Pages

ShareThis

Powered by Blogger.
 
Wednesday, November 28, 2012

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரியில் ஐந்து மையங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

0 comments
புதுச்சேரி,நவ-21 

புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 47 பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.வன்புணர்ச்சிக்குள்ளானவர்களின் வழக்குகளும்,ஈவ்டீசிங்,வரதட்சணைக் கொடுமைகுள்ளான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் தாக்கப்படும் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தெருமுணைப்பிரச்சாரம் நடைபெற்றது.
உழவர்கரை சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

புதுச்சேரி அஜந்தா சிக்னல் எதிரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,வி.சுமதி,நகரகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.பி.எஸ் பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,உலகநாதன்,ஆவணியப்பன் ஆகியோர் பேசினார்கள்.

குருவிநத்தத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.
மங்களத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வில்லியனூர் கொம்யூன் செயலாளர் டி.முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஜி.இராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.ஐந்து மையங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Read more...

அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புதுச்சேரி கவர்னர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு இந்தியாவின் உயரீய அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்பட்டுள்ளது.

0 comments
புதுச்சேரி,நவ-24


மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் தா.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு,
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசை எதிர்த்து புதுச்சேரி,காரைக்கால்,பாகூர்,திருக்கனூர் ஆகிய பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் டிசம்பர் 15ஆம்தேதிக்குள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மத்திய,மாநில அரசுகள் குறைந்த விலையில்  அனைத்து அத்தியாவசிய பண்டங்களை பொதுவினியோக முறையில் நியாயவிலை கடைகளில் வழங்க வேண்டும்.பொருட்களுக்கு மாற்று பணம் தரும் திட்டத்தை மாநில அரசு கைவிட வேண்டும்.தீபாவளி பண்டிகையொட்டி குறைந்த விலையில் 5மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.இத்திட்டத்தை மாநில அரசு நீடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுகொள்கிறது.


உள்ளாட்சி தேர்தல்
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை ஜனவரி 15 க்குள் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முன்றாவது முறையாக  காலஅவகாசம் வழங்கியுள்ளது.சுயோட்சையான அதிகாரம் கொண்ட மாநில தேர்தல் ஆணையம் இதுநாள் வரை தேர்தல் தேதி அறிவிக்காதது, மாநில என்.ஆர் காங்கிர° அரசுக்கு ஆதரவாக செயல்படுவது போல் உள்ளது.எனவே உள்ளாட்சி தேர்தல் தேதியை உடனே அறிவிக்க வேண்டும்.மாநில அரசும் உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நடத்தக்கோரி  மார்க்சஸ்ட் கட்சியின் சார்பில்  நவம்பர் 26  ஆம்தேதி காலை 10மணிக்கு லெனின்வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில்  சிறப்பு மாநாடும் நடைபெறுகிறது.


புதுச்சேரி கவர்னர் 


புதுச்சேரி கவர்னர் இக்பால்சிங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மகன் மற்றும் உறவினர்கள் பெயரில் மருத்துவகல்லுhரி துவங்குவதற்கு முயற்சி மேற்கொண்டார்.இச்சம்பவம் தொடர்பாக  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.இவ்வழக்கை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் கவர்னர் உயர்பதவியில் இருப்பதால் அவர்மீதான நடடிக்கைக்கு மத்திய அரசை அனுகலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது.இதனை எதிர்த்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கடந்த 19 ஆம்தேதி விசாரணைக்கு வந்தது, அப்போது கவர்னர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கான முகாந்திரம் இருப்பதாக ஒப்பு கொள்ளப்பட்டது.அதே நேரத்தில் பெறப்பட்ட சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்கப்ட்டுவிட்டது எனவே இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவர்னருக்கு தன்டனை வழங்க இந்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்ய 5பேர் கொண்ட இந்தியாவின் உயரிய பீடமான அரசியல் சாசன பெஞ்சுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வழக்கின் மூலம் அதிகாரத்தில் உயர்ந்த பொருப்பில் உள்ள யாராக இருந்தாலும்  தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு முற்று புள்ளி வைக்கப்படும்.அதேப்போல் சுனாமி மறுவாழ்வுக்கு புதுச்சேரி அரசுக்கு வந்த 800கோடியில் ரூ.204கோடி மட்டுமே செலவு செய்ததற்கான கணக்கு காட்டப்பட்டுள்ளது.மீதி தொகையில் பெறும் ஊழல் நடைபெற்றுள்ளது.இதேப்போல் பாதாளசாக்கடை திட்டத்திலும் ஊழல் நடைபெற்றுள்ளது.இதன்மீது உரிய விசாரணை நடத்த விரைவில் மார்க்சஸ்ட் கட்சியின் சார்பில் நீதிமன்றம் செல்ல உள்ளதாக தெரிவித்தனர். 
Read more...

ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கான போராட்டத்தை தீவிரபடுத்த வேண்டும் என்று என்.குணசேகரன்

0 comments
புதுச்சேரி,நவ-26

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சிறப்பு மாநாடும்,வழக்கை வாதாடி உரிய தீர்ப்பை பெற்றுதந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யுவிற்கு பாராட்டு விழா லெனின்வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் நடைபெற்றது.இச்சிறப்பு மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிராதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை
தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம் அனைவரையும் வரவேற்றார்.


என்.குணசேகரன்
சிபிஎம் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்பு
அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,அடிமட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்கின்ற அமைப்பாக திகழும் உள்ளாட்சி அமைப்பை கொண்டு வரவேண்டும் என்று மகாத்மாகாந்தி அன்றைக்கே வலியுறுத்தியுள்ளார்.கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெறும் தலைவர் ஈஎம்எஸ் அவர்களும் சுய உரிமையை நிலைநாட்டும் உள்ளாட்சி அமைப்பை கொண்டு வரவேண்டும் என்று பதிவு செய்தார். 

உள்ளாட்சி மூலம் மக்களுக்கு உரிய திட்டங்களை அமல்படுத்துவதில் மேற்குவங்கம் திகழ்ந்ததால், இச்சட்டம் கொண்டுவருவதற்கு முன்னூதாரமாக திகழ்ந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் போராட்டம் நடத்திய பிறகே உள்ளாட்சி அமைப்பின் உரிமைக்கான அதிகாரம் பெறப்பட்டு அதற்கான சட்டதிருத்தங்களுடன் அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் பஞ்சாய்த்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது.

உள்ளாட்சியின் ஜனநாயக நன்மைகள் மக்களுக்கு கிடைக்க இடதுசாரிகள் தொடர்ந்து போராட்டம் நடத்துவதோடு,நீதிமன்றத்தில் நடத்திய போராட்டத்தை ஒவ்வொரு வாக்காளரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

இம்மாநாட்டில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் க.பீமாராவ் எம்எல்ஏ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,ஹோப் தொண்டு நிறுவனர் ஜோசப்விக்டர்ராஜ்,சமூக ஆய்வாளர் ஆர்.தட்சணாமூர்த்தி,வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யு ஆகியோர் பங்கேற்று பேசினார்கள். முன்னதாக என்.குணசேகரன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யுவை பாராட்டி கதராடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.


தீர்மாணம்
இச்சிறப்புமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்கள் வருமாறு,
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதின் விளைவாக  வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற தீர்ப்பின் படி, மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும்.ஒரு சில அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக வழக்கு தொடுத்து இருப்பதை காரணம் காட்டி தேர்தலை தள்ளி போடக்கூடாது.மாநில அரசும் தேர்தலை நடத்திட முன்வர வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியுள்ளது.
Read more...
Friday, November 23, 2012

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரியில் ஐந்து மையங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

0 comments
புதுச்சேரி,நவ-21 
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி புதுச்சேரியில் ஐந்து மையங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளில் 47 பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.வன்புணர்ச்சிக்குள்ளானவர்களின் வழக்குகளும்,ஈவ்டீசிங்,வரதட்சணைக் கொடுமைகுள்ளான வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாலிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெண்கள் தாக்கப்படும் வழக்குகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி இத்தெருமுணைப்பிரச்சாரம் நடைபெற்றது.
உழவர்கரை சாமிப்பிள்ளை தோட்டத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு சிபிஎம் உழவர்கரை நகரகமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பிரதேசக்குழு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
புதுச்சேரி அஜந்தா சிக்னல் எதிரில் நடைபெற்ற தெருமுனைக்கூட்டத்திற்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ஆர்.ராஜாங்கம்,வி.சுமதி,நகரகமிட்டி உறுப்பினர்கள் சரவணன்,மணவாளன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
பி.எ° பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,உலகநாதன்,ஆவணியப்பன் ஆகியோர் பேசினார்கள்.
குருவிநத்தத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன் உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.
மங்களத்தில் நடைபெற்ற தெருமுனைப்பிரச்சாரத்திற்கு வில்லியனூர் கொம்யூன் செயலாளர் டி.முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ஜி.இராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்கள்.ஐந்து மையங்களில் நடைபெற்ற இப்பிரச்சாரத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Monday, November 5, 2012

வீடற்ற மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வலியுறுத்தி

0 comments
புதுச்சேரி,அக்-18
வீடற்ற மக்களுக்கு மணைப்பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் வேன் பிரச்சாரம் நடைபெற்றது.

