி 15.6.2011 வெளியிடப்பட்டது.மேற்படி அரசாணையில் பட்டியலிடப்பட்ட முக்கிய துறைகள் மற்றும் தேவை அல்லது பொதுமக்களிடம் இருந்து வரும் கோரிக்கை அடிப்படையில் பட்டியலிடப்படாத மக்கள் தொடர்புடைய துறைகளில் மாதந்திர குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளது.ஆனால் அரசாணைப்படி மாதந்திரக் கூட்டங்களில் ஒரு சிலத்துறைகளில் நடந்தது ஆனால் தொடர்ந்து நடைபெறவில்லை.சிலத்துறைகளில் செயலாளர்கள் கூட கலந்து கொள்ளாத நிலைமை இருந்தது.

இந்நிலையில் 5.12.2012ல் தலைமைச் செயலாளர் தலைமையில் அரசு துறை செயலாளர்களால் மற்றும் சிறப்பு செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் முந்தைய அரசாணையை மறுபரிசீலனை செய்யபட்டு புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் மாற்றங்கள் உள்ளடக்கிய 31.12.2012 என்ற ஆணை என்.3 நிர்வாக சீர்திருத்த பிரிவால் வெளியிடப்பட்டது.மேற்படி வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள  கடும் நிபந்தனைகளும்,மாதந்திர குறைகேட்பு கூட்டத்தை  6மாதத்திற்கு ஒரு முறை மாற்றியது என்பதும் மக்களின் பிரச்சனைகள் தீர்க்க உதவாது.மக்கள் சேவைகள் தாமதப்படவுமே வழிவகை செய்யும்.ஆகவே நிர்வாக சீர்திருத்ததுறையின் ஆணையை மறுபரிசீலனை செய்வதோடு குறைந்தபட்சம் 3மாத்திற்கு ஒரு முறை மக்கள் குறைகேட்பு கூட்டத்தை துறைவாரியாக நடத்திட வேண்டும்.மேலும் மக்கள் கூறைகேட்பு கூட்டத்தை நடத்தாத பட்சத்தில் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மக்கள் இயக்கத்தை அரசுத்துறைகளில் முன்பு நடத்தவும் கட்சி தீர்மானித்துள்ளது.இவ்வாறு தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பெருமாள் கூறியுள்ளார்.
Read more...
Friday, May 24, 2013

மத்திய மாநில அரசின் மக்கள் விரோதகொள்கைகளை கண்டித்து சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 460 பேர் கைது.

0 comments

புதுச்சேரி,மே-24
மத்திய மாநில அரசின் மக்கள் விரோதகொள்கைகளை கண்டித்து சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 460 பேர் கைது.

உங்கள் பணம் உங்கள் கைகளில் என்ற மோசடி திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.மாதம் ஒரு குடும்ப அட்டைதாரர்களுக்கு 35கிலோ அரிசி கிலோ ரூ.2க்கு வழங்க வேண்டும்.பிரதமரையும் உட்படுத்தும் வகையில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.ஆன்லையன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும்.புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் 6மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.


இலாஸ்பேட்டை
இலாஸ்பேட்டை தபால்நிலையம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,உழவர்கரைநகர கமிட்டி செயலாளர் லெனின்துரை,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் உள்ளிட்ட 4பெண்கள் உட்பட 60பேர் கைதானார்கள்.


புதுச்சேரி நகரம்
புதுச்சேரி காமராஐர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிங்காரவேலு,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,ராமச்சந்திரன்,சுமதி,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவானன் உட்பட 90பேர் கைதானார்கள்.முன்னதாக அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மதகடிப்பட்டு
மதகடிப்பட்டு கடைதெருவில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,அன்புமணி,சங்கர் உட்பட 85பேர் கைது செய்யப்பட்டனர்.


பாகூர்
பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் பிரதேச செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உட்பட 30பெண்கள் உள்ளிட்ட 75பேர் கைதானர்கள்.


வில்லியனூர்
வில்லியனூர் தாசில்தார் அலுவலகம் எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ராமசாமி,கே.முருகன்,கமிட்டி செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்ட40பேர் கைது செய்யப்பட்டனர்.இதேப்போல் காரைக்கால்


காரைக்கால்
காரைக்கால் புதுபஸ்நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கமிட்டி செயலாளர் வின்சென்ட் பிரதேசக்குழு உறுப்பினர் கலியபெருமாள் உள்ளிட்ட 54பெண்கள் உட்பட 110பேர் கைது செய்யப்பட்டனர்.
Read more...
Friday, May 17, 2013

மே 24 மறியல் போராட்டம்

0 comments


                                                                                  16.05.2013
பத்திரிக்கை குறிப்பு
            மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தவறான பொருளாதார கொள்கையால் மக்கள் கடும்வாழ்க்கை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, வறுமை, வேலையின்மை அதிகரித்து வருகிறது.
வசதிபடைத்தவர்கள் மட்டுமே கல்வியும், தரமான மருத்துவமும் பெறமுடியும் என்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது.