உயர்த்திய பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலையை உடனே குறைக்க வேண்டும்.சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை கைவிட வேண்டும்.தானே புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்.புதுச்சேரியில் நிலவும் சட்டஒழங்கு பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.விவசாய விளைநிலங்கள் வணிகமயமாவதை தடுக்க வேண்டும் என்பன மத்திய ,மாநில அரசுகளை வலியுறுத்தி இப்பிரச்சார வேன் பயணம் நடைபெற்றது.
கடலுhர் மாவட்டம் சிதம்பரத்தில் துவங்கிய பிரச்சாரப்பயணம் வியாழனன்று புதுச்சேரி எல்லையான பி.எஸ் பாளையத்தில் வந்தடைந்து.கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,கடலுhர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வாலன்டினா,ரமேஷ்பாபு ஆகியோருடன் வந்தடைந்த பிரச்சாரபயணத்தை  சிபிஎம் புதுச்சேரி பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் கலிவரதன்,நிலவழகன், கொம்யூன்  கமிட்டி செயலாளர்கள்  சரவணன்,முருகையன்,தமிச்செல்வன்,லெனின்துரை,பிரபுராஜ் உள்ளிட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள்,இடைகமிட்டி உறுப்பினர்கள் வரவேற்றனர்.
பிஎஸ்பாளையத்தில் துவங்கிய பிரச்சாரபயணம் மதகடிப்பட்டு,வில்லியனூர்,கரிகலாம்பாக்கம்,பாகூர்,அரியாங்குப்பம்,முத்தியாள்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
முன்னதாக இப்பிரச்சாரபயணத்தில் புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழுவினர்கள் அன்புமணி,விநாயகம்,செல்வம்,அமர்,சேகர் ஆகியோரது கிராமிய பாடல்கள் நிகழ்ச்சியும்  நடைபெற்றது.
Read more...

சிபிஎம் தர்ணா

0 comments
புதுச்சேரி,நவ-5
ஏனாமில் தொழிற்சங்கத் தலைவர் லாக் அப் படுகொலை உள்ளிட்ட சம்பவங்களை உயர்நீதிமன்ற  கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த கோரி சிபிஎம் தர்ணா.
ஏனாம் ரீஜென்சி செராமிக் தொழிற்சங்க தலைவர் முரளிமோகன் படுகொலை சம்பவங்கள் உள்ளிட்ட விசாரணையில் சட்டமன்ற உறுப்பினர் மல்லாடிகிருஷ்ணராவையும் சேர்க்க வேண்டும்.ஏனாம் மண்டலத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிபடுத்த ஐஏஎஸ்  அதிகாரியை நியமிக்க வேண்டும்.இத்தொடர் சம்பவங்களின் விசாரணை அறிக்கை,சிபிசிஐடி விசாரணை அறிக்கைகளை அரசு வெளியிடவேண்டும்.காவல்நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட முரளிமோகன் குடும்பத்திற்கு ரூ.10லட்சமும்,துப்பாக்கிசூட்டால் படுகாயம் அடைந்த தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு  வழங்க வேண்டும்.தொழிலாளர் நல உரிமைகளை பாதுகாக்கவும்,தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளடக்கிய கொள்கையை புதுச்சேரி அரசு ஏற்படுத்த வேண்டும் என்பன  கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இத்தர்ணா போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் கே.முருகன் தலைமை தாங்கினார்.தர்ணா போராட்டத்தை செயற்குழு உறுப்பினர் தா.முருகன் துவக்கி வைத்து பேசினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் இறுதியாக போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.இப்போராட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன்,ராமசாமி,ராமச்சந்திரன்,சுமதி,இடைகமிட்டி செயலாளர்கள் பிரபுராஜ்,லெனின்துரை,முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,உலகநாதன்,மதிவாணன்,சங்கர் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
Read more...
Thursday, October 11, 2012

மக்களுக்கு கிடைத்த வெற்றி - உள்ளாட்சி தேர்தல்

0 comments

புதுச்சேரி,அக்-8
புதுச்சேரி அரசு தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை    ஜனவரி 15 தேதிக்குள்  நடத்தி  முடிக்க வேண்டும் என்று இறுதி கெடுவிதிப்பு.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 1968 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.அத்தேர்தலுக்கு பிறகு 38 ஆண்டுகளாக  உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததின் பேரில் உள்ளாட்சி தேர்தல் 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மூன்று கட்டங்களாக  நடைப்பெற்றது.அதன் படி  தேர்ந்தெடுக்கப்பட்டோர் பதவி காலம் கடந்த 2011 ஜூலை மாதம் முடிவடைந்ததை யொட்டி மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை.அதனை தொடர்ந்து  மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சார்பில் 29.7.2011 ல் சென்னை உயர்நீதி மன்றத்தில்  தேர்தல் நடத்தகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுவை விசாரித்த நீதிபதிகள்  2012  பிப்ரவரி  22தேதிக்குள் (6மாதத்திற்குள்) தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று  புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.இக்காலகெடு முடியும் இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அம்மனுவில்  தேர்தல் ஆனையர் நியமிக்கபடவில்லை,வாக்காளர் தேர்வு சரிபார்க்கவேண்டும்  எனவே மேலும் 6 மாத கால அவகாசம் அரசு சார்பில்  கேட்கப்பட்டது.இம்மனு மீதான விசாரணை முடிவடைந்து  கடந்த 15.3.2012  மேலும் 6 மாதகால அவகாசம் அளித்த நீதிபதிகள் தேர்தலை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க  வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு  உத்தரவிட்டு இருந்தனர்.

புதுச்சேரி அரசின் மனு நிராகரிப்பு

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தலை நடத்தாத புதுச்சேரி அரசு  மிக தாமதமாக வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கியது.மேலும் புதுச்சேரி அரசு சார்பில் தேர்தலை நடத்த 5மாத கால அவகாசம் வேண்டும் என்று செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மீண்டும் ஒரு மனுதாக்கல் செய்தது.இந்நிலையில்  திங்களன்று (அக்-8)  தலைமை நீதிபதி இக்பால்,நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் அரசு தாக்கல் செய்த மனுமீதான விசாரணை  நடைபெற்றது.அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகேசன் உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பணியும்,வாக்காளர் சரிபார்க்கும் பணியும் நடைபெற்று கொண்டு இருக்கிறது எனவே மேலும் 5 மாதகால அவகாசம் வேண்டும் என்று வாதிட்டார்.உடனே மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின்அபிமன்யு ஆஜராகி  வாதாடுகையில் ஏற்கனவே இரண்டு முறை 6மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.அப்போதும் தேர்தல் நடத்தாமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்கின்றனர். எனவே கால அவகாசம் வழங்ககூடாது என்று வாதிட்டார்.இரு தரப்பின் வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் இக்பால்,சிவஞானம் ஆகியோர் கொண்ட பென்ச் புதுச்சேரி அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு,உள்ளாட்சி தேர்தலை 2013 ஜனவரி 15 ஆம்தேதிக்குள் நடத்தி முடித்தி உள்ளாட்சி பிரதிநிதிகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று இறுதி  உத்தரவு பிறபித்தனர்.

மக்களுக்கு கிடைத்த வெற்றி

இத்தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கூறுகையில்,இத்தீர்ப்பு ஜனநாயகத்திற்கும்,மக்களுக்கும் கிடைத்த  வெற்றி.நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளித்து மாநில அரசு உடனடியாக தேர்தலை நடத்தி அனைத்து முடிவுகளையும் அறிவிக்க வேண்டும் என பெருமாள் கேட்டுகொண்டுள்ளார்.
Read more...

சிஐடியு மினிலோடு கேரியர் சங்கத்தின் புதிய கிளை உதயம்

0 comments
புதுச்சேரி,அக்-10
இண்டேன் லாரி ஓட்டுநரை தாக்கிய சமூக குற்றவாளி மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
சிஐடியு இண்டேன் லாரி ஓட்டுநர்கள் சங்கத்தின் புதுச்சேரி கௌரவ தலைவர் குணசேகரன் வில்லியனுhர் காவல் நிலைய ஆய்வாளருக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
புதுச்சேரி ஒதியம்பட்டு அடுத்துள்ள திருக்காஞ்சியில் இயங்கிவரும இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சமையல் எரிவாயு  நிரப்பும் தொழிற்சாலை இயங்கிவருகிறது.எரிவாயு நிரப்பட்ட சிலிண்டர்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்று ஏஜென்சிகளின் குடோனுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளைச் 50க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் செய்துவருகின்றனர்.சம்பவத்தன்று இப்பணியில் ஈடுபட்டிருந்த லாரி ஓட்டுநர் டி.முருகன் என்பவரை ஒதியம்பட்டு அருகே சமூக விரேத சக்திகள் வழிமறித்து தாக்கியுள்ளனர்.மேலும் முருகன் வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயைப் பறித்து கொண்டு மிரட்டியுள்ளனர்.ஏற்கனவே லாரியின் கண்ணாடிகளை உடைப்பது,பணத்தை பறிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.இந்த தாக்குதலில் ஈடுபட்ட சமூகவிரோத சக்திகளை உடணடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு இன்டேன் லாரி ஓட்டுநர்கள் சங்கம் கேட்டுகொள்கிறது.
இதே நிலை நீடீத்தால் லாரி ஓட்டுநர்களின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு  வில்லியனுhர் காவல்நிலைய ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி,அக்-10
சிஐடியு  மினிலோடு கேரியர் சங்கத்தின் புதிய கிளை உதயம்.
புதுச்சேரி தவளகுப்பத்தில் சிஐடியு புதுச்சேரி பிரதேச  மினிலோடு கேரியர் சங்க புதிய பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.சங்கத்தின் கிளைத்தலைவர் ரவி தலைமை தாங்கினார்.கிளைசெயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார்.சங்கத்தின் கொடியை சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன் ஏற்றிவைத்தார்.சிஐடியு ஆட்டோ சங்க கவுரவத்தலைவர் தா.முருகன் சங்கத்தின் புதிய பெயர்பலகையை திறந்து வைத்து பேசினார்.மினிலோடு கேரியர் சங்கத்தின் பிரதேச செயலாளர் மதிவாணன்,சிஐடியு மாவட்ட பொருளாளர் மது,ஆட்டோ சங்க நிர்வாகிகள் சீனிவாசன்,சேகர் மற்றும் மாகலிங்கம்,சுதாகர்,ரவிந்தர்,விஸ்வநாதன் உள்ளிட்ட திரளான மினிலோடு கேரியர் ஓட்டுநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
Read more...
Saturday, October 6, 2012

ஈரான், ஆப்கானில் போருக்காக அமெரிக்கா செலவு செய்த பணத்தை உலகநாடுகள் வறுமையைப் போக்க 14 முறை செலவிடலாம்

0 comments
 
புதுச்சேரி, அக். 5-

ஈரான், ஆப்கானிஸ்தா னில் அமெரிக்கா போருக் காக செலவு செய்த பணத்தை உலக நாடுகளின் வறுமை யைப் போக்க 14 முறை செல விட்டிருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப் பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி பேசினார்.அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழக சர்வ தேசிய மாநாடு புதுச்சேரி யில் வெள்ளியன்று (அக். 5) துவங்கியது. கம்பன் கலை யரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டுக்கு வரவேற்பு குழுத் துணைத் தலைவர் லட் சுமிநாராயணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அமைப்புக்குழு பொதுசெய லாளர் நாரா.கலைநாதன் வரவேற்றார். புதுச்சேரி முதல்வரும், அமைப்புக் குழு தலைவருமான என். ரங்க சாமி மாநாட்டை துவக்கி வைத்தார்.மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம்யெச்சூரி எம்.பி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:இந்த மாநாடு புதுச்சேரி யில் நடைபெறுவது இக்கால கட்டத்தில் உகந்ததாக உள்ளது. புதுச்சேரி முதல் வரே மாநாட்டில் பங்கேற்று வழிநடத்துவது வரவேற்கத் தக்கது. இந்த அமைப்பு ஏதோ ஒருகுடையின் கீழ் உள்ள அமைப்பல்ல. இந்த நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் இந்த அமைப் பில் அங்கமாக உள்ளன. இது வானவில் போன்ற அமைப்பாகும். இன்றைக்கு உலகில் அனைத்து நாடுகளி லும் போர் பதற்றங்கள் உரு வாவதற்கு அமெரிக்காவே காரணம். இந்த 21 ஆம் நூற் றாண்டு அமெரிக்க ஏகாதி பத்திய நூற்றாண்டாக தான் விளங்குகிறது. அமெரிக்கா தனது பட்ஜெட்டில் 41 விழுக்காடு தொகையை ராணுவத்திற்கு செலவு செய்கிறது. ஈரான், ஆப்கானிஸ் தான் நாடுகளில் அமெரிக்க ராணுவம் செலவு செய்த தொகை மட்டும் ஆறு டிரில்லியன் டாலர் தொகையாகும். இந்த தொகையை வைத்து உலக நாடுகளில் உள்ள மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு 14 முறை செலவு செய்யமுடியும். உலக நாடுகளில் உள்ள எண்ணெய் வளம், எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங் களை கபளீகரம் செய்வ தற்கு அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் தலையீடு இன் றைய கால கட்டத்தில் அதி கரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே லிபியா, சிரியா உள்ளிட்ட நாடுகள் மீதான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

இதற் கெல்லாம் ஒரு முடிவை தீர் மானிக்ககூடிய வகையில் இந்த மாநாட்டின் முடிவு கள் அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசி னார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலா ளர் டி.ராஜா எம்.பி. பேசுகை யில், எந்த ஒரு பிரச்சனை களுக்கும் ராணுவத்தின் மூலம் தீர்வு காண முடி யாது. உலகம் முழுவதும் அமைதி திகழ வேண்டும் என்பது தான் இந்த மாநாட் டின் நோக்கமாகும் என்றார்.புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பேசுகையில், சிரியா மாநிலமான புதுச் சேரி அமைதியை விரும்பக் கூடியது. தொழிலாளர் களுக்கு எட்டு மணிநேர வேலை உரிமை கேட்டு போராடிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுப்பையா வும், பாரதியாரும், பாரதி தாசன், அரவிந்தர் ஆகியோர் வாழ்ந்த இடம். மனித நேயத் தோடும் நட்டுபுறவோடும், சகோதரத்துவத் தோடும் வாழவேண்டும். அத்தகைய நிலையை இந்த உலகத்திற்கு ஏற்படுத்த இந்த மாநாடு வழிவகுக்க வேண்டும் என்றார்.

பரூன்முகர்ஜி எம்.பி, சிபிஎம் மத்தியக்குழு உறுப் பினர் நிலோத்பல்பாசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பல்லப்சென் குப்தா, யாதவ் ரெட்டி, புதுச் சேரி சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் மற்றும் தமிழகம், ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநி லங்களில் இருந்து வருகை தந்த 300 பிரதிநிதிகளும், கியூபா, வியட்நாம், கிரீஸ், பங்களாதேஷ், தென்ஆப் பிரிக்க, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் பிரதிநிதி களும் இம்மாநாட்டில் பங் கேற்றுள்ளனர். தொடர்ந்து சனிக்கிழமை நடைபெறும் இம்மாநாடு ஞாயிறன்று (அக். 7) முடிவடைகிறதுதமிழகத்தில் இருந்து இந்த மாநாட்டில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர்கள் கே.பாலகிருஷ் ணன் எம்எல்ஏ, என்.குண சேகரன், புதுவை பிரதேச செயலாளர் வி.பெருமாள், பிரதேச செயற்குழு உறுப் பினர் தா.முருகன் உள்ளிட் டோர் பங்கேற்றுள்ளனர்
Read more...
Tuesday, September 25, 2012

விளை நிலங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்

0 comments
புதுச்சேரி,செப்-23
விளை நிலங்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசை விவசாயிகள் சங்க  மாநாடு   வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 11வது மாநாடு, பாகூரில் உள்ள  தோழர்.என்.வி நினைவரங்கத்தில் (தர்மராஜா திருமண நிலையத்தில்)  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இம்மாநாட்டின் கொடியை சங்கத்தின் பிரதேசக்குழு உறுப்பினர் கோ.இராமசாமி ஏற்றிவைத்தார்.கொம்யூன் குழு செயலாளர் த.முத்துலிங்கம் பிரதிநிதிகளை வரவேற்றார். சங்கத்தின் பிரதேச தலைவர் வே.கு.நிலவழகன் மாநாட்டிற்கு  தலைமை தாங்கினார்.விவசாயிகள் சங்கத்தின் தமிழ்மாநில பொருளாளர் ஏ.நாகப்பன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,கொம்யூன் குழு செயலாளர் தமிழ்ச்செல்வன்,வி.தொ.ச வின் பிரதேச செயலாளர் மணிபாலன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.சங்கத்தின் பிரதேச செயலாளர் பத்மநாபன் வேலை அறிக்கை தாக்கல் செய்தார்.வரவு செலவு அறிக்கையை பொருளாளர் சரவணன் வாசித்தார்.அதனை தொடர்ந்து விவசாயிகள் சங்கத்தின் நாகைமாவட்ட செயலாளர் வி.சுப்புரமணியன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.


புதிய நிர்வாகிகள்

சங்கத்தின் புதிய பிரதேச தலைவராக மீண்டும்  வே.கு. நிலவழகன்,செயலாளராக வி. சங்கர்,பொருளாளராக எஸ்.எம்.தமீம் உள்ளிட்ட 15பேர் கொண்ட புதிய பிரதேசக்குழு தேர்வு செய்யப்பட்டது.


தீர்மாணங்கள்

காரைக்காலுக்குரிய  காவிரி நீரைப்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக  இந்த ஆண்டு  அறிவித்து ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு தலா 10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3500 வழங்க வேண்டும்.எல்.ஆர்.கூட்டுறவு சர்கக்கரை ஆலை வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.45கோடியை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். பால்கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.25  வழங்க வேண்டும்.மாட்டு தீவனம் மாண்ய விலையிலும்,உரம் பூச்சி கொள்ளி மருந்துகளை உரிய காலத்தில் தட்டுபாடின்றி கிடைக்கவும்,மானியத்துடனும்  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.
Read more...
Friday, September 21, 2012

இடதுசாரிகட்சிகள் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பபட்டது

0 comments

புதுச்சேரி,செப்-20
இடதுசாரிகட்சிகள் அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் சாலைகள் வெறிச்சோடி காணப்பபட்டது.