            நாடும், மக்களும் சந்திக்கிற மந்தமான வளர்ச்சி, வறுமை, வேலையின்மைக்கு தீர்வு காணும் வகையில் நடப்பு மத்திய பட்ஜெட் ( 2013 - 2014 ) இல்லை. மாறாக மக்களுக்கு சிலத்துறைகள் மூலம் வழங்கி வந்த மானியத்தில்
26,571 கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இந்திய பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சத்து 73 கோடி ரூபாய் வரிச்சலுகை வழங்கபட்டுள்ளது. இதனால் அரசுக்கு 5 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்தியஅரசுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது.ஆனால் பொது விநியோகத்திட்டம், கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பலத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. கிராமப்புற வேலைத்திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கிய 33,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகமிகக் குறைவானதாகும்.

            மத்திய காங்கிரஸ் ஆட்சியில் எப்போதுமில்லாத பலலட்சம் கோடி ரூபாய் அளவில் புதிய ஊழல்கள் நடந்தவண்ணம் உள்ளன.
மக்களின் நலனுக்கு எதிரான தவறான பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து நாடு தழுவிய அளவில்மறியல்  போராட்டம் நடத்திட மார்சிஸ்ட் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.கீழ்கண்ட கோரிக்கைகள் மீது புதுச்சேரியில் மே 18 - 22 தேதிகளில் மக்கள் சந்திப்பு தெருமுனை கூட்டங்களும், மே 24ல்  புதுச்சேரி நகரம் - இலாசுபேட்டை - வில்லியனூர் - மதகடிப்பட்டு - பாகூர் - காரைக்கால்ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது.

கோரிக்கைகள்:
  • சொந்த வீடில்லாத மக்களுக்கு குடிமனைப்பட்டா மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கு.
  • விலைவாசி உயர்வை கட்டுபடுத்து. பொது விநியோகத்தின் கீழ் குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ தானியம் 32 விலையில் வழங்கு.
  • உங்கள் பணம் உங்கள் கையில் என்ற மோசடித்தனத்தை கைவிடு
  • முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்ட சமூக நலத்திட்டத்தை வங்கி மூலம் கணக்குடன் கூடிய ஆதார் அட்டை மூலம் செயல்படுத்தும் திட்டத்தை கைவிடு
  • கல்வி நிறுவனங்களையும், பொது சுகாதார சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்து. கல்விக்கும், பொதுசுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து
  • வேலை உரிமையை  அடிப்படை உரிமையாக்கு. சமூக நீதி வழங்கிடு, கிராமப்புற வேலைத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்து.
  • பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு கடிவாளமிடு. சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கீடு செய்.
  • ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு. பிரதமரையும் உள்ளடக்கிய வலுவான லோக்பால் சட்டத்தை இயற்றிடு.  
இங்ஙனம்,

வெ.பெருமாள்,
( செயலாளர் )


Read more...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உரிமையை பெறுவதற்கு அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்திடவும், கட்சிகள் சார்பில் மக்கள் இயக்கத்தை உருவாக்கவும் மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்.

0 comments

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உரிமையை பெறுவதற்கு அரசு சார்பில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்திடவும், கட்சிகள் சார்பில் மக்கள் இயக்கத்தை உருவாக்கவும்
மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்.

                புதுச்சேரி மாநிலம் அதிகாரமற்ற அரசாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ரிமோட் கண்டரோலில் செயல்படும் பொம்மை அரசாக இருக்கிறது. இந்தியாவில் 11 மாநிலங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பிரெஞ்சு இந்திய விடுதலைப் பிரதேசமான புதுச்சேரி இந்திய ஒன்றியத்தோடு இணைந்து 59 ஆண்டுகளாகியும், சட்டப்பேரவைத் துவங்கி 50ஆண்டுகளாகியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது மாநில சுயாட்சிக்குஎதிரானது மட்டுமல்ல மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதும், மக்களை வஞ்சிப்பதுமாகும்.    