டீசல் லிட்டருக்கு ரூ.5 ஆக உயர்த்தியது.சிலிண்டர் ஆண்டுக்கு 6மட்டுமே வழங்குவது.சிறுவணிகத்தில் அன்னியமுதலீடு  அனுமதிப்பது உள்ளிட்ட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் முடிவுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி,இந்திய கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக்,புரட்சிகர சோஸலிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகட்சிகள் சார்பில் வியாழன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு விடுதலைசிறுத்தைகள்,தேசிய முற்போக்கு திராவிட கழகம்,புதுச்சேரி வர்த்தகர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்திருந்தது.

சாலைகள் வெறிச்சோடியது.

புதுச்சேரியில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் நகரத்தில் உள்ள  நேருவீதி,காந்திவீதி,அண்ணாசாலை,காமராஜர் சாலை,பெரிய மார்க்கட்,சின்னமணிகூண்டு,முத்தியாள்பேட்டை,நெல்லித்தோப்பு,முதலியார்பேட்டை,சாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகள்,கடைகள்,திரையரங்குகள் உள்ளிட்டவைகள் முற்றிலும் மூடப்பட்டிருந்தன.நகரத்தில் ஆட்டோக்கள்,டெம்போக்கள்,தனியார் பேருந்து முற்றிலும் இயங்காததால் புதிய பேருந்துநிலையம்,சாலைகள் வெறிசோடிகாணப்பட்டது.ஓரி  இரு அரசு பேருந்துகள்  போலீசார் பாதுகாப்போடு இயங்கினாலும் பொது மக்கள் வரத்து முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தனியார் பள்ளிகள்,கல்லுhரிகள் இயங்கவில்லை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிந்ததால் வியாழன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தையும் வேறு தேதிக்கு மாற்றப்பட்டது.அரசு பள்ளி பேருந்துகள் இயங்காததால் அரசு பள்ளி மாணவர்கள் வரத்து குறைவாக இருந்தது.
இடது சாரிகட்சி தலைவர்கள் மறியல்
காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கே.முருகன்,ராமச்சந்திரன்,இராமசாமி,சுமதி,சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,நிர்வாகிகள் முருகன்,ஆனந்து,சேது செல்வம்,ஏகாம்பரம்,ஆர்எஸ்பி மாநில தலைவர் லெனின்,விடுதலைசிறுத்தைகள் மாநில அமைப்பாளர் பாவாணன்,தேமுதிக மாநில நிர்வாகி தனசேகரன் உட்பட 6பெண்கள் உள்ளிட்ட 182 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.இதேப்போல் பாகூரில் சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 40பேரும்,மதகடிப்பட்டில் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமையில் 42பேரும் மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானர்கள்.பார்வர்டு கட்சி மாநில தலைவர் முத்து தலைமையில் ரெயிலை மறிக்க சென்ற 10பேரை போலீசார் கைது  செய்தனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதேப்போல் அண்ணாசாலையில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் கிளை தலைவர் அன்பரசி ஜூலியட்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  முகவர்கள் கல்விக்குழு தலைவர் ராம்ஜி கண்டன உரையாற்றினார்.
Read more...
Monday, September 17, 2012

உணவு பாதுகாப்பை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண இயக்கம்

0 comments
புதுச்சேரி,செப்-11
சுஸ்லான் ஆலையை திறக்க கோரி சிஐடியு சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி திருவாண்டார் கோவிலில் சட்டவிரோதமாக மூடப்பட்டுள்ள சுஸ்லான் காற்றாலை தயாரிக்கும்  தொழிற்சலையை உடனே திறக்க வேண்டும்.  வேலை மறுக்கப்பட்ட கடந்த 3 மாதங்களுக்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் அளிக்க வேண்டும். தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையை தொழிலாளர் துறை ஆணையர் முன்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். பணீ நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
காந்தி நகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சுஸ்லான் தொழிலாளர் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ராமசாமி,செயலாளர் கே.முருகன்,இணை செயலாளர் சிவக்குமார்,துணைதலைவர் குணசேகரன்,மற்றும் நிர்வாகிகள் பாபு,சக்திவேல்,ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இப்போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி,செப்-11
உணவு பாதுகாப்பை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண இயக்கம் நடைபெற்றது.
அணைவருக்கும் மாதம் 35கிலோ உணவு தாணியங்கள் வழங்க உரிய திருத்ததோடு மத்திய அரசு சட்டம் இயற்ற  வேண்டும்.பொது வினியோக முறையை பலபடுத்த வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும்.பாகூர் நெற்களஞ்சியத்தை பாதுகாக்க வேண்டும்.புதுச்சேரியில் அதிகரித்துள்ள கொலை,கொள்ளைகளை கட்டுபடுத்த வேண்டும்.100 நாள் வேலை உறுதி திட்டத்தை துவக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயண இயக்கம் நடைபெற்றது.
பாகூரில் துவங்கிய நடைபயண இயக்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் வே.கு.நிலவழகன் நடைபயண இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.காட்டுகுப்பம்,கண்ணிகோவில்,பரிக்கல் பட்டு குருவிநத்தம்,சோரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை கடந்து   கரையாம்பத்துரில் நிரைவடைந்த நடைபயணத்தில் ,  சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் கலந்து கொண்டு   பேசினார்.கட்சியின் பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி,கலியன்,செல்வராஜ்,அரிதாஸ்  மற்றும் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் நடைபயண இயக்கத்தில் பங்கேற்றனர்.
Read more...

மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம்

0 comments
காமராஜர் சிலை எதிரே மறியல்
புதுச்சேரி,செப்-14
டீசல் விலை உயர்வை  கண்டித்து  மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
டீசல் லிட்டருக்கு   ரூ.5 விலை உயர்த்தியதை மத்திய காங்கிரஸ் திமுக - கூட்டணி அரசு   உடனே  திரும்ப பெற வேண்டும்,கியா° சிலிண்டர் வருடத்திற்கு 6 மட்டுமே வழங்கப்படும்  என்ற அறிவித்துள்ளதை  கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த இம்மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் தலைமை  தாங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,ராஜாங்கம்,கே.முருகன்,நிலவழகன்,ராமச்சந்திரன் இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,சரவணன்,பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர் மதிவாணன்,சிஐடியு நிர்வாகிகள் குணசேகரன்,சிவக்குமார்,சீனிவாசன்,இராமசாமி உள்ளிட்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட  52பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக உயர்த்திய டீசல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி யும்,மத்திய அரசை கண்டித்தும்,  பதாகைகளை ஏந்தியவாரு  முழக்கமிட்டனர்.




புதுச்சேரி,செப்-14
சுய தொழில் செய்வோருக்கான கம்பியூட்டர்  பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.
இந்திய எரிவாயு நிறுவணம் (கெயில்) மற்றும் வாபஸ்தொண்டு பயிற்சி நிறுவணமும் இணைந்து  சுய தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் துவக்கவிழா  நடைபெற்றது.புதுச்சேரி  இலாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில்   வாப்ஸ் தொண்டு நிறுவன பயிற்சி ஒருங்கினைப்பாளர் சந்திரசேகர் அணைவரையும் வரவேற்றார்.விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரமையத்தின் ஒருங்கினைப்பாளர் எஸ்.ராமச்சந்திரன்  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.வாபஸ் திட்ட அலுவலர் அசும்தா பிரேமலதா,மற்றும் நிறுவன அலுவலர் கர்ணன் விளிம்பு நிலைவாழ்வாதார மையத்தின் பயிற்சி அமைப்பாளர் கலையரசி ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.
ஒரு மாத காலம் காலையும், மாலையும் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் ஹார்டுவேர் மற்றும் நெட்வொர்க்கிங்  பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்துவக்கவிழாவில் திரளான ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர்.
Read more...

ஆர்ப்பாட்டம்

0 comments
புதுச்சேரி,செப்-16
டீசல் விலை உயர்வை  கண்டித்து சிஐடியு  சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.ஆண்டுக்கு 6 சிலிண்டர் என்பதை  மத்திய அரசு கைவிட வேண்டும்.புதுச்சேரியில் செயல்படும் சுங்கசாவடியில் வரிசுமையை கட்டுபடுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணாசாலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு புதுச்சேரி பிரதேச மினிலோடு கேரியர் சங்க செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.ஆட்டோ சங்க கவுரவத்தலைவர் தா.முருகன்,சிஐடியு மாவட்ட செயலாளர் கே.முருகன்,துணை தலைவர் ராஜாங்கம்,இணை செயலாளர் சிவக்குமார்,ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சீனிவாசன்,மற்றும் கேரியர் சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம்,செபஸ்டின்,ஜோதிபாசு உள்ளிட்ட திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.
மாதர்  சங்கம் நுhதன போராட்டம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கங்கள்  சார்பில் டீசல் விலைஉயர்வு,சிலிண்டர் வருடத்திற்கு குறைத்துள்ளதை  கண்டித்து  முத்தியாள்பேட்டை மணிகூண்டு எதிரில்  வீதியில் விறகு அடுப்பு வைத்து  சமைக்கும் போராட்டம் நடைபெற்றது.
மாணவர்,மாதர், வாலிபர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் லெனின்துரை,சந்துரு,ரோஜா,ஜெயலச்சுமி,பாஸ்கர்,ஆனந்து,ரஞ்சித் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Photo
புதுச்சேரி,செப்-16
அடிப்படை வசதிகளை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முத்தியால்பேட்டையில் நடைபயணம் நடைபெற்றது.
புதுச்சேரி முத்தியாள்பேட்டை முழுவதும் தேங்கியுள்ள குப்பைகளை உடனே துhர்வாரவேண்டும்.கழிவு நீர்வாய்காளில் ஏற்பட்டுள்ள அடைப்புகை சரிசெய்து கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.ரேஷனில் அனைத்து அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி வழங்கவேண்டும்.சோலை நகர் சமூதாய நலக்கூடம் உடனே திறக்க வேண்டும்.அங்காளம்மன் நகரில் உள்ள சாராயக்கடையை ஊருக்கு வெளியே மாற்ற வேண்டும்.கசாப்புகாரன்தோப்பு பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.முத்தியால்பேட்டை மணிகூண்டு எதிரில் துவங்கிய பிரச்சாரா பயணத்திற்கு சிபிஎம் கிளை செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் நடைபயணத்தை துவக்கி வைத்து பேசினார்.இறுதியாக மாணவர் சங்க செயலாளர் ஆனந்து முடித்து வைத்து பேசினார்.துணை தலைவர் ரஞ்சித் மற்றும் திரளான பொது மக்கள் இப்பிரச்சார பயணத்தில் பங்கேற்றனர்.
Read more...
Sunday, September 16, 2012

டீசல் விலை உயர்வு கேஸ் சிலிண்டர் வெட்டு சில்லரை வர்த்தகத்தில் அந்நியருக்கு அனுமதி பொதுத்துறை பங்குகள் சூறை மக்கள் மீது யுத்தம் நடத்தும் மன்மோகன் அரசுக்கு கடும் கண்டனம் செப். 20 நாடு தழுவிய கிளர்ச்சி எட்டு கட்சிகள் கூட்டாக அறைகூவல்

0 comments
புதுதில்லி, செப். 14-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண் டர் வெட்டு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நிறு வனங்களுக்கு அனுமதி, பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்பனை உள்ளிட்ட ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக செப்டம்பர் 20ம்தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு எட்டு கட்சிகள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. அன்றைய தினம் கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம், சிறை நிரப்பும் போராட்டம் என போராட்டங்களில் ஈடுபடுமாறு அனைத்துப் பகுதி மக்களையும் இந்தக் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.சமாஜ்வாதி கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலுங்குதேசம், பிஜு ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம், அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக கொடூரமான தாக்குதல் தொடுத்து வருகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள் ளது. இதனால் விலைவாசி உயர்வதோடு, விவசாயி களின் சுமையும் கடுமையாக அதிகரிக்கும். குடும்பம் ஒன்றிற்கு ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப் படும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள் ளது. இதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை சந்தை விலையில் இரண்டு மடங்கைவிட கூடுத லாக விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய சூப் பர் மார்க்கெட் சங்கிலி நிறுவனங்களை அனுமதிப்பது என்றும், மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 4 கோடிக்கும் அதிகமானோரும் பெரும் பகுதி நுகர்வோரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.நால்கோ, ஆயில் இந்தியா போன்ற லாபமீட்டும் நவரத்தின பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களை தனியாருக்கு விற்பதென்றும் அரசு முடிவு செய்துள்ளது. இத்தகைய மக்கள் விரோத நடவடிக் கைகளுக்கு எதிராக போர்க்குரல் முழங்குமாறு அனைத்துப் பகுதிமக்களுக்கும் நாங்கள் அறை கூவல் விடுக்கிறோம்.விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைத்துப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ளோர், சிறு கடைக்காரர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த மகத்தான போராட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.தேசபக்த உணர்வுள்ள அனைத்து குடிமக்க ளும் போராட்டத்தில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.மக்களுக்கு மேன்மேலும் சுமையை ஏற்றக் கூடிய, அவர்களது வாழ்வாதாரத்தை தகர்க்கக் கூடிய மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றுபடுவது அவசியமாகும். கடையடைப்பு, மறியல், ஆர்ப்பாட்டம் மற்றும் சிறைநிரப்பும் போராட்டம் என செப்டம்பர் 20ம்தேதி சக்திமிக்க போராட்டத்தை நடத்துமாறு அறை கூவல் விடுக்கிறோம்.இவ்வாறு கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சமாஜ்வாதி கட்சித் தலைவ முலாயம் சிங் யாதவ், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்.டி.தேவகவுடா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர்ரெட்டி, பிஜு ஜனதாதளத் தலைவர் நவீன்பட்நாயக், தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பி.ஜே.சந்திரசூடன்ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
Read more...
Monday, September 10, 2012

துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி சிபிஎம் கண்டனம்

0 comments
துப்பாக்கிச் சூட்டில் மீனவர் பலி  சிபிஎம் கண்டனம்
சென்னை, செப். 10-

கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் பலியாகியுள்ள சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் திங்களன்று மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப் பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ., பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து இடிந்தகரையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இவர்களை கலைக்க போலீசார் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இம்மக்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தோணிசாமி என்ற மீனவர் மாண்டுபோன செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக் கிறது வேதனையளிக்கிறது.

காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டு நடவடிக் கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் தங்களு டைய போராட்டத்தை கைவிட்டு சுமுகமான நிலை ஏற்பட ஒத்துழைக்க வேண்டுமெனவும், அரசும் அமை தியை ஏற்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
Read more...
Monday, September 3, 2012

ஜிப்மர் மருத்துவ சேவை கட்டணத்தை எதிர்த்து சிபிஎம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

0 comments
புதுசசேரி,செப்ட-2
ஜிப்மர் மருத்துவ சேவை கட்டணத்தை எதிர்த்து சிபிஎம் சார்பில் புதுச்சேரி முழுவதும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ள மருத்துவ சேவைக்கட்டணத்தை உடனே திரும்ப பெற வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.புதுச்சேரி  காந்திவீதி நேருவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் கே.முருகன்,ஆர்.ராஜாங்கம்,கமிட்டி உறுப்பினர்கள் மதிவாணன்,சரவணன்,சிவக்குமார்,அழகர்ராஜ்,மணவாளன்,துரைமுருகன்,உள்ளிட்ட திரளானோர் போராரட்டத்தில் பங்கேற்றனர்.
பாகூர் மேற்கு வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமசாமி, செல்வராஜ்,கலியன்,அரிதா° உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
வில்லியனுரில் தென்கோபுரவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் ராமசாமி,பிரதேசக்குழு உறுப்பினர் மணிபாலன்,கமிட்டி உறுப்பினர்கள் ரத்தினவேல்,ராமமூர்த்தி,தியாகராஜன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருபுவனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்த்திற்கு மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார்.செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் அன்புமணி,சங்கர்,ஆவணியப்பன்,கமிட்டி உறுப்பினர்கள் ராமமூர்த்தி,ஆனந்தன்,தட்சணாமூர்த்தி,வடிவேல்,பிரபாகரன் உள்ளிட்ட திராளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.புதுசசேரி முழுவதும் நடைபெற்ற இப்போராட்டத்தில் கருப்பு கொடியுடன் பங்கேற்று முழுக்கமிட்டனர்.
Read more...
Saturday, August 25, 2012

ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி

0 comments
புதுச்சேரி,ஆக-24
ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபயண பிரச்சாரம் நடைபெற்றது.ரொஷன் கடைகளில் ஒற்றை அவியல் அரிசியை உடனே வழங்க வேண்டும்.அத்தியாவசிய உணவு பண்டங்களை தங்குதடையின்றி வழங்கவேண்டும்.பேருந்து கட்டணம்,பால் கட்டணம்,மின்கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.மண்ணனென்னைக்கு பதில் பணம் தரும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்.இயற்கை வளங்களில் ஊழல் செய்துள்ள கிரிமினல் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிiக்கைகளை வலியுறுத்தி இப்பிரச்சாரம் நடைபெற்றது.புதுச்சேரி மதகடிப்பட்டில் நடைபெற்ற நடைபயண பிரச்சாரத்திற்கு சிபிஎம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் செயலாளர் ஆர்.சரவணன் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார்.செயற்குழு உறுப்பினர் எல்.கலிவரதன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,சங்கர்,உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் இப்பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.இப்பிரச்சாரத்தில் மத்திய அரசின் ஊழல்களை அப்பலபடுத்தியும் பேசினார்கள்.மண்ணாடிப்பட்டு கொம்யூன் முழுவதும் இப்பிரச்சாரம் சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
Read more...
Tuesday, August 21, 2012