            புதுச்சேரி சட்டப்பேரவைகளில் 8.5.1987 முதல் 31.07.2012 வரையிலான காலகட்டத்தில் 11 முறைமாநில அந்தஸ்து கோரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2006 ஆகஸ்ட் 2 ல் மாநிலங்களவை மற்றும் மக்களவைகளில் தாக்கல் செய்த அறிக்கையில்புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளை, மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்கள்.  நாட்டில் பல சட்டங்கள் , திட்டங்கள் நிர்வாக நடைமுறைகள், அதிகார பகிர்வு..... உள்ளிட்டபலவற்றில் வரையறைகள் , தேவையையயாட்டி  மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன . ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னாள் மத்திய திட்டக்குழுவால் உருவாக்கப்பட்ட மாநில அந்தஸ்து தொடர்பான வரையறையை மறு மதிப்பீடு செய்ய மறுப்பதில் எந்த நியாயமும் இல்லை.
               
                1991 முதல் மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களால் துவக்கிவைக்கப்பட்ட நவீன தாராளமயக்
கொள்கை கடந்த 22 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கையை தலைகீழாகபுரட்டிப் போட்டுள்ளன. ஏழைகள்,பணக்காரர்களுக்கான இடைவெளி மேலும் மேலும் அதிகரித்துள்ளது.  கல்வி, சுகாதாரம், பொது வினியோகத்திட்டம், வேலைவாய்ப்பு, விவசாயம் உள்ளிட்ட பல்வேறுத் துறைகளில் மானியத்தை குறைத்து வருகிறது. மக்களுக்கான சமூகப்பாதுகாப்பு, அளிக்க வேண்டிய மத்திய அரசு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தன்னை விலக்கிக்கொண்டுவருகிறது. மறுபுறத்தில் அந்நிய, இந்தியப் பெருமுதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை மானியம் மற்றும் சலுகைகளாக வாரி வழங்கி வருகிறது.கடந்த (2012-2013) ஆண்டில் மட்டும் 11 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் இருந்தால்
பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை போட்டு மக்களின் சமூக நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க முடியும். புதுச்சேரி மாநில அரசின் கடனையும் ரத்து செய்து புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவியிருக்க முடியும்.  நிதி ஆதாரங்களையும், அதிகாரங்களையும் மத்தியில் குவித்து வைத்துக்கொண்டு மாநிலத்தின் சுயாட்சிக்கு எதிராக மத்திய அரச செயல்பட்டு வருகிறது. அதன் விளைவாக புதுச்சேரி மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்கி வந்த நிதி உதவி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. மாற்றுக்கட்சி ஆட்சி என்பதால் நிதி பகிர்மானத்தில் புதுச்சேரி மாநிலம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத்தரமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலைக்கு முழு முதற்காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் தவறான கொள்கையாகும்.
               
புதுச்சேரி மாநில அரசு மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றி பால்விலை உயர்வு,பஸ்கட்டண உயர்வு, மதிப்பு கூட்டிய வரிஉயர்வு என மக்கள் மீது விலைவாசி மற்றும் வரிச்சுமையை ஏற்றிவருகிறது. மறுபுறத்தில் வேலைத்திணிப்புகள், கூடுதல் வாரியத்தலைவர் நியமனங்களும் ஏற்புடையதல்ல. இவைகள் கட்டுப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட்  கட்சி வலியுறுத்துகிறது.              
                தற்போதுள்ள நிதி நெருக்கடியின் கொடூர விளைவுகளில் இருந்து மாநில மக்களைப் பாதுகாக்கவேண்டியது அவசர அவசியக் கடமையாகும். புதுச்சேரி மாநிலத்தின் முழுக்கடனையும் ரத்து செய்து, மாநில அந்தஸ்து உரிமையைப் பெறுவதாகும். இந்த நோக்கத்திற்காக அனைத்து கட்சிகள் கூட்டம் கூட்டியுள்ளதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆட்சியும், கட்சியும் ஒன்றல்ல. இரண்டிற்கும் அதிகார எல்லையும், செயல் தளமும் , தன்மையும் மாறுபட்டதாகும். ஆகவே, மாநில அரசு அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை உடனடியாக நடத்திட முன்வரவேண்டும்.   மறுபுறத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களைஒன்றிணைத்து மாநில சுயாட்சி உரிமையை பெறுவதற்கு மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். 

அரசு சார்பில் நிர்வாக ரீதியான நடவடிக்கைளும் கட்சிகள் சார்பில் ஒன்றுபட்ட மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலம் புதுச்சேரிக்கு உள்ள கடன்களை ரத்து செய்து மாநில அந்தஸ்து பெற முடியும் என மார்க்சிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது. புதுச்சேரியின் வளர்ச்சி மாநில மக்களின் நலன் என்ற பொதுத் தன்மையில் மாநில அந்தஸ்துக்காக மார்க்சிஸ்ட் கட்சி அரசுடனும், மக்கள் இயக்கத்துடன் உறுதியாக இணைந்து போராடும் என மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                                                                                                                                                     

இவண்                                                                                                                                                                     (வெ.பெருமாள்)                                                                                                                                                                         செயலாளர்  



Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com