ஜிப்மரில் கட்டணம் வசூலிப்பதை ஏற்று கொள்ளமுடியாது

0 comments
புதுச்சேரி,தமிழகம்,கேரளம்,ஆந்திரம்,கர்நாடகம் உள்ளிட்ட தென் இந்தியாவிலிருந்து நாள்தோறும் ஐந்தாயிரம் ஏழை எளிய மக்கள் இலவசமாக  ஜிப்மரில் மருத்துவம் பெற்று செல்கின்றனர்.  டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்  7மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதே மத்திய சுகாதாரத்துறை கட்டுபாட்டில் உள்ள ஜிப்மரில் மட்டும் கட்டணம் வசூலிப்பதை ஏற்று கொள்ளமுடியாது. எனவே நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜிப்மர் தன்னாட்சி மசோதாவில்  இலவச மருத்துவம் தொடரும் என்ற உறுதிமொழியை  மீறுவதாக உள்ளது.  எனவே ஜிப்மரின் கட்டண வசூல் சுற்றறிக்கை உடனே திரும்ப பெற வேண்டும்.  50 ஆண்டுகளாக தொடர்ந்து அளிக்கப்படும் இலவச சிகிச்கை தொடரவேண்டும்.  காலியாக உள்ள ஆயிரத்தி 800 காலி பணியிடங்களில் பி,சி பிரிவுகளை  புதுச்சேரி வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.குறைந்த கட்டணத்தில் மருத்துவ கல்வி தொடர வேண்டும்.
Read more...
Wednesday, August 15, 2012

மறியல் போராட்டம்

0 comments
புதுச்சேரி,ஆக-3
உணவு பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த கோரி இடதுசாரிகட்சிகள் சார்பில் புதுச்சேரியில் ஏழு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வரும் உணவு பாதுகாப்பு மசோதாவில் உரிய  திருத்தங்களுடன் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய அரிசி,கோதுமை,மண்ணெண்ணைய் அளவை குறைப்பதை கைவிட வேண்டும்.புதுச்சேரி அரசு இலவச அரிசி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி,அத்தியாவசிய பண்டங்களை ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மறியல்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கும் துறை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஐ தேசிக்குழு உறுப்பினர் நாhரா.கலைநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் செயற்குழு உறுப்பினர் தா.முருகன்,நகரகமிட்டி செயலாளர் பிரபுராஜ்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் நடராஜன்,மதிவாணன்,சிபிஐ நிர்வாகிகள் சலீம்,சேதுசெல்வம் உள்ளிட்ட 20பெண்கள் உட்பட 300பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.முன்னதாக காவல்துறையினரின் தடையை மீறி அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருக்கனுhர்
திருக்கனுhர் பிஎ°என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர் அன்புமணி,சிபிஐ தொகுதி செயலாளர் அருள் உள்ளிட்ட 30பெண்கள் உட்பட 102பேர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவித்தனர்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் கடலுhர் சாலையில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜாங்கம்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் அபிஷேகம்,பார்வர்டு கட்சி நிர்வாகி தர்மராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.சிஐடியு இணை செயலாளர் சிவக்குமார்,ஜெகதீசன்,சிபிஐ நிர்வாகிகள் பூபதி,ஏழுமலை உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 50 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாகூர்
பாகூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம்செயற்குழு உறுப்பினர் நிலவழகன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,சிபிஜ நிர்வாகிகள் கலியமூர்த்தி,மாசிலாமணி உள்ளிட்ட 50 பெண்கள் உட்பட 98பேர்களை காவல்துறை கைது செய்தனர்.
வில்லியனுhர்
வில்லியனுhர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் கீதநாதன் ஆகியயோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் கொம்யூன் செயலாளர் முருகையன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் மணிபாலன்,தெய்வானை,சிபிஜ தொகுதி நிர்வாகிகள் அந்தோனி,பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 65 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்டார் கோவில்
திருவண்டார் கோவில் மத்திய உணவு கிடங்கு முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன்,சிபிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் சரளா ஆகியோர் கூட்டாக  தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,ஆவணியப்பன்,சங்கர்,சிபிஐ நிர்வாகி டி.பி.ரவி உள்ளிட்ட 15 பெண்கள் உட்பட 65 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வட்டசெயலாளர் வின்சென்ட்,சிபிஐ காரைபிரதேச செயலாளர் ராஜேந்திரன் கூட்டாக தலைமை தாங்கினர்.சிபிஎம் பிரதேசக்குழு உறுப்பினர் கலியபெருமாள்,இராமர்,சிபிஐ நிர்வாகிகள் தங்கராசு,முரளி உள்ளிட்ட 100பெண்கள் உட்பட 190 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி முழுவதும் ஏழு மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
Read more...

CPIM Demonstration

0 comments
CPIM Demonstration in front of Ariyankuppam commune office for basic facility development.
Read more...
Wednesday, August 8, 2012

தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற்றிட வழிவகுக்கும் – ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் ஜிப்மர் நிர்வாகத்தின் கட்டண உயர்வை அறிவிப்பைத் ரத்து செய்திடுக

0 comments

பத்திரிகைச் செய்தி

தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் கொள்ளை இலாபம் பெற்றிட வழிவகுக்கும் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கும் ஜிப்மர் நிர்வாகத்தின் கட்டண உயர்வை அறிவிப்பைத் ரத்து செய்திடுக

        1956ல் துவங்கப்பட்ட ஜிப்மர் மருத்துவமனை அனைத்துப் பகுதி மக்களுக்கு தரமான, கட்டணம் இல்லாத மருத்துவ சேவையினை செய்து வந்தது. புதுச்சேரி மற்றும் தமிழக மக்களுக்கு உயிர்காக்கும் மருத்துவமனையாக இயங்கிவருகிறது. இதில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் பங்களிப்பும் மகத்தானதாகும். மேலும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களையும் உருவாக்கி நாட்டிற்கு அர்ப்பணித்து வருகிறது.

      முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றப் போகிறோம் என்ற பெயரில் மத்திய ஆட்சியாளர்களால் சட்டம் இயற்றப்பட்டது. புதுச்சேரி ஜிப்மர் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனச் சட்டம் 2008 இயற்றப்பட்டு ஜுலை 14 முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையை தனியார்மயத்திற்கு தள்ளிவிடும் காங்கிரஸ் தலைமையிலான பாமக, திமுக உள்ளிட்ட கூட்டணி ஆட்சியின் நடவடிக்கையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் இயக்கங்கள், ஜிப்மர் ஊழியர்கள் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் போராட்டக்குழு அமைத்து தொடர்ந்து போராடி வந்தன. மத்திய, மாநில ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த போராட்டமாக ஜிப்மர் மருத்துவமனை பாதுகாப்பு போராட்டம் அமைந்தது. இதன் விளைவாக ஜிப்மர் மருத்துவமனை தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு புதுச்சேரிக்கு வருகை தந்து அனைத்து அரசியல் கட்சிகள், ஜனநாயக இயக்கங்கள் மற்றும் மாநில அரசின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. ஆனாலும் காங்கிரஸ் தலைமையிலான ஜ.மு.கூ அரசும், சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அன்புமணியும் மக்களின் பெருவாரியான கருத்துகளுக்கு மாறாக சட்டம் இயற்ற முற்பட்டது.

      இலவச மருத்துவ சேவை, இலவச மருத்துவக் கல்வி, வேலைவாய்ப்பில் புதுச்சேரி இளைஞர்களுக்கு முன்னுரிமை மற்றும் ஊழியர் நலன் ஆகிய அம்சங்களை உறுதிப்படுத்திட வலியுறுத்தப்பட்டன. இறுதியாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்தால் நடைமுறையில் இருந்துவருகிற மேற்குறிப்பிட்ட அம்சங்களுக்கு குந்தகம் இல்லாமல் தொடர்ந்து பின்பற்றப்படும் என போராட்டக்குழுவிடம் ஆட்சியாளர்களால் உறுதியளிக்கப்பட்டது. ஜிப்மர் நிர்வாகம் 14.07.2012 தேதியிட்ட சுற்றறிக்கையில் 16.07.2012 முதல் அனைத்துவித நோய் கண்டறிதல், அறுவை சிகிச்சை மற்றும் உணவு கட்டணம் என அனைத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கு இணையான கட்டணத்தை உயர்த்தியுள்ளது. மாத வருமான ரூ.2499க்கு மேல் உள்ள அனைவரிடமும் மருத்துவ சேவைக்கான கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிப்மர் நிர்வாகத்தின் இத்தகைய மக்கள் விரோத கட்டண உயர்வு தனியார் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தும் நடவடிக்கையாகும். உயர்த்தியுள்ள மருத்துவ சேவைக்கட்டணத்தை நிர்வாகம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

{p.t.o }
      மத்திய ஆட்சியாளர்களின் நவீன தாரளமயக் கொள்கையின் அமுலாக்கத்தால் சமூகப் பொறுப்புகளில் இருந்து அரசு தன்னை விடுவித்துக்கொள்கிறது. அதன் ஒரு பகுதியாக சுகாதாரம் காசு பணம் உள்ளவர்களுக்குத்தான் என்ற நிலையை உருவாகியுள்ளது.  இத்தகைய தவறான கொள்கையை கைவிட வேண்டும். இலவச மருத்துவ சேவை, இலவச மருத்துவக் கல்வி, புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஊழியர் நலன் ஆகிய முந்தைய நடைமுறை தொடரும் என்று ஜிப்மர் போராட்டக்குழுவிற்கு அளித்த உறுதிமொழியை பின்பற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. மேலும் மாநில மக்கள், அரசியல் மற்றும் ஜனநாயக சக்திகள் நமது ஜிப்மர் மருத்துவமனையை பாதுகாத்திட ஒன்றுபட்டு போராட முன்வரவேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவண்


{வெ. பெருமாள்}
Read more...
Thursday, June 28, 2012

புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெறக்கோரி

0 comments
புதுச்சேரி,ஜூன்-26
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை உடனடியாக திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 கட்டுமான பணிகளில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகள் குறித்து சிபிஜ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.பல்கலைகழகத்தால் 100மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணத் உயர்வை  உடனே திரும்ப பெறவேண்டும்.பல்கலைகழகத்தில் நடந்த மதிப்பெண் மோசடியை கண்டறிந்த ஊழியர் ஜெயராமன் படுகொலை வழக்கை  சிபிஐ  விசாரணைக்கு மாற்றப்பட்டு  இன்னும் குற்றவாலிகளை கண்டுபிடிக்க படவில்லை.எனவே உடணடியாக குற்றவாலிகளை கண்டுபிடிக்கவேண்டும்.பல்கலைகழகத்துக்கு நிலம் ஒதுக்கிய விவசாயிகளின் குடும்பத்தாருக்கு வேலை வழங்க வேண்டும்.புதிய துணைவேந்தரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சின்ன காலாப்பட்டில் உள்ள பல்கலைகழக வாயில் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சி°ட் கட்சியின் உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம்,நிலவழகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.இடைகமிட்டி செயலாளர்கள் சரவணன்,முருகையன்,தமிழ்ச்செல்வன்,பிரபுராஜ்,டிஒய்எப்ஜ பிரதேச செயாளர் ப.சரவணன்,பொருளாளர் ஆர்.சரவணன்,எஸ்எப்ஐ பிரதேச செயலாளர் ஆனந்து மற்றும் பல்கலைகழக மாணவர்கள் இப்போராட்டத்தில் திரளாக பங்கேற்றனர்.
Read more...
Wednesday, June 13, 2012
0 comments
புதுச்சேரி,ஜூன்-13
பாக்கி தொகை வழங்காத கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் காசோலை நகலை எரித்த கரும்பு விவசாயிகள் 70பேர் புதுச்சேரியில் கைது.
 புதுச்சேரி அரசுக்கு சொந்தமான லிங்காரெட்டியார்பாளைய  கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு  கரும்பு வெட்டி அனுப்பி பல மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பாக்கிதொகை வழங்காததை   கண்டித்தும்.காலதாமத தொகைக்கு 14சதவீத வட்டியுடன் பணப்பட்டுவாட செய்யகோரியும்,ஆலை நிர்வாகத்தால் விவசாயிகளுக்கு  சமிபத்தில் வழங்கப்பட்ட காசோலை கணக்கில்  பணம் இல்லாமல்  வங்கிகள் திருப்பி அனுப்பட்டதை கண்டித்து கரும்பு விவசாயிகள் சங்கம்  சார்பில் காசோலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது
புதுச்சேரி சட்டமன்றம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு எல்.ஆர் பாளைய கூட்றவு சர்க்கரை ஆலையின் சங்க  தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.முன்னதாக அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச தலைவர் நிலவழகன் போராட்டத்தை துவக்கிவைத்து பேசினார்.தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க விழுப்புர மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் இராதாகிருஷ்ணன்,புதுச்சேரி அமைப்பாளர் ஆர்.சரவணன்,விவசாயிகள் சங்க பிரதேச செயலாளர் பத்மநாபன்,வி.தொ.ச பிரதேச தலைவர் கலிவரதன் மற்றும் நிர்வாகிகள் சுப்புரமணியன்,துரை,சுப்புரமணி ,ராஜராமன்,சுதாகர்,கருணாகரன் உள்ளிட்ட திரளான கரும்பு விவசாயிகள் இப்போராட்டத்தில்  பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலை எதிரில் இருந்து ஊர்வலமாக வந்த விவசாயிகள் ஆலை நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிட்டவாறு காசோலையின் நகலை சட்டமன்றம் எதிரே  எரிக்க முயன்ற போது  70க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Read more...
Sunday, June 10, 2012

சிபிஎம் இமாலய வெற்றி

0 comments
புதுச்சேரி,ஜூன்-6
மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு சுரண்டி கொண்டு மாற்றந்தாய் மணப்பான்மையுடன் செயல்படுகிறது என்று  மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் குற்றஞ்சாட்டினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் புதுச்சேரி   பிரதேசக்குழு சார்பில்  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அரசியல் விளக்க பொதுக்கூட்டம்  அண்ணாசாலை வைசியாள்வீதி சந்திப்பில் நடைபெற்றது.இப்பொதுக்கூட்டத்திற்கு நகரகமிட்டி செயலாளர் என்.பிரபுராஜ் தலைமை தாங்கினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில்,
நாட்டில் உள்ள 30 மாநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய திட்டக்குழுவுக்கு உள்ளது.தமிழக முதல்வர் சமிபத்தில் மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டு வெளியே வந்த முதல்வர் பத்திரிக்கையாளர்களைகூட சந்திக்காமல் சென்னை வந்தார்.சென்னை வந்த முதல்வர் தமிழகத்தின் வரிவருவாய் அனைத்தையும் மத்திய அரசு எடுத்து செல்கிறது என்று குற்றம்சுமத்தியுள்ளார்.கடந்த 1970 ஆம் ஆண்டிலேயே இந்த குற்றச்சாட்டை மார்க்சி°ட் கட்சி முன்வைத்தது.மாற்றாந்தாய் மணப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது  என்று அப்போது மாநில கட்சிகள் மார்க்சிஸ்ட் கட்சி சொன்னதை கேட்டி இருந்தால் இந்த நிலை இப்போது ஏற்பட்டு இருக்காது.
எனவே மாநில வளர்ச்சிக்கு தேவையான நிதியை பெற மக்களை திரட்டி மாநில அரசுகள் போராட முன்வரவேண்டும்.மாநில அரசு சிக்கனமாக இருக்க வேண்டும் என்று கூறும் மத்திய திட்டகமிஷன் துணை தலைவர்   அவர் பயணம் செய்த ஒரு நாள் செலவு மட்டும் ரூ.1லட்சம்.ஆனால் இவரே கிராமத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.22 க்கு மேல் செலவு செய்பவர்கள் வருமை கோட்டுக்கு மேலே உள்ளவர்கள்  என்று கூறுகிறார்.
நாளோரும் வண்ணமும் பொழுதொருமேனியும் மத்திய மாநில அரசுகள் விலை வாசியை  உயர்த்தி  உழைப்பாளி மக்கள் மீது  தாக்குதல் தொடுத்துவருகிறது.மத்தியில் 3ஆண்டுகாள மான்மோகன்சிங் ஆட்சியும்,மாநிலத்தில் ஒரு ஆண்டுகால நிறைவு செய்துள்ள என்.ஆர் காங்கிரஸ் ஆட்சியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து செயல்படுகிறது.இன்றைக்கு ஊழலில் சிக்கி தவிக்கும் மத்திய அரசு தங்களை காப்பாற்றி கொள்ள விலைவாசி உயர்வை மக்கள் தலையில் உயர்த்தி வருவது கண்டனத்துகுறியது.
 
சிபிஎம் இமாலய வெற்றி
இன்றைக்கு தாராளமய கொள்கைகளை கடைபிடித்துவரும் காங்கிரஸ் ஆட்சியானாலும்,முந்தைய பாஜக ஆட்சியானலும் மக்கள் விரோத கொள்கைகளை கடைபிடித்ததின் விலைவு இமாச்சல்பிரதேசத்தில் சமிபத்தில் நடந்த மேயர்,துனைமேயர் தேர்தலில் தேல்வியைசந்தித்துள்ளனர்.அங்கு மார்க்சிஸ்ட் கட்சி மக்களின் அமோக ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளது.அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த வெற்றி தொடரும்.எனவே இந்தியாவிற்கு தேவை இடது முன்னனி பாதை அந்த பாதையை புதுச்சேரியில் ஏற்படுத்தவும்,புதிய தாரளமய கொள்கைகளை எதிர்த்து போராட முன்வர  வேண்டும் என்று குணசேகரன் கேட்டுகொண்டார்.
முன்னதாக கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர்கள் ராஜாஙகம்,நிலவழகன்,முருகன்,கலிவரதன்,சுமதி ஆகியோர் பேசினார்கள்.இப்போதுக்கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Read more...
Friday, June 1, 2012

புதுச்சேரி இடது சாரிகட்சிகள் சார்பில் நடந்த மறியல்

0 comments
புதுச்சேரி,மே-31
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகட்சிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் புதுச்சேரியில் 450பேர் கைது செய்யப்பட்டனர்.
காங்கிர° தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50பைசா உயர்த்தியதை கண்டித்தும்.விலை உயர்வை உடனே திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சி°ட் கட்சி,இந்திய கம்யூனி°ட் கட்சி,பார்வர்டு பிளாக் உள்ளிட்ட இடது சாரிகட்சிகள் சார்பில் நாடு தழுவிய மாறியல் போராட்டத்திற்கு வியாழனன்று( மே-31) ல்அழைப்பு விடுக்கப்பட்டது.அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இப்போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி அண்ணாசாலை அருகில் இருந்து துவங்கிய மறியல் போராட்டத்திற்கு சிபிஐ மாநில செயலாளர் விசுவநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் பெருமாள்,பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் முத்து ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.சிபிஎம் செற்குழு உறுப்பினர்கள் தா.முருகன்,நிலவழகன்,ராஜாங்கம்,ராமசாமி,கே.முருகன்,ராமச்சந்திரன்,இடைகமிட்டி செயலாளர்கள் முருகையன்,லெனின்துரை,பிரபுராஜ்,சிபிஐ மாநில நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சலீம்,கீதநாதன் ,அபிஷேகம்,முருகன்,சரளா,உள்ளிட்ட இடதுசாரிகட்சிகளின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக அண்ணாசிலையிலிருந்து ஊர்வளமாக வந்து காமராஜர் சிலை எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40பெண்கள் உட்பட  320பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இதேப்போல் பாகூர் தபால் நிலையம் எதிரில் நடந்த மறியலுக்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.பிரதேச குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்  உள்ளிட்ட  60பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.மதகடிப்பட்டில் நடந்த மறியலுக்கு சிபிஎம் செயற்குழு உறுப்பினர் கலிவரதன் தலைமை தாங்கினார்.கொம்யூன்செயலாளர் சரவணன்,பிரதேசக்குழு உறுப்பினர்கள் உலகநாதன்,அன்புமணி,ஆவணியப்பன்,சங்கர்,உள்ளிட்ட 70 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வர்த்தக நிறுவனங்கள் அடைப்பு
இப்போராட்டத்தை யொட்டி புதுச்சேரி நேருவீதி,காந்தி வீதி, அண்ணாசாலை,சின்னகடை,முத்தியாள்பேட்டை,நெல்லித்தோப்பு,முதலிhயர் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.புதுச்சேரியில் பெரும்பாளான இடங்களில் சாலைகளில் மக்கள் கூட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது .

ஆட்டோ ஓட்டுநர்கள்  வேலைநிறுத்தம்
சிஐடியு,ஏஐடியுசி,தொமுச,புதுச்சேரி மாநில ஆட்டோ சங்கம் உள்ளிட்ட ஆட்டோ சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றதால் புதுச்சேரியில் 80சதவீத ஆட்டோக்கள் இயங்வில்லை.காமராஜர் சிலை எதிரே சிஐடியு ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கத்தின் பிரதேச பொதுச்செயலாளர் சீனுவாசன்,ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் மறியல் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானார்கள்.
Read more...

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மே-31ல் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்த இடதுசாரிகட்சிகள் முடிவு

0 comments
புதுச்சேரி,மே-26
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மே-31ல் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடத்த இடதுசாரிகட்சிகள் முடிவு.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலகுழு அலுவலகத்தில் இடதுசாரிகட்சி; தலைவர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிபிஜ மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன்,தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,நிர்வாகக்குழு உறுப்பினர் கீதநாதன்,சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராஐhங்கம்,பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் முத்து,புரச்சிகர சோஸலிஸ்ட் கட்சி தலைவர் லெனின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் இக்கூட்டத்திற்கு பிறகு இக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியது வருமாறு,
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பாராளுமன்ற கூட்டம் முடிந்த பிறகு வரலாறு கானதா வகையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.7.50பைசா உயர்த்தியுள்ளது.இந்த விலை ஏற்றம் 39வது முறையாக மககள் தலையில் பேரிடியாக அமைந்துள்ளது.அமேரிக்கா நாட்டின் பொருளாளதார பின்டைவில் இருந்து அந்நாட்டை காப்பாற்றவே இந்த விலைஏற்றத்தை மத்திய மன்மோகன்சிங் அரசு மக்கள் தலையில் சுமத்தியுள்ளது கண்டனத்துகுறியது.மேலும் இந்த விலை உயர்வை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி நியாயபடுத்தும் வகையில் கூறியிருப்பது கண்டனத்திற்குறியது.எனவே இந்த விலைஉயர்வை ரத்து செய்யக்கோரி மே 29,30 ஆகிய இருதினங்களில் புதுச்சேரி முழுவதும் 40மையங்களில் தெருமுனைக்கூட்டமும்,மே 31ல் மறியல் போராட்டமும் நடத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என இக்கட்சி தலைவர்கள் கேட்டுகொண்டனர்.
Read more...

உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வை உடனே திரும்பபெறக்கோரி

0 comments
புதுச்சேரி,மே-24
உயர்த்திய பெட்ரோல் விலை உயர்வை உடனே  திரும்பபெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் திடீர் பெட்ரோல் உயர்வை உடனடியாக திரும்பபெறவேண்டும்.பெட்ரோல் விலையை நிர்னைக்கும் உரிமையை அரசின் கட்டுபாட்டிலேயே மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
பாகூர்
பாகூர் மேற்குவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேசக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன்,சரவணன்,கமிட்டி உறுப்பினர்கள் செல்வராசு,ராமசாமி,சேகர்,கலியன் உள்ளிட்ட 40பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
கரிகலாம்பாக்கம்
கரிகலாம்பாக்கம் நான்கு முனைசந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிபிஎம் வில்லியனூர் கொம்யூன் செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார்.கமிட்டி உறுப்பினர் ரத்தினவேலு, வாலிபர் சங்க நிர்வாகிகள் சண்முகம்,அரி,ராமமூர்த்தி உள்ளிட்ட 30பேரை காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.
புதுச்சேரி நகரம்
புதுச்சேரி நேருவீதி காந்திவீதி சந்திப்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகர கமிட்டி செயலாளர் பிரபுராஜ் தலைமை தாங்கினார்.சிபிஎம் பிரதேச செயலாளர் வெ.பெருமாள்,செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் கமிட்டி உறுப்பினர்கள் மதிவானன்,மது,சரவணன், உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரி,மே-24
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ சங்கம் சார்பில் புதுச்சேரியில் துhக்கில் தொங்கும் நுhதன போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.7.50 பைசா உயர்த்தியதை கண்டித்தும் ,உயர்த்திய கட்டணத்தை உடனடியாக திரும்பபெறவேண்டும் என வலியுறுத்தி  ஆட்டோ ஓட்டுநர்கள் துhக்கு போட்டு கொள்ளும்  நுhதனபோராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடந்த இப்போராட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க பிரதேச செயலாளர் ஜி.சினிவாசன் தலைமை தாங்கினார்.சிஐடியு மாவட்ட துணை தலைவர் நிலவழகன் கண்டன உரையை துவக்கிவைத்து வைத்து பேசினார்.மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.ஆட்டோ சங்க நிர்வாகிகள் மது,மதிவானன்,பழனிபாலன்,பக்கிரி,முருகன் உள்ளிட்ட திரளான ஆட்டோ ஒட்டுநர்கள் இந்நுhதன போராட்டத்தில் பங்கேற்றனர்.முன்னதாக துhக்கில் தொங்கியவாறு  மத்திய அரசை எதிர்த்து முழக்கமிட்டது பொதுமக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
Read more...
Saturday, May 19, 2012

பால் உற்பத்தியை பெருக்க உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 ஊக்க தொகை

0 comments
புதுச்சேரி,மே-18
பால் உற்பத்தியை பெருக்க உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி பிரதேச பால் உற்பத்தியாளர்கள் சங்க அமைப்பு கூட்டம் கரிகலாம்பாக்கத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்க பிரதேச பொருளாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைவர் நிலவழகன்,செயலாளர் எ°.பத்மநாபன்,நிர்வாகி முருகையன் உள்ளிட்ட திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தில்  தமிழக பால் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் கே.முகமதுஅலி கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசியது வருமாறு,
கடந்த ஆண்டு பால் உற்பத்தியாளர்கள் 8நாள் தொடர் போராட்டம் நடத்தியதால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியது.இன்றைக்கு நாள் ஒன்றுக்கு 1கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.விவசாயத்திற்கு அடுத்தது இத்தொழிலில் 15லட்சம் குடும்பங்கள் ஈடுப்பட்டுள்ளனர்.எனவே பால் உற்பத்தியாளர்கள் நட்டமில்லமால் இத்தொழிலை நடத்த, கால்நடை தீவனங்களுக்கு அரசு 50சதவீதம் மாண்யம் அளிப்பதோடு,லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 ஊக்கதொகை அளிக்கவேண்டும்.அதேப்போல் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் ,மருந்துகளும்  கிராமங்களில் இருக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது இவ்வாறு முகமது அலி பேசினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இந்த அமைப்பு குழு கூட்டத்தில் சங்கத்தின் புதுசசேரி பிரதேசத்தின் கன்வீனராக ஜி.ராமசாமியும், முத்து பொருளாளராகவும்,ராஜாங்கம்,கிருஷ்ணன்,தனிகா,ஜீவா,முருகையன்,ஜயப்பன்,சங்கர்,முத்து உள்ளிட்ட 11பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் ஜூன் முதல் வாரத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை அடங்கிய மனுவை புதுச்சேரி அரசிடம் கொடுப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Read more...
 
cpim-puducherry © 2011 DheTemplate.com & Main Blogger. Powered by www.sigaramevents.com